← செய்திகளுக்குத் திரும்பு
நீதிமான்கள் சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்
படத்தைப் பதிவிறக்கு

நீதிமான்கள் சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்

“ஞாயிற்றுக்கிழமை, 6 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள். நீதிமொழிகள் 28:1 * மக்களையும், உங்களைச் சுற்றி இருப்பவைகளையும் பார்த்து நீங்கள் பயப்படுகிறீர்களா?* கர்த்தருடையப் பார்வையிலும் மற்றவர்களுடையப் பார்வையிலும் சரியாக இல்லாமல் இருப்பது பயத்தின் காரணங்களில் ஒன்று. அப்போஸ்தலர் புத்தகத்தின், 4-ம் அதிகாரத்தில், பேதுருவும் யோவானும் ஆலோசனைச் சங்கத்தின் முன் தைரியமாக நிற்பதைப் பற்றி படிக்கிறோம். அதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்படியாமல் இயேசுவின் போதனைகளைப் பரப்பியதாக பிரதான ஆசாரியர்களால் குற்றம் சாட்டப்பட்டப் போதிலும், பேதுருவும் யோவானும் முடவனைக் குணப்படுத்துவதன் மூலம் இயேசுவின் அற்புதம் செய்யும் வல்லமையை வெளிப்படுத்தினர். இயேசுவின் நாமத்தில் பிரசங்கிப்பதை நிறுத்தும்படி ஆலோசனைச் சங்கம் அவர்களுக்கு கட்டளையிட்டது. என்றாலும், அவர்கள் இயேசுவின் சத்தியத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டு, மக்களைவிட இயேசுவுக்குக் கீழ்ப்படிவதுதான் முக்கியம் என்று தைரியமாக பறைசாற்றினார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவிற்காக உறுதியாக இருந்து சிங்கத்தைப் போன்ற தைரியத்தை வெளிப்படுத்தினார்கள். * இயேசுவை நம்பாத அல்லது அவருக்கு எதிராக இருப்பவர்கள்ல் நீங்களும் மிரட்டப்படலாம்.* மக்கள் உங்களை அநியாயமாகக் குற்றம் சாட்டி, இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துக் கொள்வதில் இருந்து உங்களைத் தடுக்கலாம், ஆனால் பயப்பட வேண்டாம்.* நீங்கள் தனியாக இல்லை என்பதால் தைரியமாக இருங்கள்.* தொடர்ந்து நீதிமானாய் நடந்துக் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவியானவர் உங்களை சிங்கம் போன்ற பலத்தாலும் தைரியத்தாலும் நிரப்புவார்.* எதுவும் உங்களை எந்த வகையிலும் சேதப்படுத்தாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தொடர்ந்து நீதியான வாழ்க்கையை வாழவும், என் எதிரிகளுக்கு முன்பாக தைரியமாகவும் பயமின்றி இருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள். நீதிமொழிகள் 28:1 * மக்களையும், உங்களைச் சுற்றி இருப்பவைகளையும் பார்த்து நீங்கள் பயப்படுகிறீர்களா?* கர்த்தருடையப் பார்வையிலும் மற்றவர்களுடையப் பார்வையிலும் சரியாக இல்லாமல் இருப்பது பயத்தின் காரணங்களில் ஒன்று. அப்போஸ்தலர் புத்தகத்தின், 4-ம் அதிகாரத்தில், பேதுருவும் யோவானும் ஆலோசனைச் சங்கத்தின் முன் தைரியமாக நிற்பதைப் பற்றி படிக்கிறோம். அதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்படியாமல் இயேசுவின் போதனைகளைப் பரப்பியதாக பிரதான ஆசாரியர்களால் குற்றம் சாட்டப்பட்டப் போதிலும், பேதுருவும் யோவானும் முடவனைக் குணப்படுத்துவதன் மூலம் இயேசுவின் அற்புதம் செய்யும் வல்லமையை வெளிப்படுத்தினர். இயேசுவின் நாமத்தில் பிரசங்கிப்பதை நிறுத்தும்படி ஆலோசனைச் சங்கம் அவர்களுக்கு கட்டளையிட்டது. என்றாலும், அவர்கள் இயேசுவின் சத்தியத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டு, மக்களைவிட இயேசுவுக்குக் கீழ்ப்படிவதுதான் முக்கியம் என்று தைரியமாக பறைசாற்றினார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவிற்காக உறுதியாக இருந்து சிங்கத்தைப் போன்ற தைரியத்தை வெளிப்படுத்தினார்கள். * இயேசுவை நம்பாத அல்லது அவருக்கு எதிராக இருப்பவர்கள்ல் நீங்களும் மிரட்டப்படலாம்.* மக்கள் உங்களை அநியாயமாகக் குற்றம் சாட்டி, இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துக் கொள்வதில் இருந்து உங்களைத் தடுக்கலாம், ஆனால் பயப்பட வேண்டாம்.* நீங்கள் தனியாக இல்லை என்பதால் தைரியமாக இருங்கள்.* தொடர்ந்து நீதிமானாய் நடந்துக் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவியானவர் உங்களை சிங்கம் போன்ற பலத்தாலும் தைரியத்தாலும் நிரப்புவார்.* எதுவும் உங்களை எந்த வகையிலும் சேதப்படுத்தாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தொடர்ந்து நீதியான வாழ்க்கையை வாழவும், என் எதிரிகளுக்கு முன்பாக தைரியமாகவும் பயமின்றி இருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.