வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும். நீதிமொழிகள் 13:4 * ஒருவர் தன்னுடையச் செயல்களில், குறிப்பிட்ட நோக்கத்தோடு, கவனமாக, தொடர்ந்து செயல்படுவதன் பண்புதான் விடாமுயற்சி என்று குறிப்பிடப்படுகிறது.* ஒரு இலக்கை அடைய, ஒரு குறிப்பிட்ட வேலையை முடிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையைத் தொடர நிலையான மற்றும் நேர்மையான முயற்சியை இது முற்றிலும் உள்ளடக்குகிறது. வேதாகமத்தில் உள்ள நெகேமியாவின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர் ஒரு குறிக்கோளை நோக்கிச் செயல்படும் மனிதராக நாம் பார்க்கலாம். பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டாவுக்கு பானபாத்திரக்காரராக சேவை செய்வதற்கான அரசாங்க பதவியில் நெகேமியா ஆசீர்வதிக்கப்பட்ட போதிலும், அவர் இடிந்துப்போன எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுவதற்கு மிகவும் பாரத்தோடு காணப்பட்டார், அதற்காக உபவாசித்து ஜெபித்தார். எருசலேமின் உடைந்த சுவர்களை மீண்டும் கட்டுவதற்கு ராஜாவிடம் அனுமதியையும், பொருட்களையும் பெற்று, எருசலேமுக்குச் சென்று, அங்கு இருந்த அனைவரையும் கூட்டி, வேலையைத் தொடங்கினார். எதிரிகளின் பரியாசம் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், நெகேமியாவும் அவருடைய சக ஊழியர்களும் விடாமுயற்சியோடு வேலையில் உறுதியாக இருந்தனர். சுவர்கள் மீண்டும் கட்டப்பட்டன, நகரம் பாதுகாக்கப்பட்டது, கர்த்தரின் மகிமை மீட்டெடுக்கப்பட்டது. நெகேமியாவின் கதை செங்கலும், இயந்திரமும் பற்றியது மட்டுமல்ல; அசைக்க முடியாத விசுவாசத்தாலான விடாமுயற்சிக்கு இது ஒரு சான்றாகும். * விடாமுயற்சிக்கு உங்கள் நேரம், பலம் மற்றும் செல்வங்களை கர்த்தரின் நோக்கத்துடன் ஒத்துப்போகும் செயல்களில் செலவிடுவது மிகவும் அவசியம்.* உங்கள் வாழ்க்கைக்கான கர்த்தரின் திட்டத்தைப் பற்றி நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?* அவற்றைப் பின்தொடர்வதில் நீங்கள் எவ்வளவு குறிப்பாக இருக்கிறீர்கள்? * விடாமுயற்சி என்ற குணத்தை கர்த்தர் தருகிற பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்.* அவருடைய பலம் மற்றும் வழிகாட்டுதலில் சாய்ந்து, சவால்கள் வந்தாலும் உறுதியுடன் இருங்கள்.* திருப்தியான வாழ்க்கையைப் பெற்றுக் கொள்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் செய்யும் எல்லாவற்றிலும் விடாமுயற்சியுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது;...
“நீதிமொழிகள் 13:4 * ஒருவர் தன்னுடையச் செயல்களில், குறிப்பிட்ட நோக்கத்தோடு, கவனமாக, தொடர்ந்து செயல்படுவதன் பண்புதான் விடாமுயற்சி என்று குறிப்பிடப்படுகிறது.* ஒரு இலக்கை அடைய, ஒரு குறிப்பிட்ட வேலையை முடிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையைத் தொடர நிலையான மற்றும் நேர்மையான முயற்சியை இது முற்றிலும் உள்ளடக்குகிறது. வேதாகமத்தில் உள்ள நெகேமியாவின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர் ஒரு குறிக்கோளை நோக்கிச் செயல்படும் மனிதராக நாம் பார்க்கலாம். பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டாவுக்கு பானபாத்திரக்காரராக சேவை செய்வதற்கான அரசாங்க பதவியில் நெகேமியா ஆசீர்வதிக்கப்பட்ட போதிலும், அவர் இடிந்துப்போன எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுவதற்கு மிகவும் பாரத்தோடு காணப்பட்டார், அதற்காக உபவாசித்து ஜெபித்தார். எருசலேமின் உடைந்த சுவர்களை மீண்டும் கட்டுவதற்கு ராஜாவிடம் அனுமதியையும், பொருட்களையும் பெற்று, எருசலேமுக்குச் சென்று, அங்கு இருந்த அனைவரையும் கூட்டி, வேலையைத் தொடங்கினார். எதிரிகளின் பரியாசம் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், நெகேமியாவும் அவருடைய சக ஊழியர்களும் விடாமுயற்சியோடு வேலையில் உறுதியாக இருந்தனர். சுவர்கள் மீண்டும் கட்டப்பட்டன, நகரம் பாதுகாக்கப்பட்டது, கர்த்தரின் மகிமை மீட்டெடுக்கப்பட்டது. நெகேமியாவின் கதை செங்கலும், இயந்திரமும் பற்றியது மட்டுமல்ல; அசைக்க முடியாத விசுவாசத்தாலான விடாமுயற்சிக்கு இது ஒரு சான்றாகும். * விடாமுயற்சிக்கு உங்கள் நேரம், பலம் மற்றும் செல்வங்களை கர்த்தரின் நோக்கத்துடன் ஒத்துப்போகும் செயல்களில் செலவிடுவது மிகவும் அவசியம்.* உங்கள் வாழ்க்கைக்கான கர்த்தரின் திட்டத்தைப் பற்றி நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?* அவற்றைப் பின்தொடர்வதில் நீங்கள் எவ்வளவு குறிப்பாக இருக்கிறீர்கள்? * விடாமுயற்சி என்ற குணத்தை கர்த்தர் தருகிற பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்.* அவருடைய பலம் மற்றும் வழிகாட்டுதலில் சாய்ந்து, சவால்கள் வந்தாலும் உறுதியுடன் இருங்கள்.* திருப்தியான வாழ்க்கையைப் பெற்றுக் கொள்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் செய்யும் எல்லாவற்றிலும் விடாமுயற்சியுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

