← செய்திகளுக்குத் திரும்பு
ஆத்துமாவை அடக்கி அமைதியாக இருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

ஆத்துமாவை அடக்கி அமைதியாக இருங்கள்.

“திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தாயின் பால் மறந்த குழந்தையைப் போல, நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது. சங்கீதம் 131:2 1 சாமுவேல் புத்தகத்தில், கர்த்தருக்கு முன்பாக அடக்கமாகவும், அமைதியாகவும் இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த கதையை நாம் படிக்கலாம். விசுவாசமுள்ள பெண்ணான அன்னாளின் எழுச்சியூட்டும் கதையை அது. பல வருடங்களாக மனவேதனையையும், ஏமாற்றத்தையும் சந்தித்தப் போதிலும், அன்னாள் கர்த்தர் மீது வைத்திருந்த அசைக்க முடியாத விசுவாசமும், அவளுடைய உறுதியான ஜெபங்களும் சோதனைகளுக்கு மத்தியில் அமைதியைக் காத்துக் கொள்வதற்கான மதிப்புமிக்க பாடத்தை நமக்குக் கற்பிக்கின்றன. அன்னாள் மலட்டுத்தன்மையினிமித்தம் குழந்தை இல்லாததால் மிகவும் வேதனையோடு காணப்பட்டாள். இந்த மலட்டுத்தன்மை அவர்களது கலாச்சாரத்தில் பெரும் அவமானமாக கருதப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், அவள் ஆலயத்தில் வந்து அமைதியாக ஜெபிக்கும்போது, அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை. ஆசாரியன் எலி அவளைப் பார்த்து, அவள் குடித்து வெறித்திருப்பதாக நினைத்தார். ஆனால் அதன்பிறகு அவளுடைய மனக்கிலேசத்தை உணர்ந்த அவர், அவளை ஆசீர்வதித்து, சமாதானமாக செல்ல ஊக்கப்படுத்தினார். * மன அழுத்த சூழ்நிலைகளில், அமைதியை இழந்து, பதட்டத்தோடு சத்தமிடுவது எளிது; பெரும்பாலான மக்கள் இப்படிச் செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம்.* ஆனால் கடினமான சூழ்நிலைகளில் அடக்கமாகவும் அமைதியாகவும் இருப்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல.* அன்னாள் இந்த குணத்தின் ஒரு சிறந்த உதாரணம். மேலும் எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக அமைதியாக இருக்கும் நபர்களுக்கு கர்த்தர் எவ்வாறு வெகுமதி அளிக்கிறார் என்பதை இங்கு தெரிந்துக் கொள்கிறோம். * ஆம்! கர்த்தர் அவளுடைய ஜெபங்களுக்குப் பதிலளித்து ஒரு மகனை கொடுத்தார். அந்த சிறுவன் வளர்ந்து இஸ்ரவேலின் தலைசிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவராக மாறினார்.* நீங்களும், கர்த்தரின் உதவியை நாடி இந்த தெய்வீக குணத்தை வளர்த்து, உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை நம்பி எல்லா சூழ்நிலைகளிலும் அடக்கமாகவும், அமைதியாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தாயின் பால் மறந்த குழந்தையைப் போல, நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது. சங்கீதம் 131:2 1 சாமுவேல் புத்தகத்தில், கர்த்தருக்கு முன்பாக அடக்கமாகவும், அமைதியாகவும் இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த கதையை நாம் படிக்கலாம். விசுவாசமுள்ள பெண்ணான அன்னாளின் எழுச்சியூட்டும் கதையை அது. பல வருடங்களாக மனவேதனையையும், ஏமாற்றத்தையும் சந்தித்தப் போதிலும், அன்னாள் கர்த்தர் மீது வைத்திருந்த அசைக்க முடியாத விசுவாசமும், அவளுடைய உறுதியான ஜெபங்களும் சோதனைகளுக்கு மத்தியில் அமைதியைக் காத்துக் கொள்வதற்கான மதிப்புமிக்க பாடத்தை நமக்குக் கற்பிக்கின்றன. அன்னாள் மலட்டுத்தன்மையினிமித்தம் குழந்தை இல்லாததால் மிகவும் வேதனையோடு காணப்பட்டாள். இந்த மலட்டுத்தன்மை அவர்களது கலாச்சாரத்தில் பெரும் அவமானமாக கருதப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், அவள் ஆலயத்தில் வந்து அமைதியாக ஜெபிக்கும்போது, அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை. ஆசாரியன் எலி அவளைப் பார்த்து, அவள் குடித்து வெறித்திருப்பதாக நினைத்தார். ஆனால் அதன்பிறகு அவளுடைய மனக்கிலேசத்தை உணர்ந்த அவர், அவளை ஆசீர்வதித்து, சமாதானமாக செல்ல ஊக்கப்படுத்தினார். * மன அழுத்த சூழ்நிலைகளில், அமைதியை இழந்து, பதட்டத்தோடு சத்தமிடுவது எளிது; பெரும்பாலான மக்கள் இப்படிச் செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம்.* ஆனால் கடினமான சூழ்நிலைகளில் அடக்கமாகவும் அமைதியாகவும் இருப்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல.* அன்னாள் இந்த குணத்தின் ஒரு சிறந்த உதாரணம். மேலும் எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக அமைதியாக இருக்கும் நபர்களுக்கு கர்த்தர் எவ்வாறு வெகுமதி அளிக்கிறார் என்பதை இங்கு தெரிந்துக் கொள்கிறோம். * ஆம்! கர்த்தர் அவளுடைய ஜெபங்களுக்குப் பதிலளித்து ஒரு மகனை கொடுத்தார். அந்த சிறுவன் வளர்ந்து இஸ்ரவேலின் தலைசிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவராக மாறினார்.* நீங்களும், கர்த்தரின் உதவியை நாடி இந்த தெய்வீக குணத்தை வளர்த்து, உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை நம்பி எல்லா சூழ்நிலைகளிலும் அடக்கமாகவும், அமைதியாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.