சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1 யோவான் 4:1 * பலதரப்பட்ட தன்மைகள் மற்றும் முரண்பட்ட கருத்துக்கள் நிறைந்த உலகில், பகுத்தறியக்கூடிய ஞானம் மிகவும் முக்கியமானது.* கர்த்தருடையப் பிள்ளைகளாகிய நாம் எல்லாவற்றையும் நம்புவதற்கு முன் ஆவிகளின் உண்மைத்தன்மையைக் கண்டெறிய அவற்றைச் சோதித்தறிவது மிகவும் முக்கியமானதாகும். அப்போஸ்தலர் 17 இல் குறிப்பிடப்பட்டுள்ள பெரோயா பட்டணத்தார் பகுத்தறிவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அப்போஸ்தலனாகிய பவுலும் அவருடைய சிநேகிதர்களும் நற்செய்தியைப் பிரசங்கித்தபோது, பெரோயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அதை அவர்கள் கண்மூடித்தனமாக நம்பிவிடவில்லை. மாறாக, அவர்கள் வேதவசனத்தை ஆராய்ந்துப் பார்த்தார்கள். பவுல் அறிவித்தது கர்த்தருடைய வார்த்தையுடன் ஒத்துப்போகிறதா என்பதை சரிபார்க்க அவர்கள் தினமும் வேதவசனங்களை ஆராய்ந்தார்கள். யார் அதை பிரசங்கிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், செய்தி வேத வசனத்தோடு ஒத்துப்போவது மிக முக்கியமானது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். * நவீன விசுவாசிகளாகிய நாம் பெரோயா மக்களின் பகுத்தறிவு உணர்வைப் பின்பற்ற அழைக்கப்படுகிறோம்.* உலகம் எண்ணற்ற கருத்துகளால் நம்மைத் தாக்குகிறது, ஒவ்வொன்றும் அவற்றைப் புரிந்துகொள்வதற்கான பல முறைகளையும் வைத்திருக்கின்றன .* இருப்பினும், இந்த கருத்துகளை வேதத்தின் நித்திய உண்மைகளுக்கு நேராக பகுத்தறிவது நமது கடமையாகும். * நமது பகுத்தறிவு கர்த்தரின் சத்தியத்தை நேசிக்கிறதிலும், நம்முடைய நம்பிக்கை அவருடைய வெளிப்பாட்டுடன் ஒத்துப்போகிறதை நாம் விரும்புகிறவர்களாயும் இருக்க வேண்டும்.* இதை ஒரு தொடர் பழக்கமாக வைத்துக் கொண்டால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எதிரியின் எல்லாப் பொய்களையும் அடையாளம் கண்டு விலகி நிற்கும் கிருபையையும் பகுத்தறிவின் வரத்தையும் எனக்குக் தந்தருளும். ஆமென்.
நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள்...
“1 யோவான் 4:1 * பலதரப்பட்ட தன்மைகள் மற்றும் முரண்பட்ட கருத்துக்கள் நிறைந்த உலகில், பகுத்தறியக்கூடிய ஞானம் மிகவும் முக்கியமானது.* கர்த்தருடையப் பிள்ளைகளாகிய நாம் எல்லாவற்றையும் நம்புவதற்கு முன் ஆவிகளின் உண்மைத்தன்மையைக் கண்டெறிய அவற்றைச் சோதித்தறிவது மிகவும் முக்கியமானதாகும். அப்போஸ்தலர் 17 இல் குறிப்பிடப்பட்டுள்ள பெரோயா பட்டணத்தார் பகுத்தறிவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அப்போஸ்தலனாகிய பவுலும் அவருடைய சிநேகிதர்களும் நற்செய்தியைப் பிரசங்கித்தபோது, பெரோயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அதை அவர்கள் கண்மூடித்தனமாக நம்பிவிடவில்லை. மாறாக, அவர்கள் வேதவசனத்தை ஆராய்ந்துப் பார்த்தார்கள். பவுல் அறிவித்தது கர்த்தருடைய வார்த்தையுடன் ஒத்துப்போகிறதா என்பதை சரிபார்க்க அவர்கள் தினமும் வேதவசனங்களை ஆராய்ந்தார்கள். யார் அதை பிரசங்கிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், செய்தி வேத வசனத்தோடு ஒத்துப்போவது மிக முக்கியமானது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். * நவீன விசுவாசிகளாகிய நாம் பெரோயா மக்களின் பகுத்தறிவு உணர்வைப் பின்பற்ற அழைக்கப்படுகிறோம்.* உலகம் எண்ணற்ற கருத்துகளால் நம்மைத் தாக்குகிறது, ஒவ்வொன்றும் அவற்றைப் புரிந்துகொள்வதற்கான பல முறைகளையும் வைத்திருக்கின்றன .* இருப்பினும், இந்த கருத்துகளை வேதத்தின் நித்திய உண்மைகளுக்கு நேராக பகுத்தறிவது நமது கடமையாகும். * நமது பகுத்தறிவு கர்த்தரின் சத்தியத்தை நேசிக்கிறதிலும், நம்முடைய நம்பிக்கை அவருடைய வெளிப்பாட்டுடன் ஒத்துப்போகிறதை நாம் விரும்புகிறவர்களாயும் இருக்க வேண்டும்.* இதை ஒரு தொடர் பழக்கமாக வைத்துக் கொண்டால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எதிரியின் எல்லாப் பொய்களையும் அடையாளம் கண்டு விலகி நிற்கும் கிருபையையும் பகுத்தறிவின் வரத்தையும் எனக்குக் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

