ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான். நீதிமொழிகள் 11:17. “தயை” என்ற சொல்லை அனுதாபம், அக்கறை மற்றும் இரக்கம் காட்டுதல் என்று சொல்லலாம். இரக்கம் காட்டுவது என்பது நல்லெண்ணத்தோடு இருப்பது, அனுதாபம் காட்டுவது மற்றும் பிறருடைய துன்பத்தில் எதையும் எதிர்பாராமல் உதவிச் செய்வது போன்றவைகளாகும். கப்பர்நகூம் பட்டணத்தில், ஒரு மனிதன் திமிர்வாதத்தினால் படுக்கையில் இருந்தான். இயேசு தங்கள் ஊருக்கு வந்திருக்கிறார் என்பதை அவருடைய நண்பர்கள் அறிந்ததும், அவனைக் குணப்படுத்துவதற்காக இயேசுவிடம் படுக்கையோடே கொண்டுச் செல்ல முடிவு செய்தனர். அவர்கள் இயேசு பேசிக்கொண்டிருந்த வீட்டிற்கு வந்தபோது, ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல் இருந்தனர். என்றாலும், அவர்கள் தங்கள் நண்பன் குணமடைய சில அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தனர். அவர்கள் வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள். அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, இயேசு அந்த திமிர்வாதக்காரனைக் குணப்படுத்தினார், அவன் இயேசுவைத் துதித்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் சென்றான். திமிர்வாதக்காரனின் நண்பர்கள் காட்டின இரக்கத்தின் விளைவை இந்தக் கதை எடுத்துக்காட்டுகிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. ஒருவரின் இரக்கம் உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய நேரத்தைப் பற்றி சிந்தியுங்கள். அது உங்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? 2. இரக்கம் என்பது மற்றவர்களுக்கு பலவகைகளில் உதவிச் செய்வதைக் குறிக்கிறது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் இரக்கத்தை எவ்வாறு காண்பிக்கிறீர்கள்? இரக்கச் செயல்கள் மற்றவர்களுக்கு நன்மை பயக்கும், மேலும் நம் வாழ்வில் ஆசீர்வாதங்களை கொண்டு வரும் என்பதை உணரவும், இரக்கம் மற்றும அக்கறையுடன் இருக்கவும் இந்த கதை நம்மை ஊக்குவிக்கிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் இரக்கமும் அக்கறையும் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான.
“; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான். நீதிமொழிகள் 11:17. "தயை" என்ற சொல்லை அனுதாபம், அக்கறை மற்றும் இரக்கம் காட்டுதல் என்று சொல்லலாம். இரக்கம் காட்டுவது என்பது நல்லெண்ணத்தோடு இருப்பது, அனுதாபம் காட்டுவது மற்றும் பிறருடைய துன்பத்தில் எதையும் எதிர்பாராமல் உதவிச் செய்வது போன்றவைகளாகும். கப்பர்நகூம் பட்டணத்தில், ஒரு மனிதன் திமிர்வாதத்தினால் படுக்கையில் இருந்தான். இயேசு தங்கள் ஊருக்கு வந்திருக்கிறார் என்பதை அவருடைய நண்பர்கள் அறிந்ததும், அவனைக் குணப்படுத்துவதற்காக இயேசுவிடம் படுக்கையோடே கொண்டுச் செல்ல முடிவு செய்தனர். அவர்கள் இயேசு பேசிக்கொண்டிருந்த வீட்டிற்கு வந்தபோது, ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல் இருந்தனர். என்றாலும், அவர்கள் தங்கள் நண்பன் குணமடைய சில அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தனர். அவர்கள் வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள். அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, இயேசு அந்த திமிர்வாதக்காரனைக் குணப்படுத்தினார், அவன் இயேசுவைத் துதித்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் சென்றான். திமிர்வாதக்காரனின் நண்பர்கள் காட்டின இரக்கத்தின் விளைவை இந்தக் கதை எடுத்துக்காட்டுகிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. ஒருவரின் இரக்கம் உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய நேரத்தைப் பற்றி சிந்தியுங்கள். அது உங்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? 2. இரக்கம் என்பது மற்றவர்களுக்கு பலவகைகளில் உதவிச் செய்வதைக் குறிக்கிறது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் இரக்கத்தை எவ்வாறு காண்பிக்கிறீர்கள்? இரக்கச் செயல்கள் மற்றவர்களுக்கு நன்மை பயக்கும், மேலும் நம் வாழ்வில் ஆசீர்வாதங்களை கொண்டு வரும் என்பதை உணரவும், இரக்கம் மற்றும அக்கறையுடன் இருக்கவும் இந்த கதை நம்மை ஊக்குவிக்கிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் இரக்கமும் அக்கறையும் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

