வியாழன், 17 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:யெகோவா தம்முடைய எல்லா வாக்குத்தத்தங்களிலும் நம்பத்தக்கவர்; தம்முடைய செயல்கள் அனைத்திலும் உண்மையுள்ளவர். சங்கீதம் 145:13 (TCVIN) * நிச்சயமற்ற தன்மைகள், சந்தேகங்கள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் நிறைந்த இந்த உலகில், அசைக்க முடியாத சத்தியமுள்ளவராயிருக்கிற தேவனுக்கு நாம் சேவை செய்கிறோம் என்பது உண்மையிலேயே ஆறுதல் அளிக்கிறது. கர்த்தரை சார்ந்திருப்பதின் சிறந்த உதாரணங்களில் ஒன்று நோவாவின் கதையில் காணப்படுகிறது. பூமியெங்கும் அக்கிரமமும், சீர்கேடும் பரவியிருந்த காலத்தில், வரவிருந்த ஜலப்பிரளயத்திலிருந்து நோவா காப்பாற்றப்பட ஒரு பேழையைக் கட்ட கர்த்தர் அவனைத் தெரிந்தெடுத்தார். நோவா கர்த்தரின் அறிவுரையின் படி விடாமுயற்சியுடன், மற்றவர்களின் பரியாசத்திற்கும் மத்தியில் பெரிய பேழையை கட்டி முடித்தார். கஷ்டங்களை சந்தித்தாலும் கர்த்தரின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து, உறுதியாயும், உண்மையாயும் இருந்தார். மேலும் ஜலப்பிரளயம் வந்தபோது கர்த்தர் வாக்குறுதி அளித்தபடியே, நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் பேழைக்குள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டனர். கர்த்தர் தாம் உண்மையுள்ளவர் என்றும் நம்பக்கைக்குரியவர் என்றும் நிரூபித்தார், அவருடைய உடன்படிக்கையின்படி, நீதிமான்களைப் பாதுகாத்தார். * நோவாவின் கதை கர்த்தரை நம்பி சார்ந்திருப்பதின் முக்கியத்துவத்தையும் நாம் நமது அர்ப்பணிப்பில் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது.* கர்த்தர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுதைப் போலவே, நாமும் நம்முடைய உறவுகள், கடமைகள் மற்றும் சேவையில் நம்பகத்தன்மையையும் உண்மையையும் வெளிப்படுத்துகிறவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.* உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறீர்கள்? * உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் கர்த்தருடைய உத்தமத்தை பிரதிபலிக்கிறதன் மூலம், மக்கள் அவரை அறிந்துக்கொள்ளச் செய்ய வேண்டும்.* நீங்கள் கர்த்தரைச் சார்ந்திருக்கும் வரை வாழ்க்கையைப் பற்றியோ அல்லது அதன் கஷ்டங்களைப் பற்றியோ பயப்பட வேண்டாம்.* அவர் உங்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வார்த்தைகளிலும் செயல்களிலும் நம்பகமான நபராக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
யெகோவா தம்முடைய எல்லா வாக்குத்தத்தங்களிலும் நம்பத்தக்கவர்;...
“சங்கீதம் 145:13 (TCVIN) * நிச்சயமற்ற தன்மைகள், சந்தேகங்கள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் நிறைந்த இந்த உலகில், அசைக்க முடியாத சத்தியமுள்ளவராயிருக்கிற தேவனுக்கு நாம் சேவை செய்கிறோம் என்பது உண்மையிலேயே ஆறுதல் அளிக்கிறது. கர்த்தரை சார்ந்திருப்பதின் சிறந்த உதாரணங்களில் ஒன்று நோவாவின் கதையில் காணப்படுகிறது. பூமியெங்கும் அக்கிரமமும், சீர்கேடும் பரவியிருந்த காலத்தில், வரவிருந்த ஜலப்பிரளயத்திலிருந்து நோவா காப்பாற்றப்பட ஒரு பேழையைக் கட்ட கர்த்தர் அவனைத் தெரிந்தெடுத்தார். நோவா கர்த்தரின் அறிவுரையின் படி விடாமுயற்சியுடன், மற்றவர்களின் பரியாசத்திற்கும் மத்தியில் பெரிய பேழையை கட்டி முடித்தார். கஷ்டங்களை சந்தித்தாலும் கர்த்தரின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து, உறுதியாயும், உண்மையாயும் இருந்தார். மேலும் ஜலப்பிரளயம் வந்தபோது கர்த்தர் வாக்குறுதி அளித்தபடியே, நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் பேழைக்குள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டனர். கர்த்தர் தாம் உண்மையுள்ளவர் என்றும் நம்பக்கைக்குரியவர் என்றும் நிரூபித்தார், அவருடைய உடன்படிக்கையின்படி, நீதிமான்களைப் பாதுகாத்தார். * நோவாவின் கதை கர்த்தரை நம்பி சார்ந்திருப்பதின் முக்கியத்துவத்தையும் நாம் நமது அர்ப்பணிப்பில் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது.* கர்த்தர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுதைப் போலவே, நாமும் நம்முடைய உறவுகள், கடமைகள் மற்றும் சேவையில் நம்பகத்தன்மையையும் உண்மையையும் வெளிப்படுத்துகிறவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.* உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறீர்கள்? * உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் கர்த்தருடைய உத்தமத்தை பிரதிபலிக்கிறதன் மூலம், மக்கள் அவரை அறிந்துக்கொள்ளச் செய்ய வேண்டும்.* நீங்கள் கர்த்தரைச் சார்ந்திருக்கும் வரை வாழ்க்கையைப் பற்றியோ அல்லது அதன் கஷ்டங்களைப் பற்றியோ பயப்பட வேண்டாம்.* அவர் உங்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வார்த்தைகளிலும் செயல்களிலும் நம்பகமான நபராக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

