← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் அன்பும், இரக்கமும் கொண்டவர்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் அன்பும், இரக்கமும் கொண்டவர்.

“திங்கட்கிழமை, 4 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் மோசேக்கு முன்னர் கடந்து சென்று, "யேகோவா என்னும் கர்த்தர், இரக்கமும் தயவும் உள்ள தேவன். கர்த்தர் எளிதில் கோபம் கொள்ளமாட்டார். கர்த்தர் அன்பு மிகுந்தவர், கர்த்தர் நம்பிக் கைக்குரியவர். யாத்திராகமம் 34:6 TERV கெட்டகுமாரனின் உவமை மனந்திரும்புதலுக்கும், எல்லையற்ற அன்பிற்கும் எடுத்துக்காட்டாய் இருக்கக்கூடிய இருதயத்தை உடைக்கும் ஒரு கதை. இளைய மகன் தனது ஆஸ்தியைக் கேட்டு வாங்கிக் கொண்டு, தூரத்தேசத்திற்குச் சென்று துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி அழித்துப்போடுகிறான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு கைவிடப்பட்ட நிலைமைக்குத் தள்ளப்பட்டான் . அவன் மனம்தளர்ந்து‌ தனது தகப்பனிடம் வீட்டிற்குத் திரும்பி வந்தான், தகப்பனிடமிருந்து சிறிது இரக்கத்தை எதிர்பார்த்து வந்தான். ஆச்சரியப்படும் விதமாக, அவன் வீட்டிற்கு அருகில் வந்தபோது, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான. அவனது கடந்த கால தப்பிதங்களை மன்னித்து, மகிழ்ச்சியான கொண்டாட்டத்துடன் அவனை மீண்டும் குடும்பத்திற்குள் சேர்த்துக்கொண்டார். தகப்பனின் அரவணைப்பு வெறும் உடல் சார்ந்தது அல்ல; ஒவ்வொரு குற்றங்களையும் மன்னித்து, மனம் உடைந்தவர்களை நிபந்தனையற்ற அன்புடன் அரவணைக்கும் எல்லையற்ற இரக்கத்தை இது குறிக்கிறது. இந்த உவமை நம் உணர்ச்சிகளைத் தூண்டி, தொலைந்து போனவர்களையும் காயமடைந்தவர்களையும் தேடும் எல்லையற்ற இரக்கத்தைப் பற்றி சிந்திக்க நம்மை அழைக்கிறது. மன்னிப்பு மற்றும் மனந்திரும்புதலை விரும்புபவர்களுக்கு, தகப்பனைப் போல நாமும் அத்தகைய இரக்கத்தைக் காட்ட முடியுமா என்று நம் இருதயங்களை ஆராயவும் இது நம்மைத் தூண்டுகிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் வாழ்க்கையில் உங்கள் குழந்தைகள், உடன்பிறந்தவர்கள் மற்றும் பிறரிடம் நீங்கள் எவ்வளவு இரக்கம் காட்டுகிறீர்கள்?2. மற்றவர்களின் போராட்டங்களைக் கருத்தில் கொள்ளாமல் அல்லது புரிந்துகொள்ள முயற்சிக்காமல் நீங்கள் நியாயந்தீர்த்து கண்டிக்கிறீர்களா?3. கர்த்தரின் அன்பையும் இரக்கத்தையும் மற்றவர்களிடம் எடுத்துக்காட்டுவதற்கு உங்கள் செயல்களை, கர்த்தருடைய இரக்கமுள்ள தன்மையோடு இணைத்துக் கொண்டு, இரக்கத்தையும் மன்னிப்பையும் பிறரிடம் எவ்வாறு காட்டலாம் என்பதை சிந்தியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து இரக்கம் உள்ள இருதயத்தோடு இருக்கவும், உமது அன்பை என் வார்த்தைகளிலும், நடத்தையிலும் காட்டவும் எனக்கு உதவிச் செய்யும். மற்றவர்களை குறை கூறாமல் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 4 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் மோசேக்கு முன்னர் கடந்து சென்று, “யேகோவா என்னும் கர்த்தர், இரக்கமும் தயவும் உள்ள தேவன். கர்த்தர் எளிதில் கோபம் கொள்ளமாட்டார். கர்த்தர் அன்பு மிகுந்தவர், கர்த்தர் நம்பிக் கைக்குரியவர். யாத்திராகமம் 34:6 TERV கெட்டகுமாரனின் உவமை மனந்திரும்புதலுக்கும், எல்லையற்ற அன்பிற்கும் எடுத்துக்காட்டாய் இருக்கக்கூடிய இருதயத்தை உடைக்கும் ஒரு கதை. இளைய மகன் தனது ஆஸ்தியைக் கேட்டு வாங்கிக் கொண்டு, தூரத்தேசத்திற்குச் சென்று துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி அழித்துப்போடுகிறான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு கைவிடப்பட்ட நிலைமைக்குத் தள்ளப்பட்டான் . அவன் மனம்தளர்ந்து‌ தனது தகப்பனிடம் வீட்டிற்குத் திரும்பி வந்தான், தகப்பனிடமிருந்து சிறிது இரக்கத்தை எதிர்பார்த்து வந்தான். ஆச்சரியப்படும் விதமாக, அவன் வீட்டிற்கு அருகில் வந்தபோது, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான. அவனது கடந்த கால தப்பிதங்களை மன்னித்து, மகிழ்ச்சியான கொண்டாட்டத்துடன் அவனை மீண்டும் குடும்பத்திற்குள் சேர்த்துக்கொண்டார். தகப்பனின் அரவணைப்பு வெறும் உடல் சார்ந்தது அல்ல; ஒவ்வொரு குற்றங்களையும் மன்னித்து, மனம் உடைந்தவர்களை நிபந்தனையற்ற அன்புடன் அரவணைக்கும் எல்லையற்ற இரக்கத்தை இது குறிக்கிறது. இந்த உவமை நம் உணர்ச்சிகளைத் தூண்டி, தொலைந்து போனவர்களையும் காயமடைந்தவர்களையும் தேடும் எல்லையற்ற இரக்கத்தைப் பற்றி சிந்திக்க நம்மை அழைக்கிறது. மன்னிப்பு மற்றும் மனந்திரும்புதலை விரும்புபவர்களுக்கு, தகப்பனைப் போல நாமும் அத்தகைய இரக்கத்தைக் காட்ட முடியுமா என்று நம் இருதயங்களை ஆராயவும் இது நம்மைத் தூண்டுகிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் வாழ்க்கையில் உங்கள் குழந்தைகள், உடன்பிறந்தவர்கள் மற்றும் பிறரிடம் நீங்கள் எவ்வளவு இரக்கம் காட்டுகிறீர்கள்?2. மற்றவர்களின் போராட்டங்களைக் கருத்தில் கொள்ளாமல் அல்லது புரிந்துகொள்ள முயற்சிக்காமல் நீங்கள் நியாயந்தீர்த்து கண்டிக்கிறீர்களா?3. கர்த்தரின் அன்பையும் இரக்கத்தையும் மற்றவர்களிடம் எடுத்துக்காட்டுவதற்கு உங்கள் செயல்களை, கர்த்தருடைய இரக்கமுள்ள தன்மையோடு இணைத்துக் கொண்டு, இரக்கத்தையும் மன்னிப்பையும் பிறரிடம் எவ்வாறு காட்டலாம் என்பதை சிந்தியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து இரக்கம் உள்ள இருதயத்தோடு இருக்கவும், உமது அன்பை என் வார்த்தைகளிலும், நடத்தையிலும் காட்டவும் எனக்கு உதவிச் செய்யும். மற்றவர்களை குறை கூறாமல் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.