← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.

“மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். நீதிமொழிகள் 1:7 தானியேல் மற்றும் அவனது நண்பர்களான சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகியோரின் கதை, கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் கிடைக்கக்கூடிய ஞானத்துக்கு எடுத்துக்காட்டு. நேபுகாத்நேச்சார் ராஜா தனது உணவு மற்றும் திராட்சரசத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படி கட்டளையிட்டார். தானியலும் அவனுடைய நண்பர்களும் ராஜாவின் உணவை உண்பது அவர்களின் விசுவாசத்திற்கு எதிரானது என்பதால், அந்த உணவைத் தவிர்க்க முடிவு செய்தனர். மாறாக, தங்களுக்கு பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் தருமாறு பிரதானிகளின் தலைவனிடம் கேட்டுக் கொண்டனர். இதைப் புசித்தாலும் கர்த்தர் தங்களுக்கு ஆரோக்கியத்தையும் ஞானத்தையும் தருவார் என்று நம்பி இந்த உணவைக் கேட்டுக் கொண்டனர். கர்த்தர் அவர்களுடைய விசுவாசத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு சரீரத்தில் புஷ்டியையும், சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார். தானியலும் அவனது நண்பர்களும் ஞானத்தில் மற்ற அனைவரையும் விட சிறந்து விளங்கினர், பாபிலோனிய ஞானிகளைக் கூட மிஞ்சினார்கள். பிரதிபலிப்புக்கான கேள்விகள்: தானியல் மற்றும் அவனது நண்பர்களுக்குக் கிடைத்த, கர்த்தரின் ஆசீர்வாதத்தை கருத்தில் கொண்டு பகுப்பாய்வு செய்யுங்கள், 1. தானியல் மற்றும் அவனது நண்பர்களின் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? 2. உங்கள் உண்மைத்தன்மையும் மேன்மையும் எவ்வாறு கர்த்தருக்கு மகிமையைக் கொண்டு வந்து, இந்த உலகில் எவ்வாறு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம்? * கர்த்தருக்குப் பயப்படுவது எப்படி திறமைகளையும் ஞானத்தையும் தரும் என்றும், இறுதியில் அது கர்த்தருக்கு மகிமையைக் கொண்டுவந்து, அவரைக் கனம்பண்ணுகிறவர்களுக்குப் பயனளிக்கும் என்பதையும் இந்தக் கதை எடுத்துக்காட்டுகிறது.* எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தருக்கு பயந்து பரிசுத்தமான வாழ்க்கை வாழுங்கள்.* நீங்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் எல்லாவற்றிலும் உமது கட்டளைகளுக்குப் பயந்து நடக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். நீதிமொழிகள் 1:7 தானியேல் மற்றும் அவனது நண்பர்களான சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகியோரின் கதை, கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் கிடைக்கக்கூடிய ஞானத்துக்கு எடுத்துக்காட்டு. நேபுகாத்நேச்சார் ராஜா தனது உணவு மற்றும் திராட்சரசத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படி கட்டளையிட்டார். தானியலும் அவனுடைய நண்பர்களும் ராஜாவின் உணவை உண்பது அவர்களின் விசுவாசத்திற்கு எதிரானது என்பதால், அந்த உணவைத் தவிர்க்க முடிவு செய்தனர். மாறாக, தங்களுக்கு பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் தருமாறு பிரதானிகளின் தலைவனிடம் கேட்டுக் கொண்டனர். இதைப் புசித்தாலும் கர்த்தர் தங்களுக்கு ஆரோக்கியத்தையும் ஞானத்தையும் தருவார் என்று நம்பி இந்த உணவைக் கேட்டுக் கொண்டனர். கர்த்தர் அவர்களுடைய விசுவாசத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு சரீரத்தில் புஷ்டியையும், சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார். தானியலும் அவனது நண்பர்களும் ஞானத்தில் மற்ற அனைவரையும் விட சிறந்து விளங்கினர், பாபிலோனிய ஞானிகளைக் கூட மிஞ்சினார்கள். பிரதிபலிப்புக்கான கேள்விகள்: தானியல் மற்றும் அவனது நண்பர்களுக்குக் கிடைத்த, கர்த்தரின் ஆசீர்வாதத்தை கருத்தில் கொண்டு பகுப்பாய்வு செய்யுங்கள், 1. தானியல் மற்றும் அவனது நண்பர்களின் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? 2. உங்கள் உண்மைத்தன்மையும் மேன்மையும் எவ்வாறு கர்த்தருக்கு மகிமையைக் கொண்டு வந்து, இந்த உலகில் எவ்வாறு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம்? * கர்த்தருக்குப் பயப்படுவது எப்படி திறமைகளையும் ஞானத்தையும் தரும் என்றும், இறுதியில் அது கர்த்தருக்கு மகிமையைக் கொண்டுவந்து, அவரைக் கனம்பண்ணுகிறவர்களுக்குப் பயனளிக்கும் என்பதையும் இந்தக் கதை எடுத்துக்காட்டுகிறது.* எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தருக்கு பயந்து பரிசுத்தமான வாழ்க்கை வாழுங்கள்.* நீங்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்க்கையின் எல்லாவற்றிலும் உமது கட்டளைகளுக்குப் பயந்து நடக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.