சனிக்கிழமை, 9 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:28 பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் சீஷர்கள் மீது இறங்கிய பிறகு, விசுவாசிகள் மத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. வாழ்க்கையின் பல்வேறு நிலைகள், பல்வேறு பின்னணிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கத் தொடங்கினர். இதில் யூதர்களும், புறஜாதி மக்களும், அடிமைகளும் அடங்குவர். ஆண்களும் பெண்களும் இயேசுவைப் பின்பற்ற ஒன்றாகச் சேர்ந்து, பகிர்ந்துக்கொள்ளுதலினாலும், ஒருமனதின் ஆவியினாலும், ஒரு வலிமையான சமூகத்தை உருவாக்கினர்.அடுத்தடுத்த நாட்களில், இந்த ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வீடுகளில் கூடி, ஒன்றாக அப்பம்பிட்டு, உணவை பகிர்ந்து கொண்டு போஜனம்பண்ணினர். அவர்களில் சிலர் மனமுவந்து தங்கள் உடைமைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தை தேவைப்படுபவர்களுக்கு வழங்கினர். இந்த செயல் அவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியையும், கிறிஸ்துவில் ஐக்கியத்தையும், அன்புக் காட்டுதலையும், பராமரிப்பையும், நற்செயலையும் காட்டுகிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்:1. சமூக அந்தஸ்து, கலாச்சாரம், மொழி அல்லது வேறு ஏதேனும் சமூக இகழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் பாகுபாடு காட்டுகிறீர்களா? 2. சமூக அமைப்பில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மகிழ்ச்சியை நீங்கள் கண்ட அல்லது அனுபவித்த தனிப்பட்ட அனுபவங்களை உங்களால் சிந்திக்க முடியுமா? 3. இந்தக் கதையின் படி, உங்களின் பகிர்ந்து கொள்ளும் தன்மை, ஒற்றுமையாயிருத்தல், ஆகியவற்றை சொந்த வாழ்க்கையிலும், சமூகத்திலும் எவ்வாறு நிறைவேற்றுவீர்கள்? ஜெபம்: அன்பான ஆண்டவர் இயேசுவே, பாகுபாடின்றி ஒவ்வொருவருக்கும் உமது அன்பை நீர் வெளிப்படுத்தியது போல், நானும் அனைவரிடமும் உமது அன்பையும், நற்செயலையும் வெளிப்படுத்த எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
நிறம், மொழி அல்லது கலாச்சாரத்தால் மக்களைப்...
“சனிக்கிழமை, 9 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:28 பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் சீஷர்கள் மீது இறங்கிய பிறகு, விசுவாசிகள் மத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. வாழ்க்கையின் பல்வேறு நிலைகள், பல்வேறு பின்னணிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கத் தொடங்கினர். இதில் யூதர்களும், புறஜாதி மக்களும், அடிமைகளும் அடங்குவர். ஆண்களும் பெண்களும் இயேசுவைப் பின்பற்ற ஒன்றாகச் சேர்ந்து, பகிர்ந்துக்கொள்ளுதலினாலும், ஒருமனதின் ஆவியினாலும், ஒரு வலிமையான சமூகத்தை உருவாக்கினர்.அடுத்தடுத்த நாட்களில், இந்த ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வீடுகளில் கூடி, ஒன்றாக அப்பம்பிட்டு, உணவை பகிர்ந்து கொண்டு போஜனம்பண்ணினர். அவர்களில் சிலர் மனமுவந்து தங்கள் உடைமைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தை தேவைப்படுபவர்களுக்கு வழங்கினர். இந்த செயல் அவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியையும், கிறிஸ்துவில் ஐக்கியத்தையும், அன்புக் காட்டுதலையும், பராமரிப்பையும், நற்செயலையும் காட்டுகிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்:1. சமூக அந்தஸ்து, கலாச்சாரம், மொழி அல்லது வேறு ஏதேனும் சமூக இகழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் பாகுபாடு காட்டுகிறீர்களா? 2. சமூக அமைப்பில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மகிழ்ச்சியை நீங்கள் கண்ட அல்லது அனுபவித்த தனிப்பட்ட அனுபவங்களை உங்களால் சிந்திக்க முடியுமா? 3. இந்தக் கதையின் படி, உங்களின் பகிர்ந்து கொள்ளும் தன்மை, ஒற்றுமையாயிருத்தல், ஆகியவற்றை சொந்த வாழ்க்கையிலும், சமூகத்திலும் எவ்வாறு நிறைவேற்றுவீர்கள்? ஜெபம்: அன்பான ஆண்டவர் இயேசுவே, பாகுபாடின்றி ஒவ்வொருவருக்கும் உமது அன்பை நீர் வெளிப்படுத்தியது போல், நானும் அனைவரிடமும் உமது அன்பையும், நற்செயலையும் வெளிப்படுத்த எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

