வெள்ளிக்கிழமை, 8 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். யாக்கோபு 4:10 சூசான் என்ற நகரில் மொர்தெகாய் என்ற எளிய மனிதர் ஒருவர் இருந்தார். அவர் பெர்சியாவில் வாழ்ந்த ஒரு யூத மனிதர். மொர்தெகாய் தனது உறவினரான எஸ்தரை வளர்த்து வந்தார். எஸ்தர் பின்னர் பெர்சியாவின் ராணியானாள். ஒரு நாள், ராஜாவைக் கொல்ல இருந்த ஒரு சதித்திட்டத்தை மொர்தெகாய்க் கண்டுபிடித்து, அதை உடனடியாக அறிவித்தார். அவரது உண்மையானச் செயல் பதிவு செய்யப்பட்டது, ஆனால் மன்னர் அவருக்கு உடனடியாக வெகுமதி அளிக்கவில்லை. இருப்பினும், மொர்தெகாய் உண்மையாகவே இருந்தார். பின்னர், ஆமான் என்ற பொல்லாதவன் பதவிக்கு வந்தான், யூத மக்களை அழிக்க ஒரு திட்டத்தை வகுத்தான். யூதர்களைக் காப்பாற்ற உடனடியாக செயல்படுமாறு மொர்தெகாய், எஸ்தர் ராணியை ஊக்கப்படுத்தினார். மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபித்தப் பிறகு, ராஜாவால் அழைக்கப்படாமல் எஸ்தர் தன் உயிரைப் பணயம் வைத்து ராஜாவிடம் சென்றாள். குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஆமானின் சதி முறியடிக்கப்பட்டது, யூத மக்கள் காப்பாற்றப்பட்டனர். மொர்தெகாயின் விசுவாசமும், பணிவும் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அவர் ராஜ்யத்தில் அதிகாரப் பதவிக்கு உயர்த்தப்பட்டார். கர்த்தர் தாழ்மையானவர்களை எவ்வாறு உயர்த்துகிறார், மேலும் அவரது நோக்கம் நிறைவேற அவர்களை குறிப்பிடத்தக்க வழிகளில் பயன்படுத்துகிறார் என்பதை இந்த கதை எடுத்துக்காட்டுகிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. சவால்கள் அல்லது நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் போது கூட, உங்கள் வாழ்க்கை அல்லது வரலாற்றில் தாழ்மையான நபர்கள் சரியான நடவடிக்கைகளை எடுத்து நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளை உங்களால் சிந்திக்க முடியுமா? 2. மொர்தெகாயின் கதையைப் பற்றி சிந்தித்துக்கும்போது, நீங்கள் அல்லது உங்களது உன்னதமான செயல்கள் கவனிக்கப்படாமல் போனாலும், நீங்கள் எவ்வாறு தாழ்மையை வளர்த்துக்கொண்டு உண்மையாக இருக்க முடியும்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லா பின்னடைவுகள் மற்றும் ஏமாற்றங்கள் மத்தியிலும் தாழ்மையாகவும் உண்மையாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர்...
“யாக்கோபு 4:10 சூசான் என்ற நகரில் மொர்தெகாய் என்ற எளிய மனிதர் ஒருவர் இருந்தார். அவர் பெர்சியாவில் வாழ்ந்த ஒரு யூத மனிதர். மொர்தெகாய் தனது உறவினரான எஸ்தரை வளர்த்து வந்தார். எஸ்தர் பின்னர் பெர்சியாவின் ராணியானாள். ஒரு நாள், ராஜாவைக் கொல்ல இருந்த ஒரு சதித்திட்டத்தை மொர்தெகாய்க் கண்டுபிடித்து, அதை உடனடியாக அறிவித்தார். அவரது உண்மையானச் செயல் பதிவு செய்யப்பட்டது, ஆனால் மன்னர் அவருக்கு உடனடியாக வெகுமதி அளிக்கவில்லை. இருப்பினும், மொர்தெகாய் உண்மையாகவே இருந்தார். பின்னர், ஆமான் என்ற பொல்லாதவன் பதவிக்கு வந்தான், யூத மக்களை அழிக்க ஒரு திட்டத்தை வகுத்தான். யூதர்களைக் காப்பாற்ற உடனடியாக செயல்படுமாறு மொர்தெகாய், எஸ்தர் ராணியை ஊக்கப்படுத்தினார். மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபித்தப் பிறகு, ராஜாவால் அழைக்கப்படாமல் எஸ்தர் தன் உயிரைப் பணயம் வைத்து ராஜாவிடம் சென்றாள். குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஆமானின் சதி முறியடிக்கப்பட்டது, யூத மக்கள் காப்பாற்றப்பட்டனர். மொர்தெகாயின் விசுவாசமும், பணிவும் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அவர் ராஜ்யத்தில் அதிகாரப் பதவிக்கு உயர்த்தப்பட்டார். கர்த்தர் தாழ்மையானவர்களை எவ்வாறு உயர்த்துகிறார், மேலும் அவரது நோக்கம் நிறைவேற அவர்களை குறிப்பிடத்தக்க வழிகளில் பயன்படுத்துகிறார் என்பதை இந்த கதை எடுத்துக்காட்டுகிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. சவால்கள் அல்லது நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் போது கூட, உங்கள் வாழ்க்கை அல்லது வரலாற்றில் தாழ்மையான நபர்கள் சரியான நடவடிக்கைகளை எடுத்து நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளை உங்களால் சிந்திக்க முடியுமா? 2. மொர்தெகாயின் கதையைப் பற்றி சிந்தித்துக்கும்போது, நீங்கள் அல்லது உங்களது உன்னதமான செயல்கள் கவனிக்கப்படாமல் போனாலும், நீங்கள் எவ்வாறு தாழ்மையை வளர்த்துக்கொண்டு உண்மையாக இருக்க முடியும்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லா பின்னடைவுகள் மற்றும் ஏமாற்றங்கள் மத்தியிலும் தாழ்மையாகவும் உண்மையாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

