செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:7 * வாழ்க்கையில் அதிகரித்து வரும் பிரச்சனைகள் மற்றும் சவால்களால் நீங்கள் வேதனையை உணர்கிறீர்களா?* இளைப்பாறுதல், ஆதரவு, அறிவுரை மற்றும் பெலன் பெற, சாய்ந்துக்கொள்ளும் ஒரு தோழிற்காக ஏங்குகிறீர்களா?* பயப்பட வேண்டாம், ஏனென்றால் கர்த்தர் உங்களை கவனித்துக்கொள்கிறார். வேதாகமத்தில், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணை இயேசு சந்திப்பதை பற்றிய ஒரு கதை உள்ளது. யோவான் 4-இல் கிணற்றின் அருகே அந்தப் பெண்ணின் கதை ஆரம்பிக்கிறது. அவள் ஒரு சமாரிய ஸ்திரீ, யூதர்களால் அந்நிய நாட்டாளாகக் கருதப்பட்டாள். பலமுறை திருமணம் செய்து கொண்டாலும், அவளுக்கு வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமையவில்லை. இருப்பினும், இயேசு அவளை ஒரு அந்நிய ஸ்திரீயாகப் பார்க்கவில்லை. அவர் அவளை தேவைகளோடு காணப்படும் ஒரு நபராக பார்த்தார், மேலும் சமூக கட்டுப்பாடுகளுக்கு மீறி அவளுடைய வாழ்க்கையை மாற்றும் உரையாடலில் ஈடுபட்டார். அவள் விசுவாசத்தைப் பற்றிய கேள்விகளை வெளிப்படையாக கேட்டாள்; மேலும் அவளுடைய துன்மார்க்கமான வாழ்க்கையை மறைக்காது உண்மையை பேசினாள். இயேசு அவளுடைய வாழ்க்கையைப் குறித்து பேசி, நித்திய ஜீவனைக் குறிக்கும் ஜீவத் தண்ணீரை அவளுக்கு வாக்குப்பண்ணினார். அவள் இயேசுவை விசுவாசித்தாள், அவருக்கு மிகப்பெரிய சாட்சியாக மாறினாள், மேலும் ஊருக்குள்ளிருந்துப் பலரை அவரிடம் கூட்டிக்கொண்டு வந்தாள். * என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை மாற்றம்!* உங்கள் சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் இயேசு உங்களையும் நேசிக்கிறார்.* உங்கள் தற்போதைய மனநிலை மற்றும் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி அவர் கரிசனையாயிருக்கிறார்.* நீங்கள் இப்பொழுது இருக்கிறப்படியே அவரிடம் வாருங்கள், உங்கள் பாரங்களை அவர் மீது வைத்து விடுங்கள்.* அவர் உங்களை விசாரித்து உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய பிரச்சனைகளையும் சவால்களையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். என்மீது உமக்கு இருக்கும் அன்பை நான் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம்...
“1 பேதுரு 5:7 * வாழ்க்கையில் அதிகரித்து வரும் பிரச்சனைகள் மற்றும் சவால்களால் நீங்கள் வேதனையை உணர்கிறீர்களா?* இளைப்பாறுதல், ஆதரவு, அறிவுரை மற்றும் பெலன் பெற, சாய்ந்துக்கொள்ளும் ஒரு தோழிற்காக ஏங்குகிறீர்களா?* பயப்பட வேண்டாம், ஏனென்றால் கர்த்தர் உங்களை கவனித்துக்கொள்கிறார். வேதாகமத்தில், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணை இயேசு சந்திப்பதை பற்றிய ஒரு கதை உள்ளது. யோவான் 4-இல் கிணற்றின் அருகே அந்தப் பெண்ணின் கதை ஆரம்பிக்கிறது. அவள் ஒரு சமாரிய ஸ்திரீ, யூதர்களால் அந்நிய நாட்டாளாகக் கருதப்பட்டாள். பலமுறை திருமணம் செய்து கொண்டாலும், அவளுக்கு வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமையவில்லை. இருப்பினும், இயேசு அவளை ஒரு அந்நிய ஸ்திரீயாகப் பார்க்கவில்லை. அவர் அவளை தேவைகளோடு காணப்படும் ஒரு நபராக பார்த்தார், மேலும் சமூக கட்டுப்பாடுகளுக்கு மீறி அவளுடைய வாழ்க்கையை மாற்றும் உரையாடலில் ஈடுபட்டார். அவள் விசுவாசத்தைப் பற்றிய கேள்விகளை வெளிப்படையாக கேட்டாள்; மேலும் அவளுடைய துன்மார்க்கமான வாழ்க்கையை மறைக்காது உண்மையை பேசினாள். இயேசு அவளுடைய வாழ்க்கையைப் குறித்து பேசி, நித்திய ஜீவனைக் குறிக்கும் ஜீவத் தண்ணீரை அவளுக்கு வாக்குப்பண்ணினார். அவள் இயேசுவை விசுவாசித்தாள், அவருக்கு மிகப்பெரிய சாட்சியாக மாறினாள், மேலும் ஊருக்குள்ளிருந்துப் பலரை அவரிடம் கூட்டிக்கொண்டு வந்தாள். * என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை மாற்றம்!* உங்கள் சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் இயேசு உங்களையும் நேசிக்கிறார்.* உங்கள் தற்போதைய மனநிலை மற்றும் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி அவர் கரிசனையாயிருக்கிறார்.* நீங்கள் இப்பொழுது இருக்கிறப்படியே அவரிடம் வாருங்கள், உங்கள் பாரங்களை அவர் மீது வைத்து விடுங்கள்.* அவர் உங்களை விசாரித்து உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய பிரச்சனைகளையும் சவால்களையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். என்மீது உமக்கு இருக்கும் அன்பை நான் அனுபவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

