← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுவை நம்புங்கள். பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசுவை நம்புங்கள்.

“இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. ரோமர் 15:13 யோசுவா மற்றும் காலேபின் கதை நம்பிக்கையும், விசுவாசமும் எவ்வாறு கைகோர்த்துச் செல்கின்றன என்பதைப் பார்க்க உதவுகிறது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவது சவாலாகத் தோன்றியதால், இஸ்ரவேலர்கள் பயந்தனர். அப்பொழுது யோசுவாவும் காலேபும் தனித்து நின்றார்கள். மற்றவர்கள் நிச்சயமில்லாமல் இருந்தபொழுதும் அவர்கள் கர்த்தருடைய வாக்குத்தத்ததை நம்பினார்கள். இந்த விசுவாசம் அவர்களுக்கு கடினமாகத் தோன்றினாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளித்தது. அவர்கள் உண்மையிலேயே கர்த்தரை நம்பினார்கள். கர்த்தருடைய வாக்குத்தத்தில் அவர்களுக்கிருந்த விசுவாசத்தால் பல வருடங்கள் அலைந்து திரிந்த அவர்கள் இறுதியாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்தார்கள். மேலும் என்ன என்று யூகியுங்கள்? கர்த்தருடைய உதவியால், அவர்கள் எதிர்பார்த்தது போலவே எரிகோ நகரைக் கைப்பற்றினர். யோசுவா மற்றும் காலேபின் கதை, நாம் கர்த்தரை விசுவாசிக்கும்போது, அது நம் நம்பிக்கையை பெரிதாகவும் வலுவாகவும் ஆக்குகிறது என்பதை நமக்குக் கற்பிக்கிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. துன்பமான நேரங்களில் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள்?2. கடக்க முடியாத நிலை தோன்றினாலும் நீங்கள் கர்த்தரைப் பார்த்து, அவரை நம்புகிறீர்களா?3. உங்கள் நம்பிக்கையான வார்த்தைகளால் சவாலான காலங்களில் தைரியமாக இருக்க மற்றவர்களை எப்படி ஊக்குவிக்கலாம்? * கர்த்தருடைய வார்த்தைகளைப் படிப்பதிலும் அவற்றைப் பற்றி சிந்திப்பதிலும் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துங்கள்.* உங்கள் வழியில் வரும் அனைத்து எதிர்மறை வார்த்தைகளையும் தவிர்க்க கவனமாக இருங்கள்.* கர்த்தர் மீதும் அவருடைய அற்புத வல்லமை மீதும் நம்பிக்கை வையுங்கள்.* நீங்கள் வெட்கப்பட்டுப்போக மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையில் என் விசுவாசத்தை பெருகச்செய்து, தைரியமாக இருந்து, உம்மீது நம்பிக்கையாய் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

இயேசுவை நம்புங்கள். பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்.இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. ரோமர் 15:13 யோசுவா மற்றும் காலேபின் கதை நம்பிக்கையும், விசுவாசமும் எவ்வாறு கைகோர்த்துச் செல்கின்றன என்பதைப் பார்க்க உதவுகிறது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவது சவாலாகத் தோன்றியதால், இஸ்ரவேலர்கள் பயந்தனர். அப்பொழுது யோசுவாவும் காலேபும் தனித்து நின்றார்கள். மற்றவர்கள் நிச்சயமில்லாமல் இருந்தபொழுதும் அவர்கள் கர்த்தருடைய வாக்குத்தத்ததை நம்பினார்கள். இந்த விசுவாசம் அவர்களுக்கு கடினமாகத் தோன்றினாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளித்தது. அவர்கள் உண்மையிலேயே கர்த்தரை நம்பினார்கள். கர்த்தருடைய வாக்குத்தத்தில் அவர்களுக்கிருந்த விசுவாசத்தால் பல வருடங்கள் அலைந்து திரிந்த அவர்கள் இறுதியாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்தார்கள். மேலும் என்ன என்று யூகியுங்கள்? கர்த்தருடைய உதவியால், அவர்கள் எதிர்பார்த்தது போலவே எரிகோ நகரைக் கைப்பற்றினர். யோசுவா மற்றும் காலேபின் கதை, நாம் கர்த்தரை விசுவாசிக்கும்போது, அது நம் நம்பிக்கையை பெரிதாகவும் வலுவாகவும் ஆக்குகிறது என்பதை நமக்குக் கற்பிக்கிறது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. துன்பமான நேரங்களில் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள்?2. கடக்க முடியாத நிலை தோன்றினாலும் நீங்கள் கர்த்தரைப் பார்த்து, அவரை நம்புகிறீர்களா?3. உங்கள் நம்பிக்கையான வார்த்தைகளால் சவாலான காலங்களில் தைரியமாக இருக்க மற்றவர்களை எப்படி ஊக்குவிக்கலாம்? * கர்த்தருடைய வார்த்தைகளைப் படிப்பதிலும் அவற்றைப் பற்றி சிந்திப்பதிலும் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துங்கள்.* உங்கள் வழியில் வரும் அனைத்து எதிர்மறை வார்த்தைகளையும் தவிர்க்க கவனமாக இருங்கள்.* கர்த்தர் மீதும் அவருடைய அற்புத வல்லமை மீதும் நம்பிக்கை வையுங்கள்.* நீங்கள் வெட்கப்பட்டுப்போக மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையில் என் விசுவாசத்தை பெருகச்செய்து, தைரியமாக இருந்து, உம்மீது நம்பிக்கையாய் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.