← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக்...

“2 நாளாகமம் 19:11 * நீங்கள் நார்சந்தி போன்ற குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறீர்களோ?* எதிர்காலத்திற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களில் எதை தேர்வுச் செய்வது என்றுத் தெரியாது குழப்பமடைந்து இருக்கிறீர்களோ? * உங்கள் புத்திசாலித்தனத்தை மட்டும் நம்பாதீர்கள்.* கர்த்தருடைய ஆலோசனையையும் அவருடைய கிருபையையும் நாடுங்கள்.* கர்த்தர் உங்களிடம் பேசும் வரை காத்திருங்கள், அவருடைய குரலை உணருங்கள்.* அந்த நேரத்தில் கவனச் சிதறல்களை உண்டாக்கும் அனைத்தையும் தவிருங்கள். * கர்த்தரின் வழிகாட்டுதலைப் பின்பற்ற தைரியமாக இருங்கள், மேலும் நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.* உங்கள் கைகளை அவர் பிடித்துக்கொண்டு உங்களை முன்னோக்கி வழிநடத்த அவருக்கு விட்டுக் கொடுங்கள்.* அவர் உங்களுக்கு முன் பயணம் செய்யும்போது, உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாக்குவார்.* உங்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் பெற்று, சரியான நேரத்தில் உங்கள் இலக்கை அடைவீர்கள்.* அவர் உங்களுக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து எந்தக் குறைவுமின்றி நீங்கள் வாழும்படிச் செய்வார். * காரியங்கள் எப்படி நடக்கப் போகிறது என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.* கர்த்தரின் ஏற்பாடுகளைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, அவருடைய மகத்துவத்தில் நம்பிக்கை வைத்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.* அவர் உங்களுக்கு வழங்கிய வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள் .* தைரியமாக முன்னோக்கி செல்லுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வாக்குறுதிகளை நம்பி மன உறுதியோடு செயல்பட எனக்கு தைரியத்தைத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை. 2 நாளாகமம் 19:11 * நீங்கள் நார்சந்தி போன்ற குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறீர்களோ?* எதிர்காலத்திற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களில் எதை தேர்வுச் செய்வது என்றுத் தெரியாது குழப்பமடைந்து இருக்கிறீர்களோ? * உங்கள் புத்திசாலித்தனத்தை மட்டும் நம்பாதீர்கள்.* கர்த்தருடைய ஆலோசனையையும் அவருடைய கிருபையையும் நாடுங்கள்.* கர்த்தர் உங்களிடம் பேசும் வரை காத்திருங்கள், அவருடைய குரலை உணருங்கள்.* அந்த நேரத்தில் கவனச் சிதறல்களை உண்டாக்கும் அனைத்தையும் தவிருங்கள். * கர்த்தரின் வழிகாட்டுதலைப் பின்பற்ற தைரியமாக இருங்கள், மேலும் நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.* உங்கள் கைகளை அவர் பிடித்துக்கொண்டு உங்களை முன்னோக்கி வழிநடத்த அவருக்கு விட்டுக் கொடுங்கள்.* அவர் உங்களுக்கு முன் பயணம் செய்யும்போது, உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாக்குவார்.* உங்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் பெற்று, சரியான நேரத்தில் உங்கள் இலக்கை அடைவீர்கள்.* அவர் உங்களுக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து எந்தக் குறைவுமின்றி நீங்கள் வாழும்படிச் செய்வார். * காரியங்கள் எப்படி நடக்கப் போகிறது என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.* கர்த்தரின் ஏற்பாடுகளைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, அவருடைய மகத்துவத்தில் நம்பிக்கை வைத்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.* அவர் உங்களுக்கு வழங்கிய வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள் .* தைரியமாக முன்னோக்கி செல்லுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வாக்குறுதிகளை நம்பி மன உறுதியோடு செயல்பட எனக்கு தைரியத்தைத் தந்தருளும். ஆமென்.