← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்களை எழுப்புவார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்களை எழுப்புவார்.

“புதன், 31 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் அவனை எழுப்புவார். யாக்கோபு 5:15 * சில சமயங்களில் உங்கள் வாழ்க்கையில் சில திருத்தங்களைச் செய்ய, பலவீனங்களையும், குறைவுகளையும் கர்த்தர் அனுமதிக்கிறார்.* நீங்கள் இன்னும் விடுதலை இல்லாமல் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறீர்களோ?* நீங்கள் உங்கள் மனநிலையில் தாழ்வாக உணர்கிறீர்களோ அல்லது மனச்சோர்வடைந்த தருணங்களைச் சந்திக்கிறீர்களோ?* நீங்கள் குணமடைய மருத்துவத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கர்த்தரில் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.* அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவர் மற்றும் அதிசயங்களைச் செய்யும் தெய்வம். * நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை ஆராய்ந்துப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள், ஏதாவது திருத்திக் கொள்ள வேண்டுமா என்பதைத் சிந்தியுங்கள்.* கர்த்தரின் ஆலோசனையை நாடி, உடனடியாக சரியான நடவடிக்கை எடுங்கள்.* கர்த்தரைப் பிரியப்படுத்தும் வாழ்க்கையே உங்கள் முதன்மையானதாக இருக்க வேண்டும்.* கர்த்தரின் திட்டத்தின்படி வாழ உங்களை அர்ப்பணியுங்கள்.* கர்த்தரின் திட்டத்திலிருந்து உங்களை வழி விலகச்செய்யும் எல்லா எதிரிகளையும், கவனச்சிதறல்களையும் தவிர்த்து விடுங்கள்.* அப்போது நீங்கள் கர்த்தரின் மறுசீரமைப்பு மற்றும் குணப்படுத்துதலை அனுபவிப்பீர்கள். * கர்த்தர் உங்களின் பலவீனப் படுக்கையிலிருந்து எழுப்புவார்.* அவர் உங்களுக்கு சரீரத்திலும், ஆத்துமாவிலும் சிகிச்சையளிப்பார்.* அவர் உங்கள் முடங்கிப்போன மனதைக் குணப்படுத்தி, உங்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க உங்களுக்கு உதவுவார்.* ஆம்! இயேசு உங்களை மீண்டும் எழுப்புவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய குறைபாடுகளைப் புரிந்துகொண்டு, என்னை திருத்திக் கொள்ள கிருபைத் தாரும். உமது மகிமைக்காக என் வாழ்க்கையை மீட்டருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 31 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் அவனை எழுப்புவார். யாக்கோபு 5:15 * சில சமயங்களில் உங்கள் வாழ்க்கையில் சில திருத்தங்களைச் செய்ய, பலவீனங்களையும், குறைவுகளையும் கர்த்தர் அனுமதிக்கிறார்.* நீங்கள் இன்னும் விடுதலை இல்லாமல் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறீர்களோ?* நீங்கள் உங்கள் மனநிலையில் தாழ்வாக உணர்கிறீர்களோ அல்லது மனச்சோர்வடைந்த தருணங்களைச் சந்திக்கிறீர்களோ?* நீங்கள் குணமடைய மருத்துவத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கர்த்தரில் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.* அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவர் மற்றும் அதிசயங்களைச் செய்யும் தெய்வம். * நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை ஆராய்ந்துப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள், ஏதாவது திருத்திக் கொள்ள வேண்டுமா என்பதைத் சிந்தியுங்கள்.* கர்த்தரின் ஆலோசனையை நாடி, உடனடியாக சரியான நடவடிக்கை எடுங்கள்.* கர்த்தரைப் பிரியப்படுத்தும் வாழ்க்கையே உங்கள் முதன்மையானதாக இருக்க வேண்டும்.* கர்த்தரின் திட்டத்தின்படி வாழ உங்களை அர்ப்பணியுங்கள்.* கர்த்தரின் திட்டத்திலிருந்து உங்களை வழி விலகச்செய்யும் எல்லா எதிரிகளையும், கவனச்சிதறல்களையும் தவிர்த்து விடுங்கள்.* அப்போது நீங்கள் கர்த்தரின் மறுசீரமைப்பு மற்றும் குணப்படுத்துதலை அனுபவிப்பீர்கள். * கர்த்தர் உங்களின் பலவீனப் படுக்கையிலிருந்து எழுப்புவார்.* அவர் உங்களுக்கு சரீரத்திலும், ஆத்துமாவிலும் சிகிச்சையளிப்பார்.* அவர் உங்கள் முடங்கிப்போன மனதைக் குணப்படுத்தி, உங்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க உங்களுக்கு உதவுவார்.* ஆம்! இயேசு உங்களை மீண்டும் எழுப்புவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய குறைபாடுகளைப் புரிந்துகொண்டு, என்னை திருத்திக் கொள்ள கிருபைத் தாரும். உமது மகிமைக்காக என் வாழ்க்கையை மீட்டருளும். ஆமென்.