வியாழன், 1 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். ஆதியாகமம் 28:14 * யாக்கோபு தன் மூத்த சகோதரனின் கோபத்திற்கு தப்பிக்க பெற்றோரின் அறிவுரைக்குக் கீழ்ப்படிந்து தன் தாயின் உறவினர்களிடம் செல்லும்போது, கனவில் தேவன் அவனிடம் பேசினார்.* யாக்கோபு தனது பெற்றோரை விட்டு விட்டு, அறியப்படாத, நிச்சயமற்ற பாதையில் செல்ல வேண்டிய நேரத்தில் முரண்பட்ட உணர்ச்சிகளை அனுபவித்திருக்கலாம்.* இருப்பினும், கர்த்தர் அவனைக் கவனித்து, அவனை எவ்வாறு எதிர்காலத்தில் ஆசீர்வதிப்பார் என்பதைத் தெளிவாகத் தெரிவித்தார். * தற்போது நீங்களும் இதே நிலையில் உள்ளீர்களா?* எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் அர்பணித்துவிட்டு அவர் பாதத்தில் நிம்மதியாக இளைப்பாறுங்கள்.* யாக்கோபின் கர்த்தர் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.* அவர் யாக்கோபின் வாழ்க்கையை மறுரூபமாக்கி பல ஆண்டுகளாக உலகிற்கு ஆசீர்வாதமான ஒரு தேசமாக மாற்றினார். * அதுபோல அவர் உங்களையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார்.* கர்த்தரின் விருப்பத்திற்கு உங்கள் வாழ்க்கையை சமர்ப்பிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?* அவருடைய வாக்குறுதியின்படி, அவர் உங்களையும் உங்கள் சந்ததியையும் ஆசீர்வதிப்பார், நீங்கள் அனைவரும் உலகத்திற்கு ஆசீர்வாதமாக மாறுவீர்கள். * கர்த்தர் வாக்குறுதி அளித்தால் அதைக் காப்பாற்றுவார்.* எனினும், நீங்கள் அவருடைய வழிகளில் நடக்க வேண்டும்.* தற்போதைய சூழ்நிலை உங்கள் நம்பிக்கையை வடிவமைக்க விடாதீர்கள்.* இயேசுவை நம்புங்கள்; எந்தச் சூழலையையும் எந்த நேரத்திலும் அவர் திருப்ப முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீங்கள் வாக்களித்தபடி என்னையும் என் பிள்ளைகளையும் உலகத்திற்கு ஆசீர்வாதமாக வைத்தருளும். ஆமென்.
உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம்...
“ஆதியாகமம் 28:14 * யாக்கோபு தன் மூத்த சகோதரனின் கோபத்திற்கு தப்பிக்க பெற்றோரின் அறிவுரைக்குக் கீழ்ப்படிந்து தன் தாயின் உறவினர்களிடம் செல்லும்போது, கனவில் தேவன் அவனிடம் பேசினார்.* யாக்கோபு தனது பெற்றோரை விட்டு விட்டு, அறியப்படாத, நிச்சயமற்ற பாதையில் செல்ல வேண்டிய நேரத்தில் முரண்பட்ட உணர்ச்சிகளை அனுபவித்திருக்கலாம்.* இருப்பினும், கர்த்தர் அவனைக் கவனித்து, அவனை எவ்வாறு எதிர்காலத்தில் ஆசீர்வதிப்பார் என்பதைத் தெளிவாகத் தெரிவித்தார். * தற்போது நீங்களும் இதே நிலையில் உள்ளீர்களா?* எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் அர்பணித்துவிட்டு அவர் பாதத்தில் நிம்மதியாக இளைப்பாறுங்கள்.* யாக்கோபின் கர்த்தர் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.* அவர் யாக்கோபின் வாழ்க்கையை மறுரூபமாக்கி பல ஆண்டுகளாக உலகிற்கு ஆசீர்வாதமான ஒரு தேசமாக மாற்றினார். * அதுபோல அவர் உங்களையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார்.* கர்த்தரின் விருப்பத்திற்கு உங்கள் வாழ்க்கையை சமர்ப்பிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?* அவருடைய வாக்குறுதியின்படி, அவர் உங்களையும் உங்கள் சந்ததியையும் ஆசீர்வதிப்பார், நீங்கள் அனைவரும் உலகத்திற்கு ஆசீர்வாதமாக மாறுவீர்கள். * கர்த்தர் வாக்குறுதி அளித்தால் அதைக் காப்பாற்றுவார்.* எனினும், நீங்கள் அவருடைய வழிகளில் நடக்க வேண்டும்.* தற்போதைய சூழ்நிலை உங்கள் நம்பிக்கையை வடிவமைக்க விடாதீர்கள்.* இயேசுவை நம்புங்கள்; எந்தச் சூழலையையும் எந்த நேரத்திலும் அவர் திருப்ப முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீங்கள் வாக்களித்தபடி என்னையும் என் பிள்ளைகளையும் உலகத்திற்கு ஆசீர்வாதமாக வைத்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

