புதன், 28 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. லூக்கா 1:13 * கர்த்தருடைய ஆலயத்தில் பணிபுரியும் ஆசாரியன் சகரியாவைப் பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.* அவர் ஆண்டவருடையப் பார்வையில் நீதியுள்ளவராகக் கருதப்பட்டார், அவருடைய பிரமாணங்களையும் கட்டளைகளையும் தவறின்றி உண்மையாகக் கடைப்பிடித்தார்.* இருப்பினும், பல வருடங்களாக மனமுவந்து ஜெபித்த போதிலும், அவருக்கும் அவருடைய மனைவிக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது.* அவர் வயது சென்றவராகி, நாட்கள் செல்லச் செல்ல தன் ஜெபங்களைக் கைவிட நினைத்திருக்கலாம்.* அவருடைய விசுவாசத்தைப் பற்றிய ஏளனங்களையும் கேள்விகளையும் அவர் சந்தித்திருக்கலாம்.* ஆனாலும், கர்த்தர் மீதான பக்தியிலும் அன்பிலும் அவர் உறுதியாக இருந்தார்.* இறுதியில், கர்த்தர் தனது சரியான நேரத்தில் சகரியாவின் ஜெபங்களுக்குப் பதில் அளித்தார்.* சகரியாவின் ஜெபம் கேட்கப்பட்டதைத் தெரிவிக்க ஒரு தேவதாதன் வந்தார். * நீங்களும் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறீர்களா, பதிலைப் எதிர்பார்த்து நீண்ட நாட்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்களோ?* நம்பிக்கையை இழந்து ஜெபிப்பதை நிறுத்தி விடாதீர்கள்.* குறிக்கப்பட்ட நேரத்தில் கர்த்தர் பதிலளிப்பார் என்று நம்புங்கள்.* அவர் ஒருபோதும் தாமதிக்க மாட்டார்.* உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில் பதிலளிப்பாரா,* அவர் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவார்.* உண்மையில், அவர் உங்கள் ஜெபங்களுக்கு விரைவில் பதிலளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் ஜெபங்களைக் கேட்டு, உமது ஆசீர்வாதங்களை என்மேல் பொழியும். ஆமென்.
உங்கள் வேண்டுதல் கேட்கப்பட்டது.
“புதன், 28 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. லூக்கா 1:13 * கர்த்தருடைய ஆலயத்தில் பணிபுரியும் ஆசாரியன் சகரியாவைப் பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.* அவர் ஆண்டவருடையப் பார்வையில் நீதியுள்ளவராகக் கருதப்பட்டார், அவருடைய பிரமாணங்களையும் கட்டளைகளையும் தவறின்றி உண்மையாகக் கடைப்பிடித்தார்.* இருப்பினும், பல வருடங்களாக மனமுவந்து ஜெபித்த போதிலும், அவருக்கும் அவருடைய மனைவிக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது.* அவர் வயது சென்றவராகி, நாட்கள் செல்லச் செல்ல தன் ஜெபங்களைக் கைவிட நினைத்திருக்கலாம்.* அவருடைய விசுவாசத்தைப் பற்றிய ஏளனங்களையும் கேள்விகளையும் அவர் சந்தித்திருக்கலாம்.* ஆனாலும், கர்த்தர் மீதான பக்தியிலும் அன்பிலும் அவர் உறுதியாக இருந்தார்.* இறுதியில், கர்த்தர் தனது சரியான நேரத்தில் சகரியாவின் ஜெபங்களுக்குப் பதில் அளித்தார்.* சகரியாவின் ஜெபம் கேட்கப்பட்டதைத் தெரிவிக்க ஒரு தேவதாதன் வந்தார். * நீங்களும் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறீர்களா, பதிலைப் எதிர்பார்த்து நீண்ட நாட்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்களோ?* நம்பிக்கையை இழந்து ஜெபிப்பதை நிறுத்தி விடாதீர்கள்.* குறிக்கப்பட்ட நேரத்தில் கர்த்தர் பதிலளிப்பார் என்று நம்புங்கள்.* அவர் ஒருபோதும் தாமதிக்க மாட்டார்.* உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில் பதிலளிப்பாரா,* அவர் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவார்.* உண்மையில், அவர் உங்கள் ஜெபங்களுக்கு விரைவில் பதிலளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் ஜெபங்களைக் கேட்டு, உமது ஆசீர்வாதங்களை என்மேல் பொழியும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

