← செய்திகளுக்குத் திரும்பு
அவருடைய நாமத்தில் நீங்கள் எதைக் கேட்டாலும், அவர் அதைச் செய்வார்.
படத்தைப் பதிவிறக்கு

அவருடைய நாமத்தில் நீங்கள் எதைக் கேட்டாலும், அவர் அதைச் செய்வார்.

“புதன், 21 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். யோவான் 14:14 அன்புள்ள தேவனுடையப் பிள்ளையே, * அனுதினமும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய வாக்குறுதியை இயேசு உங்களுக்கு உறுதியளித்துள்ளார்.* கடந்த காலத்தில் ஒருவேளை நீங்கள் கேட்டதை கர்த்தர் நிறைவேற்றவில்லை என்பது உண்மையாக இருக்கலாம்.* "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." என்று பரிசுத்த வேதாகமத்தின் மற்றொரு வசனம் கூறுகிறது. * இங்கே, "இயேசுவின் நாமத்தில் கேட்பது" என்ற வார்த்தைகளை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்.* இது இயேசுவுடனான உறவு என்று அழைக்கப்படும் மிக முக்கியமான பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிறது.* நீங்கள் இயேசுவை நம்பி அவருடன் தனிப்பட்ட உறவை வைத்திருந்தால், அவரே உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் முதன்மையானவராக இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.* எல்லா நேரத்திலும் உங்கள் இருதயம் சார்ந்த முதல் நபராக இயேசு இருக்கும் போது, நீங்கள் உரிமையுடனும், மிகுந்த நம்பிக்கையுடனும் அவரிடத்தில் கேட்பீர்கள்.* அத்தகைய உறவில் கர்த்தர் மகிழ்ச்சி அடைகிறார். * வாழ்க்கையில் உங்கள் முதல் மற்றும் முதன்மையான முன்னுரிமை அவர்தானா, அல்லது நெருக்கடி ஏற்படும் போது மட்டும் அவரை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?* இயேசுவோடு நெருக்கமாக இருப்பது, வாழ்க்கையை மறுரூபமாக்கி, அவருடைய திட்டம் மற்றும் நோக்கத்துடன் உங்கள் இருதயத்தை ஒத்திசைத்து விடுகிறது.* இயேசுவின் நாமத்தினாலே, பிதாவாகிய தேவனிடம், உரிமையோடு, கேட்பதற்கான அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள இது உதவும்.* இயேசு அந்த வேண்டுதல்களை ஒருபோதும் வெறுக்க மாட்டார், ஏனென்றால் அவை ஏற்கனவே அவருடைய விருப்பத்துடன் ஒத்திசைகின்றன.* எனவே, இயேசுவுடனான உங்கள் நெருக்கத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.* வாழ்க்கையின் மற்ற அம்சங்கள் தானாகவே நடக்கும்.. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மோடு நெருக்கமாக இருக்கவும், உமது சித்தத்தை அறிந்து, அதன்படி ஜெபிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 21 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். யோவான் 14:14 அன்புள்ள தேவனுடையப் பிள்ளையே, * அனுதினமும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய வாக்குறுதியை இயேசு உங்களுக்கு உறுதியளித்துள்ளார்.* கடந்த காலத்தில் ஒருவேளை நீங்கள் கேட்டதை கர்த்தர் நிறைவேற்றவில்லை என்பது உண்மையாக இருக்கலாம்.* “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” என்று பரிசுத்த வேதாகமத்தின் மற்றொரு வசனம் கூறுகிறது. * இங்கே, “இயேசுவின் நாமத்தில் கேட்பது” என்ற வார்த்தைகளை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்.* இது இயேசுவுடனான உறவு என்று அழைக்கப்படும் மிக முக்கியமான பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிறது.* நீங்கள் இயேசுவை நம்பி அவருடன் தனிப்பட்ட உறவை வைத்திருந்தால், அவரே உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் முதன்மையானவராக இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.* எல்லா நேரத்திலும் உங்கள் இருதயம் சார்ந்த முதல் நபராக இயேசு இருக்கும் போது, நீங்கள் உரிமையுடனும், மிகுந்த நம்பிக்கையுடனும் அவரிடத்தில் கேட்பீர்கள்.* அத்தகைய உறவில் கர்த்தர் மகிழ்ச்சி அடைகிறார். * வாழ்க்கையில் உங்கள் முதல் மற்றும் முதன்மையான முன்னுரிமை அவர்தானா, அல்லது நெருக்கடி ஏற்படும் போது மட்டும் அவரை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?* இயேசுவோடு நெருக்கமாக இருப்பது, வாழ்க்கையை மறுரூபமாக்கி, அவருடைய திட்டம் மற்றும் நோக்கத்துடன் உங்கள் இருதயத்தை ஒத்திசைத்து விடுகிறது.* இயேசுவின் நாமத்தினாலே, பிதாவாகிய தேவனிடம், உரிமையோடு, கேட்பதற்கான அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள இது உதவும்.* இயேசு அந்த வேண்டுதல்களை ஒருபோதும் வெறுக்க மாட்டார், ஏனென்றால் அவை ஏற்கனவே அவருடைய விருப்பத்துடன் ஒத்திசைகின்றன.* எனவே, இயேசுவுடனான உங்கள் நெருக்கத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.* வாழ்க்கையின் மற்ற அம்சங்கள் தானாகவே நடக்கும்.. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மோடு நெருக்கமாக இருக்கவும், உமது சித்தத்தை அறிந்து, அதன்படி ஜெபிக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.