← செய்திகளுக்குத் திரும்பு
இதோ, கர்த்தர் எல்லாவற்றையும் புதியதாக ஆக்குகிறார்.
படத்தைப் பதிவிறக்கு

இதோ, கர்த்தர் எல்லாவற்றையும் புதியதாக ஆக்குகிறார்.

“வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன். வெளிபடுத்தல் 21 :5 கர்த்தரை நம்புபவர்களுக்கு புதுப்பித்தல் ஒரு முக்கியமான மற்றும் ஊக்கமளிக்கும் செயலாகும். இன்று, நீங்கள் மறுமலர்ச்சி அல்லது மறுமலர்ச்சிக்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் சிதைந்து, மௌனமாக அல்லது முடங்கிப்போயிருக்கலாம். தர்க்கரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும், உங்கள் வாழ்வின் முடிவை நீங்கள் அடைந்துவிட்டதாகத் தோன்றலாம்.‌ நல்லது எதுவும் நிகழ வாய்ப்பில்லை என்று சூழ்நிலை இருக்கலாம். எவ்வாறாயினும், சகலத்தையும் புதியதாக மாற்றுவேன் என்று கர்த்தர் உறுதியளிக்கிறார். அது, எவ்வளவு மோசமாக சேதமடைந்த காரியங்களையும் பழுதுபார்ப்பதும் மறுசீரமைப்பதும் எப்பொழுதும் சாத்தியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. புதுப்பிக்கிற செயல்முறை உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் இருக்கும் வண்ணமாகவே இயேசுவிடம் திரும்பி வர வேண்டும். உங்கள் உடைந்த வாழ்க்கையை அவரிடம் கொண்டு வாருங்கள், அவர் அதை பொறுப்பேற்கட்டும். உங்கள் வாழ்க்கையைப் புதுப்பிப்பதற்கும் அதைச் சிறப்பானதாக்குவதற்கும் அவர் செயல்பட அனுமதியுங்கள். உங்கள் உடைந்த திருமணம், கஷ்டமான தொழில் வாழ்க்கை, வெறுமை, மீண்டும் மீண்டும் சந்திக்கும் தோல்விகள், சட்டவிரோத நடத்தைகளுக்கு அடிமையாதல், பிசாசின் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனம், எதுவாக இருந்தாலும், அதை கர்த்தரிடம் கொண்டு வந்து, அவற்றை அவரிடம் ஒப்படைக்கும் போது அவர் அதைச் சரிசெய்து, உயிரற்ற மற்றும் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் எல்லாவற்றிற்கும் மறு உயிரைக் கொடுப்பார். நித்தியத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலும் இயேசு கிறிஸ்துவில் உங்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு. அவர் உங்களை ஒடுக்குபவரை நசுக்கி, உங்களை இருளில் பிணைத்திருக்கும் துன்பம் மற்றும் மரணத்தின் கட்டுகளிலிருந்து உங்களை விடுவிப்பார். இன்றே உங்கள் அற்புதமான விடுதலையைப் பெறுங்கள். பழையவைகள் ஒழிந்து போகும். நீங்கள் கிறிஸ்துவில் மீண்டும் பிறந்து ஒரு புதிய வாழ்க்கையைப் பெறுவீர்கள். ஜெபிப்போம்: . என் வாழ்க்கையை மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த ஒன்றாக மாற்றவும். நம்பிக்கையற்ற மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன். வெளிபடுத்தல் 21 :5 கர்த்தரை நம்புபவர்களுக்கு புதுப்பித்தல் ஒரு முக்கியமான மற்றும் ஊக்கமளிக்கும் செயலாகும். இன்று, நீங்கள் மறுமலர்ச்சி அல்லது மறுமலர்ச்சிக்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் சிதைந்து, மௌனமாக அல்லது முடங்கிப்போயிருக்கலாம். தர்க்கரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும், உங்கள் வாழ்வின் முடிவை நீங்கள் அடைந்துவிட்டதாகத் தோன்றலாம்.‌ நல்லது எதுவும் நிகழ வாய்ப்பில்லை என்று சூழ்நிலை இருக்கலாம். எவ்வாறாயினும், சகலத்தையும் புதியதாக மாற்றுவேன் என்று கர்த்தர் உறுதியளிக்கிறார். அது, எவ்வளவு மோசமாக சேதமடைந்த காரியங்களையும் பழுதுபார்ப்பதும் மறுசீரமைப்பதும் எப்பொழுதும் சாத்தியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. புதுப்பிக்கிற செயல்முறை உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் இருக்கும் வண்ணமாகவே இயேசுவிடம் திரும்பி வர வேண்டும். உங்கள் உடைந்த வாழ்க்கையை அவரிடம் கொண்டு வாருங்கள், அவர் அதை பொறுப்பேற்கட்டும். உங்கள் வாழ்க்கையைப் புதுப்பிப்பதற்கும் அதைச் சிறப்பானதாக்குவதற்கும் அவர் செயல்பட அனுமதியுங்கள். உங்கள் உடைந்த திருமணம், கஷ்டமான தொழில் வாழ்க்கை, வெறுமை, மீண்டும் மீண்டும் சந்திக்கும் தோல்விகள், சட்டவிரோத நடத்தைகளுக்கு அடிமையாதல், பிசாசின் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனம், எதுவாக இருந்தாலும், அதை கர்த்தரிடம் கொண்டு வந்து, அவற்றை அவரிடம் ஒப்படைக்கும் போது அவர் அதைச் சரிசெய்து, உயிரற்ற மற்றும் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் எல்லாவற்றிற்கும் மறு உயிரைக் கொடுப்பார். நித்தியத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலும் இயேசு கிறிஸ்துவில் உங்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு. அவர் உங்களை ஒடுக்குபவரை நசுக்கி, உங்களை இருளில் பிணைத்திருக்கும் துன்பம் மற்றும் மரணத்தின் கட்டுகளிலிருந்து உங்களை விடுவிப்பார். இன்றே உங்கள் அற்புதமான விடுதலையைப் பெறுங்கள். பழையவைகள் ஒழிந்து போகும். நீங்கள் கிறிஸ்துவில் மீண்டும் பிறந்து ஒரு புதிய வாழ்க்கையைப் பெறுவீர்கள். ஜெபிப்போம்: . என் வாழ்க்கையை மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த ஒன்றாக மாற்றவும். நம்பிக்கையற்ற மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.