← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் கர்த்தரின் ஊழியர்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் கர்த்தரின் ஊழியர்.

“புதன், 14 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ என் ஊழியக்காரன். ஏசாயா 41:9 (TIRV) * கர்த்தருடையத் பிரதிநிதியாக, உங்கள் எஜமானரின் சேனையில் பணியாற்ற நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.* இயேசு பூமியில் இருந்தபோது சேவை தலைமைத்துவ பண்பை வாழ்ந்து காட்டினார்; இப்பொழுது நீங்களும் அப்படியே வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.* உலகின் மற்ற எல்லா வேலைகளையும் விட அவருக்கு சேவை செய்வது ஒரு மாபெரும் பாக்கியம் அல்லவா?* தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவருடைய வல்லமையையும், பலத்தையும் அவர் உங்களுக்கு தருகிறார்.* அவர் உங்களுக்கு எதிரியின் மீது அதிகாரத்தை தந்து, எதிரியின் திட்டங்களை வெல்ல உங்களுக்கு கிருபையையும், அதிகமான ஞானத்தையும் பொழிந்தருளுகிறார்.* பூமியில் நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். * நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கும்போது, அவர் உங்கள் வார்த்தைகளை அங்கீகரித்து மக்களுக்கு விடுதலையைத் தருகிறார்.* நீங்கள் ஒரு வெற்றியாளராக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள், எதுவும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது.* அவருடைய சாட்சியாக இருப்பதற்கும் அவருடைய மகிமையையும் கிருபையையும் பிரதிபலிக்கும்படியும் பரிசுத்த ஆவியின் மூலம் அவர் உங்களைப் பலப்படுத்துவார்.* உத்தம ஊழியராக அங்கீகரிக்கப்படுவதற்கு, நேர்மையாக அவருக்கு சேவை செய்யுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் முழு இருதயத்தோடும் உமக்குச் சேவை செய்யவும், இறுதிவரை உமக்கு நம்பிக்கையாக இருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 14 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ என் ஊழியக்காரன். ஏசாயா 41:9 (TIRV) * கர்த்தருடையத் பிரதிநிதியாக, உங்கள் எஜமானரின் சேனையில் பணியாற்ற நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.* இயேசு பூமியில் இருந்தபோது சேவை தலைமைத்துவ பண்பை வாழ்ந்து காட்டினார்; இப்பொழுது நீங்களும் அப்படியே வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.* உலகின் மற்ற எல்லா வேலைகளையும் விட அவருக்கு சேவை செய்வது ஒரு மாபெரும் பாக்கியம் அல்லவா?* தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவருடைய வல்லமையையும், பலத்தையும் அவர் உங்களுக்கு தருகிறார்.* அவர் உங்களுக்கு எதிரியின் மீது அதிகாரத்தை தந்து, எதிரியின் திட்டங்களை வெல்ல உங்களுக்கு கிருபையையும், அதிகமான ஞானத்தையும் பொழிந்தருளுகிறார்.* பூமியில் நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். * நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கும்போது, அவர் உங்கள் வார்த்தைகளை அங்கீகரித்து மக்களுக்கு விடுதலையைத் தருகிறார்.* நீங்கள் ஒரு வெற்றியாளராக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள், எதுவும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது.* அவருடைய சாட்சியாக இருப்பதற்கும் அவருடைய மகிமையையும் கிருபையையும் பிரதிபலிக்கும்படியும் பரிசுத்த ஆவியின் மூலம் அவர் உங்களைப் பலப்படுத்துவார்.* உத்தம ஊழியராக அங்கீகரிக்கப்படுவதற்கு, நேர்மையாக அவருக்கு சேவை செய்யுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் முழு இருதயத்தோடும் உமக்குச் சேவை செய்யவும், இறுதிவரை உமக்கு நம்பிக்கையாக இருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.