ஞாயிறு, 18 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள். நீதிமொழிகள் 20:7 இன்று தந்தையர் தினம், அனைத்து தந்தையர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். * குடும்பத்தில் தந்தைக்கு பல பங்கு உண்டு.* குடும்பத்தின் தேவைகளுக்கு பணம் சம்பாதிக்க வெளியில் செல்வதைத் தவிர, குடும்பத்தைப் பாதுகாப்பதில் அவர் முன்னிலை வகிக்கிறார்.* அவர் தனது குழந்தைகளுக்கு அவர்களுடைய சிறுவயதில் ஹீரோவாகவும், முன்மாதிரியாகவும் இருக்கிறார்.* நல்ல தலைவராக, தன் குழந்தைகளுக்குத் வழிகாட்டியாகவும், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கும் வகிக்கிறார். * தந்தையான கடவுள், உங்களுடைய தலைமுறைக்கு நன்மை செய்வதில் உங்கள் உத்தமத்தை கணக்கில் கொள்கிறார்.* ஆகவே உற்சாகமாக இருங்கள், உங்கள் நேர்மையை ஒருபோதும் எதற்காகவும் சமரசம் செய்யாதீர்கள்.* பலன்களை உடனே பார்க்க முடியாமல் போகலாம்.* இருப்பினும், இது நிச்சயமாக உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.* நீங்கள் பின்பற்றுவதற்கு பிதாவாகிய தேவனே ஒரு சிறந்த முன்மாதிரி.* நீங்கள் அவருடைய வழிகளைப் பின்பற்றினால் நீங்கள் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தந்தையாகவும் உங்கள் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாகவும் இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து நீதியாக வாழவும், என் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும்.ஆமென்.
நீதிமான் தன் உத்தமத்தில் நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன்...
“ஞாயிறு, 18 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள். நீதிமொழிகள் 20:7 இன்று தந்தையர் தினம், அனைத்து தந்தையர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். * குடும்பத்தில் தந்தைக்கு பல பங்கு உண்டு.* குடும்பத்தின் தேவைகளுக்கு பணம் சம்பாதிக்க வெளியில் செல்வதைத் தவிர, குடும்பத்தைப் பாதுகாப்பதில் அவர் முன்னிலை வகிக்கிறார்.* அவர் தனது குழந்தைகளுக்கு அவர்களுடைய சிறுவயதில் ஹீரோவாகவும், முன்மாதிரியாகவும் இருக்கிறார்.* நல்ல தலைவராக, தன் குழந்தைகளுக்குத் வழிகாட்டியாகவும், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கும் வகிக்கிறார். * தந்தையான கடவுள், உங்களுடைய தலைமுறைக்கு நன்மை செய்வதில் உங்கள் உத்தமத்தை கணக்கில் கொள்கிறார்.* ஆகவே உற்சாகமாக இருங்கள், உங்கள் நேர்மையை ஒருபோதும் எதற்காகவும் சமரசம் செய்யாதீர்கள்.* பலன்களை உடனே பார்க்க முடியாமல் போகலாம்.* இருப்பினும், இது நிச்சயமாக உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.* நீங்கள் பின்பற்றுவதற்கு பிதாவாகிய தேவனே ஒரு சிறந்த முன்மாதிரி.* நீங்கள் அவருடைய வழிகளைப் பின்பற்றினால் நீங்கள் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தந்தையாகவும் உங்கள் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாகவும் இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து நீதியாக வாழவும், என் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும்.ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

