ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். சங்கீதம் 55:22 அன்புள்ள தேவனுடையப் பிள்ளையே,* இயேசுவின் இரத்தம் உங்களை நீதிமான்களாக்கியது, கர்த்தர் உங்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார் என்பதையே நினைவூட்டுகிறது.* நீங்கள் கஷ்டங்களை சந்திக்கும் போது அவருடைய தாங்கும் சக்தியையும் சமாதானத்தையும் அனுபவிக்க முடியும்.* நீங்கள் அசைக்கப்பட மாட்டீர்கள். தானியேல் புத்தகத்தில், நீதிமானாகிய தானியேல், கர்த்தர்மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக, கடுமையான எதிர்ப்புகளையும் ஆபத்துகளையும் எப்படிச் சகித்தார் என்பதை வாசிக்கிறோம். பொறாமை கொண்ட அதிகாரிகள் தானியேலை அழிக்க முற்படுகின்றனர், அதற்காக முப்பது நாட்களுக்கு ராஜாவைத் தவிர வேறு எந்த கடவுளையும் அல்லது மனிதனையும் நோக்கி விண்ணப்பம் பண்ணத் தடைவிதிக்கும் கட்டளைப் பத்திரத்தில் கையொப்பமிடுவதற்கு ராஜா தரியுவை தூண்டுகின்றனர். சிங்கங்களின் கெபிக்குள் போடப்படுவர் என்ற அச்சுறுத்தல் இருந்தபோதிலும், தானியேல் கர்த்தர் மீதான தனது பக்தியை சமரசம் செய்ய மறுத்துவிட்டார். அவர் எப்பொழுதும் செய்ததைப் போலவே எருசலேமின் திசை நோக்கி ஒரு நாளைக்கு மூன்று முறை ஜெபித்தார். இதன் விளைவாக, தானியேல் உண்மையில் சிங்கங்களின் கெபிக்குள் போடப்பட்டார், ஆனால் கர்த்தரின் கரம் அவர் மீது இருந்தது. சிங்கங்களின் வாயை அடைத்து தானியேலைப் பாதுகாக்க அவர் தம்முடைய தூதரை அனுப்பினார். * துன்பங்களின் மத்தியிலும் நாம் கர்த்தருக்கு உண்மையாக இருக்கும்போது, நீதிமான்களாகிய நம்மை அழிக்க அவர் ஒருபொழுதும் அனுமதிக்க மாட்டார் என்பதை தானியேலின் கதை நமக்குக் காட்டுகிறது.* அவர் தானியேலைப் பாதுகாத்தது போல், உங்களையும் எல்லா அடக்குமுறைகளிலிருந்தும் விடுவிப்பார்.* தொடர்ந்து கர்த்தருக்கு உண்மையாக இருங்கள்.* நீங்கள் ஒரு வெற்றியாளர். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியான வாழ்க்கையை வாழ எனக்கு உதவிச் செய்யும், உமது கரங்களின் கீழ் என்னைப் பாதுகாப்பாக வைத்தருளும். ஆமென்.
நீதிமான்களை கர்த்தர் ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
“ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். சங்கீதம் 55:22 அன்புள்ள தேவனுடையப் பிள்ளையே,* இயேசுவின் இரத்தம் உங்களை நீதிமான்களாக்கியது, கர்த்தர் உங்களை ஒருபொழுதும் கைவிடமாட்டார் என்பதையே நினைவூட்டுகிறது.* நீங்கள் கஷ்டங்களை சந்திக்கும் போது அவருடைய தாங்கும் சக்தியையும் சமாதானத்தையும் அனுபவிக்க முடியும்.* நீங்கள் அசைக்கப்பட மாட்டீர்கள். தானியேல் புத்தகத்தில், நீதிமானாகிய தானியேல், கர்த்தர்மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக, கடுமையான எதிர்ப்புகளையும் ஆபத்துகளையும் எப்படிச் சகித்தார் என்பதை வாசிக்கிறோம். பொறாமை கொண்ட அதிகாரிகள் தானியேலை அழிக்க முற்படுகின்றனர், அதற்காக முப்பது நாட்களுக்கு ராஜாவைத் தவிர வேறு எந்த கடவுளையும் அல்லது மனிதனையும் நோக்கி விண்ணப்பம் பண்ணத் தடைவிதிக்கும் கட்டளைப் பத்திரத்தில் கையொப்பமிடுவதற்கு ராஜா தரியுவை தூண்டுகின்றனர். சிங்கங்களின் கெபிக்குள் போடப்படுவர் என்ற அச்சுறுத்தல் இருந்தபோதிலும், தானியேல் கர்த்தர் மீதான தனது பக்தியை சமரசம் செய்ய மறுத்துவிட்டார். அவர் எப்பொழுதும் செய்ததைப் போலவே எருசலேமின் திசை நோக்கி ஒரு நாளைக்கு மூன்று முறை ஜெபித்தார். இதன் விளைவாக, தானியேல் உண்மையில் சிங்கங்களின் கெபிக்குள் போடப்பட்டார், ஆனால் கர்த்தரின் கரம் அவர் மீது இருந்தது. சிங்கங்களின் வாயை அடைத்து தானியேலைப் பாதுகாக்க அவர் தம்முடைய தூதரை அனுப்பினார். * துன்பங்களின் மத்தியிலும் நாம் கர்த்தருக்கு உண்மையாக இருக்கும்போது, நீதிமான்களாகிய நம்மை அழிக்க அவர் ஒருபொழுதும் அனுமதிக்க மாட்டார் என்பதை தானியேலின் கதை நமக்குக் காட்டுகிறது.* அவர் தானியேலைப் பாதுகாத்தது போல், உங்களையும் எல்லா அடக்குமுறைகளிலிருந்தும் விடுவிப்பார்.* தொடர்ந்து கர்த்தருக்கு உண்மையாக இருங்கள்.* நீங்கள் ஒரு வெற்றியாளர். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியான வாழ்க்கையை வாழ எனக்கு உதவிச் செய்யும், உமது கரங்களின் கீழ் என்னைப் பாதுகாப்பாக வைத்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

