← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தரின் கிருபை உங்கள்மேல் இருப்பதாக
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தரின் கிருபை உங்கள்மேல் இருப்பதாக

“வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. சங்கீதம் 33:22 * நீங்கள் எங்கு சென்றாலும் சவால்களையும் தடைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ?* உங்கள் வேலை விஷயத்தில் உங்கள் மேல்அதிகாரி உங்கள் பதவி உயர்வுக்கு சாதகமாக இராததால் உங்கள் துறையில் முன்னேற முடியாமல் சிக்கித் தவிக்கிறீர்களோ ?* கர்த்தரிடமும், மக்களிடமும் தயவைப் பெறுவது நம்முடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியமானது. எஸ்தர் புத்தகத்தில், பெர்சியாவின் ராணியாக உயரும் எஸ்தர் என்ற இளம் யூத பெண்ணின் கதையை நாம் படிக்கிறோம். அவள் காலத்தில், ராஜாவின் ஆலோசகனான ஆமான், யூதர்களை அழிப்பதற்காக ஒரு பொல்லாத திட்டத்தை தீட்டினான். அந்த நேரத்தில் எஸ்தர் தனது குலத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான நிலையில் தள்ளப்படுகிறாள். எனவே உபவாசம், ஜெபம், கர்த்தருடைய ஆலோசனையைப் பெறுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறாள். கடைசியாக, தன் உயிரைப் பணயம் வைத்து, ராஜா அழைக்காமலே, அவரிடம் சென்று, அவருடையத் தயவை நாடி, ஆமானின் தீய திட்டங்களை வெளிப்படுத்துகிறாள். இதன் விளைவாக, ஆமானின் தீய திட்டங்கள் தலைகீழாக மாறி, யூதர்கள் காப்பாற்றப்பட்டனர். அதற்குப் பதிலாக ஆமான் கொல்லப்பட்டார். * கர்த்தரின் தயவு எதிர்பாராத விதத்தில்சாத்தியமில்லாத சூழ்நிலைகளிலும் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை எஸ்தரின் கதை விளக்குகிறது.* ஒரு ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க நேர்ந்த போதிலும், கர்த்தருடைய நோக்கங்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, அவருடைய தயவைப் பெற எஸ்தர் முயற்சித்தது, மக்களை விடுவிக்கும் கருவியாக அவளை மாற்றியது * அதுபோலவே, நீங்களும் உங்கள் இருதயத்தை அவருடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவருடையத் தயவை அனுபவிக்க முடியும்.* நீங்கள் அவருடைய ஆலோசனையை நாடி, விசுவாசத்தில் அடியெடுத்து வைத்து, அவருடைய நேரத்திற்கு காத்திருக்கும் போது, அவர் கதவுகளைத் திறந்து, புதிய வாய்ப்புகளை தந்து மிகப் பெரிய மாற்றத்தை உங்களுக்கு வழிவகுக்க முடியும்.* இயேசுவை நோக்கிப் பார்த்து, உங்களுக்குத் தேவையான அத்தனைத் தேவைகளையும் அவரிடம் சொல்லுங்கள்.* கர்த்தர் தம்முடைய கிருபையை உங்களுக்கு வழங்கும்போது உங்கள் நிலைமை ஒரு நொடியில் மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உமது தயவை எனக்குக் காட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. சங்கீதம் 33:22 * நீங்கள் எங்கு சென்றாலும் சவால்களையும் தடைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ?* உங்கள் வேலை விஷயத்தில் உங்கள் மேல்அதிகாரி உங்கள் பதவி உயர்வுக்கு சாதகமாக இராததால் உங்கள் துறையில் முன்னேற முடியாமல் சிக்கித் தவிக்கிறீர்களோ ?* கர்த்தரிடமும், மக்களிடமும் தயவைப் பெறுவது நம்முடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியமானது. எஸ்தர் புத்தகத்தில், பெர்சியாவின் ராணியாக உயரும் எஸ்தர் என்ற இளம் யூத பெண்ணின் கதையை நாம் படிக்கிறோம். அவள் காலத்தில், ராஜாவின் ஆலோசகனான ஆமான், யூதர்களை அழிப்பதற்காக ஒரு பொல்லாத திட்டத்தை தீட்டினான். அந்த நேரத்தில் எஸ்தர் தனது குலத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான நிலையில் தள்ளப்படுகிறாள். எனவே உபவாசம், ஜெபம், கர்த்தருடைய ஆலோசனையைப் பெறுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறாள். கடைசியாக, தன் உயிரைப் பணயம் வைத்து, ராஜா அழைக்காமலே, அவரிடம் சென்று, அவருடையத் தயவை நாடி, ஆமானின் தீய திட்டங்களை வெளிப்படுத்துகிறாள். இதன் விளைவாக, ஆமானின் தீய திட்டங்கள் தலைகீழாக மாறி, யூதர்கள் காப்பாற்றப்பட்டனர். அதற்குப் பதிலாக ஆமான் கொல்லப்பட்டார். * கர்த்தரின் தயவு எதிர்பாராத விதத்தில்சாத்தியமில்லாத சூழ்நிலைகளிலும் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை எஸ்தரின் கதை விளக்குகிறது.* ஒரு ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க நேர்ந்த போதிலும், கர்த்தருடைய நோக்கங்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, அவருடைய தயவைப் பெற எஸ்தர் முயற்சித்தது, மக்களை விடுவிக்கும் கருவியாக அவளை மாற்றியது * அதுபோலவே, நீங்களும் உங்கள் இருதயத்தை அவருடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவருடையத் தயவை அனுபவிக்க முடியும்.* நீங்கள் அவருடைய ஆலோசனையை நாடி, விசுவாசத்தில் அடியெடுத்து வைத்து, அவருடைய நேரத்திற்கு காத்திருக்கும் போது, அவர் கதவுகளைத் திறந்து, புதிய வாய்ப்புகளை தந்து மிகப் பெரிய மாற்றத்தை உங்களுக்கு வழிவகுக்க முடியும்.* இயேசுவை நோக்கிப் பார்த்து, உங்களுக்குத் தேவையான அத்தனைத் தேவைகளையும் அவரிடம் சொல்லுங்கள்.* கர்த்தர் தம்முடைய கிருபையை உங்களுக்கு வழங்கும்போது உங்கள் நிலைமை ஒரு நொடியில் மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உமது தயவை எனக்குக் காட்டும். ஆமென்.