← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருங்கள்; அவர் உங்களிடம் சாய்ந்து உங்கள் கூப்பிடுதலைக் கேட்பார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருங்கள்; அவர் உங்களிடம்...

“திங்கட்கிழமை, 17 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். சங்கீதம் 40:1 * காத்திருப்பு காலம் நம் வாழ்வில் சவாலானது.* கர்த்தரை நம்புவதை விட்டுவிட்டு சொந்தமாக பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கும் போது நாம் அடிக்கடி விஷயங்களை சிக்கலாக்குகிறோம்.* ஆனால், நீங்கள் கர்த்தரை நம்பி, நம்பிக்கையை கைவிடாமல் பொறுமையாக காத்திருந்தால், அவர் தக்க நேரத்தில் வந்து தனது மகத்துவத்தை வெளிப்படுத்துவார். வேதாகமத்தில், குழந்தைக்காக ஏங்கிய அன்னாள் என்ற பெண்ணின் கதையைப் படிக்கிறோம். பல வருடங்களாக, குழந்தையின்மையின் வலியையும், நிறைவேறாத கனவுகளின் மனவேதனையையும் தாங்கிக் கொண்டிருந்தாள். அவள் வேதனையில் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, தன் ஆத்துமாவை அவர் முன் ஊற்றினாள். அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், தேவன் தன் அழுகையின் சத்தத்தைக் கேட்பார் என்று நம்பி, அவருக்காகக் காத்திருந்தாள். கர்த்தர் அன்னாளின் உருக்கமான ஜெபங்களைக் கண்டு அதற்குப் பதிலளித்தார். சரியான நேரத்தில், அவள் கர்ப்பமாகி சாமுவேல் என்ற மகனைப் பெற்றெடுத்தாள், அவர் உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவரானார். * அன்னாளைப் போலவே, நீங்களும் விரக்தியில், மேலும் நம்பிக்கையை இழந்து கர்த்தரின் திட்டத்தைக் குறித்து கேள்விக்குறியில் காத்துக் கொண்டிருக்கலாம்.* உங்களுடையக் காத்திருப்பு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவோ, சுகத்திற்காகவோ, இழந்துப் போனதை மீட்டெடுப்பதற்காகவோ அல்லது நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஆசீர்வாதத்திற்காகவோ இருக்கலாம்.* கர்த்தர் உண்மையுள்ளவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவர் ஒருபோதும் தாமதிப்பதில்லை.* அன்னாளின் அழுகையைக் கேட்டு, அவளுக்குப் பதிலளித்த கர்த்தர், உங்களுக்கும் அவ்வாறே செய்வார்.* ஆம், அவர் உங்கள் ஜெபங்களைக் கேட்கிறார், தேவைகளை அறிந்திருக்கிறார், சரியான நேரத்தில் அவருடையத் திட்டத்தின்படி பதிலளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருக்க எனக்கு கிருபையையும் பலத்தையும் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 17 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். சங்கீதம் 40:1 * காத்திருப்பு காலம் நம் வாழ்வில் சவாலானது.* கர்த்தரை நம்புவதை விட்டுவிட்டு சொந்தமாக பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கும் போது நாம் அடிக்கடி விஷயங்களை சிக்கலாக்குகிறோம்.* ஆனால், நீங்கள் கர்த்தரை நம்பி, நம்பிக்கையை கைவிடாமல் பொறுமையாக காத்திருந்தால், அவர் தக்க நேரத்தில் வந்து தனது மகத்துவத்தை வெளிப்படுத்துவார். வேதாகமத்தில், குழந்தைக்காக ஏங்கிய அன்னாள் என்ற பெண்ணின் கதையைப் படிக்கிறோம். பல வருடங்களாக, குழந்தையின்மையின் வலியையும், நிறைவேறாத கனவுகளின் மனவேதனையையும் தாங்கிக் கொண்டிருந்தாள். அவள் வேதனையில் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, தன் ஆத்துமாவை அவர் முன் ஊற்றினாள். அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், தேவன் தன் அழுகையின் சத்தத்தைக் கேட்பார் என்று நம்பி, அவருக்காகக் காத்திருந்தாள். கர்த்தர் அன்னாளின் உருக்கமான ஜெபங்களைக் கண்டு அதற்குப் பதிலளித்தார். சரியான நேரத்தில், அவள் கர்ப்பமாகி சாமுவேல் என்ற மகனைப் பெற்றெடுத்தாள், அவர் உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவரானார். * அன்னாளைப் போலவே, நீங்களும் விரக்தியில், மேலும் நம்பிக்கையை இழந்து கர்த்தரின் திட்டத்தைக் குறித்து கேள்விக்குறியில் காத்துக் கொண்டிருக்கலாம்.* உங்களுடையக் காத்திருப்பு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவோ, சுகத்திற்காகவோ, இழந்துப் போனதை மீட்டெடுப்பதற்காகவோ அல்லது நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஆசீர்வாதத்திற்காகவோ இருக்கலாம்.* கர்த்தர் உண்மையுள்ளவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவர் ஒருபோதும் தாமதிப்பதில்லை.* அன்னாளின் அழுகையைக் கேட்டு, அவளுக்குப் பதிலளித்த கர்த்தர், உங்களுக்கும் அவ்வாறே செய்வார்.* ஆம், அவர் உங்கள் ஜெபங்களைக் கேட்கிறார், தேவைகளை அறிந்திருக்கிறார், சரியான நேரத்தில் அவருடையத் திட்டத்தின்படி பதிலளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருக்க எனக்கு கிருபையையும் பலத்தையும் தந்தருளும். ஆமென்.