← செய்திகளுக்குத் திரும்பு
பரிபூரண சமாதானத்தைக் கர்த்தர் வாக்களிக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

பரிபூரண சமாதானத்தைக் கர்த்தர் வாக்களிக்கிறார்.

“செவ்வாய், 18 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். ஏசாயா 26:3 * சமாதானம் இல்லாமல் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறீர்களோ?* பரிசுத்த வேதாகமம் இயேசுவை சமாதானப் பிரபு என்று கூறுகிறது.* இயேசு தம்முடைய வழிகளைப் பின்பற்றுகிற அனைவருக்கும் அவருடைய சமாதானத்தை வாக்களித்தார். புதிய ஏற்பாட்டில் இயேசு புயலை அமைதிப்படுத்துவதைப் பற்றிய அழகான ஒரு பதிவு உள்ளது. ஒரு நாள், இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒரு படகில் கலிலேயா கடலின் அக்கரைக்குச் சென்றனர். திடீரென்று ஒரு பயங்கரமான புயல் படகில் மோதி சீஷர்களை உயிருக்கு பயப்பட வைத்தது. உதவிக்காக பயந்த சீஷர்கள் தூங்கிக்கொண்டிருந்த இயேசுவை எழுப்பி, "ஆண்டவரே எங்களை இரட்சியும் மடிந்துபோகிறோம்" என்றார்கள். இயேசு எழுந்து காற்றையும் கடலையும் அதட்டினார். உடனடியாக ஒரு பெரிய அமைதி ஏற்பட்டது. புயல் ஓய்ந்தது, கடல் அமைதியானது. சீஷர்களின் பீதியும் பயமும் மாறி சமாதானம் வந்தது. * இயேசு தம் சீஷர்களுக்கு புயலை அமைதிப்படுத்தியது போல், உங்கள் வாழ்விலும் சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகிறார்.* உங்கள் கவனத்தை தொடர்ந்து அவர்மீது செலுத்தி அவருடைய உண்மைத்தன்மையில் நம்பிக்கை வைப்பதன் மூலம் அவருடைய பரிபூரண சமாதானத்தை அனுபவிக்க முடியும்.* அவர் உங்கள் நங்கூரமும், கன்மலையும், சமாதானத்தின் ஊற்றும் காரணருமாயிருக்கிறார்.* கர்த்தரை நம்பி, இந்த பரிபூரண சமாதானத்தை அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் இந்த விலைமதிப்பற்ற பரிசாகிய பரிபூரண சமாதானத்தை நிரந்தரமாக தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 18 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். ஏசாயா 26:3 * சமாதானம் இல்லாமல் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறீர்களோ?* பரிசுத்த வேதாகமம் இயேசுவை சமாதானப் பிரபு என்று கூறுகிறது.* இயேசு தம்முடைய வழிகளைப் பின்பற்றுகிற அனைவருக்கும் அவருடைய சமாதானத்தை வாக்களித்தார். புதிய ஏற்பாட்டில் இயேசு புயலை அமைதிப்படுத்துவதைப் பற்றிய அழகான ஒரு பதிவு உள்ளது. ஒரு நாள், இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒரு படகில் கலிலேயா கடலின் அக்கரைக்குச் சென்றனர். திடீரென்று ஒரு பயங்கரமான புயல் படகில் மோதி சீஷர்களை உயிருக்கு பயப்பட வைத்தது. உதவிக்காக பயந்த சீஷர்கள் தூங்கிக்கொண்டிருந்த இயேசுவை எழுப்பி, “ஆண்டவரே எங்களை இரட்சியும் மடிந்துபோகிறோம்” என்றார்கள். இயேசு எழுந்து காற்றையும் கடலையும் அதட்டினார். உடனடியாக ஒரு பெரிய அமைதி ஏற்பட்டது. புயல் ஓய்ந்தது, கடல் அமைதியானது. சீஷர்களின் பீதியும் பயமும் மாறி சமாதானம் வந்தது. * இயேசு தம் சீஷர்களுக்கு புயலை அமைதிப்படுத்தியது போல், உங்கள் வாழ்விலும் சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகிறார்.* உங்கள் கவனத்தை தொடர்ந்து அவர்மீது செலுத்தி அவருடைய உண்மைத்தன்மையில் நம்பிக்கை வைப்பதன் மூலம் அவருடைய பரிபூரண சமாதானத்தை அனுபவிக்க முடியும்.* அவர் உங்கள் நங்கூரமும், கன்மலையும், சமாதானத்தின் ஊற்றும் காரணருமாயிருக்கிறார்.* கர்த்தரை நம்பி, இந்த பரிபூரண சமாதானத்தை அனுபவியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் இந்த விலைமதிப்பற்ற பரிசாகிய பரிபூரண சமாதானத்தை நிரந்தரமாக தந்தருளும். ஆமென்.