திங்கட்கிழமை, 24 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். சங்கீதம் 55:22 * வாழ்க்கையில், பல நேரங்களில் நாம் மனதின் பாரங்களை சுமந்துக் கொண்டிருக்கிறோம்.* இந்தச் பாரச்சுமைகள் உடல் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ அல்லது ஆவிக்குரிய ரீதியாகவோ இருக்கலாம், இதனால் நாம் மிகவும் சோர்வாகவும் உணர்கிறோம்.* ஆனால், உங்கள் பாரங்களை கர்த்தரிடம் சுமத்த அவர் கூறுகிறார்.* நம்பமுடியவில்லை இல்லையா? வேதாகமத்தில் மோசேயைப் பாருங்கள். இஸ்ரவேலின் தலைவராக மக்களை வழிநடத்தின போது, உணவுப் பற்றாக்குறை, எதிரிகளின் தாக்குதல்கள், இஸ்ரவேலர்கள் பலநேரங்களில் ஒத்துழைக்க மறுத்தது போன்ற பல தடைகள் மற்றும் கஷ்டங்களால் அவர் மிகவும் பாரச்சுமையோடு இருந்தார். மோசே கர்த்தரின் இரக்கத்திற்காகவும், தயவிற்காகவும் கெஞ்சினார். கர்த்தரோ, தாம் வாக்களித்தபடி, வானத்திலிருந்து மன்னாவையும், பாறையிலிருந்து தண்ணீரையும், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பையும் அளித்து, அவர்களை பத்திரமாகப் பாதுகாத்தார். * மோசேயும் இஸ்ரவேலர்களும் கர்த்தருடைய தயவைஅனுபவித்தது போலவே நீங்களும் அனுபவிக்கலாம்.* அவருடைய மிகப் பெரிய வல்லமை உங்களுக்கு பலத்தையும், ஆறுதலையும், வழிநடத்துதலையும், தேவையான அனைத்தையும் தருகிறது.* உங்கள் பிரச்சனைகள், கவலைகள் மற்றும் சவால்களை கர்த்தர் முன் கொண்டு வந்து அவருடைய பாதத்தில் வையுங்கள்.* உங்கள் பாரங்களை கர்த்தர் மீது வைக்கும்போது, அவர் உங்களை ஆதரிப்பார்.* கடினமான காலங்களில் அவர் உங்களைக் காப்பாற்றுவார், உங்கள் சோர்வுற்ற ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் அளித்து, அவருடைய சமாதானத்தால் உங்களை நிரப்புவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை ஆதரித்து, உமது சமாதானத்தையும் என் ஆத்துமாவில் இளைப்பாறுதலையும் தந்தருளும். ஆமென்.
உங்கள் பாரத்தை கர்த்தர் மேல் வைத்துவிடுங்கள், அவர் உங்களை...
“திங்கட்கிழமை, 24 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். சங்கீதம் 55:22 * வாழ்க்கையில், பல நேரங்களில் நாம் மனதின் பாரங்களை சுமந்துக் கொண்டிருக்கிறோம்.* இந்தச் பாரச்சுமைகள் உடல் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ அல்லது ஆவிக்குரிய ரீதியாகவோ இருக்கலாம், இதனால் நாம் மிகவும் சோர்வாகவும் உணர்கிறோம்.* ஆனால், உங்கள் பாரங்களை கர்த்தரிடம் சுமத்த அவர் கூறுகிறார்.* நம்பமுடியவில்லை இல்லையா? வேதாகமத்தில் மோசேயைப் பாருங்கள். இஸ்ரவேலின் தலைவராக மக்களை வழிநடத்தின போது, உணவுப் பற்றாக்குறை, எதிரிகளின் தாக்குதல்கள், இஸ்ரவேலர்கள் பலநேரங்களில் ஒத்துழைக்க மறுத்தது போன்ற பல தடைகள் மற்றும் கஷ்டங்களால் அவர் மிகவும் பாரச்சுமையோடு இருந்தார். மோசே கர்த்தரின் இரக்கத்திற்காகவும், தயவிற்காகவும் கெஞ்சினார். கர்த்தரோ, தாம் வாக்களித்தபடி, வானத்திலிருந்து மன்னாவையும், பாறையிலிருந்து தண்ணீரையும், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பையும் அளித்து, அவர்களை பத்திரமாகப் பாதுகாத்தார். * மோசேயும் இஸ்ரவேலர்களும் கர்த்தருடைய தயவைஅனுபவித்தது போலவே நீங்களும் அனுபவிக்கலாம்.* அவருடைய மிகப் பெரிய வல்லமை உங்களுக்கு பலத்தையும், ஆறுதலையும், வழிநடத்துதலையும், தேவையான அனைத்தையும் தருகிறது.* உங்கள் பிரச்சனைகள், கவலைகள் மற்றும் சவால்களை கர்த்தர் முன் கொண்டு வந்து அவருடைய பாதத்தில் வையுங்கள்.* உங்கள் பாரங்களை கர்த்தர் மீது வைக்கும்போது, அவர் உங்களை ஆதரிப்பார்.* கடினமான காலங்களில் அவர் உங்களைக் காப்பாற்றுவார், உங்கள் சோர்வுற்ற ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் அளித்து, அவருடைய சமாதானத்தால் உங்களை நிரப்புவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை ஆதரித்து, உமது சமாதானத்தையும் என் ஆத்துமாவில் இளைப்பாறுதலையும் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

