திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும். 2 கொரிந்தியர் 12:9. * கர்த்தர் இரக்கமும் அன்பும் கொண்டவர்.* நாம் நிர்மூலமாகாதிருப்பது கர்த்தருடையக் கிருபையே என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* அவர் உங்களை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.* நீங்கள் கர்த்தரை முழுவதுமாகச் சார்ந்திருக்கும் போது, அவருடைய கிருபை உங்கள் வாழ்வில், குறிப்பாக தேவைப்படும் நேரங்களில் வெளிப்படுவதைக் காண்பீர்கள்.* நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் உணரும்போது, அவருடைய பலம் உங்களைப் பலப்படுத்தும். * சோர்ந்து போனவர்களுக்கு பலத்தைத் தருகிறார், சத்துவமில்லாதவர்களுக்கு சத்துவத்தைத் தருகிறார்.* பலவீனமான, பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில், உலகின் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் போது நீங்கள் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தும்.* இப்படிப்பட்ட சூழ்நிலைகள்தான் உங்களுக்கு கர்த்தருடைய ஒத்தாசை எத்தனை முக்கியத்துவம் என்பதை உணர்த்துகிறது. * நீங்கள் அவர்மீது உங்கள் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வைக்கும்போது அவருடைய பலம் உங்கள் பலவீனத்தில் பூரணமாக இருக்கிறது.* உங்கள் சொந்த திறன்களை மாத்திரம் நம்பாதீர்கள்.* நீங்கள் கர்த்தரின் ஞானத்தை நம்பினால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் அவருடைய மகிமையைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பலவீனத்தை வெல்ல உமது பலத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்
கர்த்தரின் கிருபை உங்களுக்குப் போதுமானது, ஏனென்றால் உங்கள்...
“திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும். 2 கொரிந்தியர் 12:9. * கர்த்தர் இரக்கமும் அன்பும் கொண்டவர்.* நாம் நிர்மூலமாகாதிருப்பது கர்த்தருடையக் கிருபையே என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* அவர் உங்களை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.* நீங்கள் கர்த்தரை முழுவதுமாகச் சார்ந்திருக்கும் போது, அவருடைய கிருபை உங்கள் வாழ்வில், குறிப்பாக தேவைப்படும் நேரங்களில் வெளிப்படுவதைக் காண்பீர்கள்.* நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் உணரும்போது, அவருடைய பலம் உங்களைப் பலப்படுத்தும். * சோர்ந்து போனவர்களுக்கு பலத்தைத் தருகிறார், சத்துவமில்லாதவர்களுக்கு சத்துவத்தைத் தருகிறார்.* பலவீனமான, பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில், உலகின் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் போது நீங்கள் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தும்.* இப்படிப்பட்ட சூழ்நிலைகள்தான் உங்களுக்கு கர்த்தருடைய ஒத்தாசை எத்தனை முக்கியத்துவம் என்பதை உணர்த்துகிறது. * நீங்கள் அவர்மீது உங்கள் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வைக்கும்போது அவருடைய பலம் உங்கள் பலவீனத்தில் பூரணமாக இருக்கிறது.* உங்கள் சொந்த திறன்களை மாத்திரம் நம்பாதீர்கள்.* நீங்கள் கர்த்தரின் ஞானத்தை நம்பினால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் அவருடைய மகிமையைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பலவீனத்தை வெல்ல உமது பலத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

