← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தரை விசுவாசித்து அவருடைய வாக்குத்தத்தத்தில் நம்பிக்கை வையுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தரை விசுவாசித்து அவருடைய வாக்குத்தத்தத்தில் நம்பிக்கை...

“புதன், 19 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.ரோமர் 4:21 * கர்த்தர் உங்களுக்கு அளித்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ?* ஆண்டவரின் வாக்குத்தத்தங்கள் நிஜ வாழ்க்கையில் எப்பொழுதாவது நிறைவேறுமா என்று யோசிக்கிறீர்களோ?* சூழ்நிலைகள் சாத்தியமற்றதாகத் தோன்றும்போதும், வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் காலம் மிகவும் நீண்டதாக தோன்றும்போதும், நம் விசுவாசம் உண்மையாக சோதிக்கப்படுகிறது. வேதாகமத்தில், ஆபிரகாம் மற்றும் சாராள் தம்பதியினரின் கதையை நாம் பார்க்கிறோம், அவர்களுடைய வயதான காலத்தில் குழந்தையைக் குறித்த வாக்குத்தத்தம் அவர்களுக்கு நிறைவேறினது. ஆபிரகாம் சந்தேகம் மற்றும் நிச்சயமற்ற தருணங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உடல் ரீதியாய் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த போதிலும், பல ஆண்டுகள் காத்திருந்த போதிலும் கர்த்தர் உண்மையானவர் என்று ஆபிரகாம் விசுவாசித்தார். கர்த்தர் அவருடைய விசுவாசத்தை அங்கிகரித்து, வாக்குப்பண்ணப்பட்ட குமாரனாகிய ஈசாக்கை அவருக்குக் கொடுத்தார். * ஆபிரகாமின் கதை, நம்முடைய தேவன் வாக்களித்ததை நிறைவேற்ற வல்லவர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.* அவருடைய வல்லமை எல்லையற்றது, அவருடைய உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.* உங்கள் விசுவாசம், தற்போதைய சூழ்நிலைகள், பலம் அல்லது உணர்ச்சிகளின் அடிப்படையில் இருக்கக்கூடாது. * கர்த்தர் சத்தியமானவர், உங்கள் வாழ்க்கையில் அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும் வல்லமைக் கொண்டவர்.* வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதற்கான கர்த்தரின் நேரமும் முறைகளும் உங்கள் எதிர்பார்ப்புகளிலிருந்து வேறுபடலாம்.* அவருடைய வார்த்தையையும் மற்றவர்களின் சாட்சிகளையும் படித்து சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கையையும் அசைக்க முடியாத விசுவாசத்தையும் நீங்கள் பலப்படுத்திக் கொள்ளலாம்.* அவர் வாக்களித்ததை நிறைவேற்ற வல்லவர்.* உற்சாகப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்க எனக்கு கிருபையையும் விசுவாசத்தையும் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 19 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.ரோமர் 4:21 * கர்த்தர் உங்களுக்கு அளித்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ?* ஆண்டவரின் வாக்குத்தத்தங்கள் நிஜ வாழ்க்கையில் எப்பொழுதாவது நிறைவேறுமா என்று யோசிக்கிறீர்களோ?* சூழ்நிலைகள் சாத்தியமற்றதாகத் தோன்றும்போதும், வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் காலம் மிகவும் நீண்டதாக தோன்றும்போதும், நம் விசுவாசம் உண்மையாக சோதிக்கப்படுகிறது. வேதாகமத்தில், ஆபிரகாம் மற்றும் சாராள் தம்பதியினரின் கதையை நாம் பார்க்கிறோம், அவர்களுடைய வயதான காலத்தில் குழந்தையைக் குறித்த வாக்குத்தத்தம் அவர்களுக்கு நிறைவேறினது. ஆபிரகாம் சந்தேகம் மற்றும் நிச்சயமற்ற தருணங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உடல் ரீதியாய் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த போதிலும், பல ஆண்டுகள் காத்திருந்த போதிலும் கர்த்தர் உண்மையானவர் என்று ஆபிரகாம் விசுவாசித்தார். கர்த்தர் அவருடைய விசுவாசத்தை அங்கிகரித்து, வாக்குப்பண்ணப்பட்ட குமாரனாகிய ஈசாக்கை அவருக்குக் கொடுத்தார். * ஆபிரகாமின் கதை, நம்முடைய தேவன் வாக்களித்ததை நிறைவேற்ற வல்லவர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.* அவருடைய வல்லமை எல்லையற்றது, அவருடைய உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.* உங்கள் விசுவாசம், தற்போதைய சூழ்நிலைகள், பலம் அல்லது உணர்ச்சிகளின் அடிப்படையில் இருக்கக்கூடாது. * கர்த்தர் சத்தியமானவர், உங்கள் வாழ்க்கையில் அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும் வல்லமைக் கொண்டவர்.* வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதற்கான கர்த்தரின் நேரமும் முறைகளும் உங்கள் எதிர்பார்ப்புகளிலிருந்து வேறுபடலாம்.* அவருடைய வார்த்தையையும் மற்றவர்களின் சாட்சிகளையும் படித்து சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கையையும் அசைக்க முடியாத விசுவாசத்தையும் நீங்கள் பலப்படுத்திக் கொள்ளலாம்.* அவர் வாக்களித்ததை நிறைவேற்ற வல்லவர்.* உற்சாகப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்க எனக்கு கிருபையையும் விசுவாசத்தையும் தந்தருளும். ஆமென்.