← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தரே உங்கள் மகிமையாக இருப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தரே உங்கள் மகிமையாக இருப்பார்.

“திங்கட்கிழமை, 9 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். ஏசாயா 60:19. * நீங்கள் உங்கள் பாதுகாப்பின்மையை நினைத்தும், கடந்த கால தவறுகளால் வந்த அவமானத்தை நினைத்தும் புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா?* மேன்மையான மற்றும் சிறப்பான நாட்களைக் இனிமேல் காண்பது சாத்தியமற்றது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? * நேர்த்தியானவர்கள் என்று இவ்வுலகில் யாரும் இல்லை.* எல்லோரும் பாவம் செய்து தேவனின் மகிமையை இழந்தவர்களே.* ஆனாலும், தொடர்ந்து பாவத்தில் வாழ்வதற்கு இது ஒரு சாக்குப்போக்காக இருக்க முடியாது. * நம்முடைய தேவன் நீதியுள்ளவர், பாரபட்சமற்றவர்.* தன்னிடம் வரும் அனைவருக்கும் உதவிச் செய்வதாக, அவர் தன் அன்பினிமித்தம் வாக்குறுதி அளித்துள்ளார். * இனி நீங்கள் இருளில் வாழ வேண்டிய அவசியமில்லை.* உங்கள் வாழ்வில் ஒளியாகிய இயேசு வருகிறார்.* அவர் உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், அவருடைய மகிமை உங்களுக்குள்ளும், உங்கள் மேலும் காணப்படும். * உங்களை நீங்களே கேவலமாக நினைப்பதை நிறுத்துங்கள்.* உங்கள் சுய கோட்டையாகிய அரணிலிருந்து வெளியே வந்து உங்களை நீங்களே தண்டிப்பதை நிறுத்துங்கள்.* உங்கள் கர்த்தர் உங்கள் மகிமையாக இருப்பார், நீங்கள் இழந்த பெயரையும் மரியாதையையும் மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்கு நன்றி. எதிர்காலத்தை எதிர்கொள்ள என் விசுவாசத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகப்படுத்தும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். ஏசாயா 60:19. * நீங்கள் உங்கள் பாதுகாப்பின்மையை நினைத்தும், கடந்த கால தவறுகளால் வந்த அவமானத்தை நினைத்தும் புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா?* மேன்மையான மற்றும் சிறப்பான நாட்களைக் இனிமேல் காண்பது சாத்தியமற்றது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? * நேர்த்தியானவர்கள் என்று இவ்வுலகில் யாரும் இல்லை.* எல்லோரும் பாவம் செய்து தேவனின் மகிமையை இழந்தவர்களே.* ஆனாலும், தொடர்ந்து பாவத்தில் வாழ்வதற்கு இது ஒரு சாக்குப்போக்காக இருக்க முடியாது. * நம்முடைய தேவன் நீதியுள்ளவர், பாரபட்சமற்றவர்.* தன்னிடம் வரும் அனைவருக்கும் உதவிச் செய்வதாக, அவர் தன் அன்பினிமித்தம் வாக்குறுதி அளித்துள்ளார். * இனி நீங்கள் இருளில் வாழ வேண்டிய அவசியமில்லை.* உங்கள் வாழ்வில் ஒளியாகிய இயேசு வருகிறார்.* அவர் உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், அவருடைய மகிமை உங்களுக்குள்ளும், உங்கள் மேலும் காணப்படும். * உங்களை நீங்களே கேவலமாக நினைப்பதை நிறுத்துங்கள்.* உங்கள் சுய கோட்டையாகிய அரணிலிருந்து வெளியே வந்து உங்களை நீங்களே தண்டிப்பதை நிறுத்துங்கள்.* உங்கள் கர்த்தர் உங்கள் மகிமையாக இருப்பார், நீங்கள் இழந்த பெயரையும் மரியாதையையும் மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்கு நன்றி. எதிர்காலத்தை எதிர்கொள்ள என் விசுவாசத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகப்படுத்தும். ஆமென்.