ஞாயிற்றுக்கிழமை, 18 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். கொலோசெயர் 4:2 தேவனுடன் தொடர்புகொள்வதே ஜெபம் ஆகும். இது, உங்களுக்கும் கர்த்தராகிய இயேசுவுக்கும் இடையிலான ஒரு நெருக்கமான உரையாடல். இதில், உங்கள் இருதயத்தின் ஆசைகளையும் தேவைகளையும் நேர்மையாய் வெளிப்படுத்துவதாயிருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் நோக்கமும் அர்த்தமுள்ளதுமாயும் இருக்க வேண்டும். எனவே, உண்மையான ஜெபம் என்பது பேருக்காகச் செய்யப்பட முடியாது. ஜெபத்தில் மனப்பாடம் செய்யப்பட்ட அல்லது எழுதப்பட்ட பகுதிகளை வழக்கமாக வாசிப்பதன் மூலம் இருதயத்திலிருந்து உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது. தேவனுடனான உங்கள் உறவு கட்டாயத்தால் அல்ல. ஆனால், நன்றியுடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை மற்றும் ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறீர்களா? அதைத் தினமும் அவரிடம் தெரிவிக்கிறீர்களா? ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் தேவனுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி அவரிடம் கூறுவது, அவருடன் ஓர் அர்த்தமுள்ள தொடர்பை வளர்க்கும். இது, உங்கள் மீட்பருடன் உங்களைத் தொடர்ந்து இணைந்திருக்க வைக்கும் ஆரோக்கியமானதொரு பழக்கமாகும். அதை அசட்டை பண்ணாதீர்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, ஜெபிக்கும்போது விழிப்புடனும் நோக்கத்துடனும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். உம்முடைய எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் என் இருதயம் நன்றியுணர்வினால் நிரப்பப்படட்டும். ஆமென்.
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில்...
“கொலோசெயர் 4:2 தேவனுடன் தொடர்புகொள்வதே ஜெபம் ஆகும். இது, உங்களுக்கும் கர்த்தராகிய இயேசுவுக்கும் இடையிலான ஒரு நெருக்கமான உரையாடல். இதில், உங்கள் இருதயத்தின் ஆசைகளையும் தேவைகளையும் நேர்மையாய் வெளிப்படுத்துவதாயிருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் நோக்கமும் அர்த்தமுள்ளதுமாயும் இருக்க வேண்டும். எனவே, உண்மையான ஜெபம் என்பது பேருக்காகச் செய்யப்பட முடியாது. ஜெபத்தில் மனப்பாடம் செய்யப்பட்ட அல்லது எழுதப்பட்ட பகுதிகளை வழக்கமாக வாசிப்பதன் மூலம் இருதயத்திலிருந்து உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது. தேவனுடனான உங்கள் உறவு கட்டாயத்தால் அல்ல. ஆனால், நன்றியுடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை மற்றும் ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறீர்களா? அதைத் தினமும் அவரிடம் தெரிவிக்கிறீர்களா? ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் தேவனுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி அவரிடம் கூறுவது, அவருடன் ஓர் அர்த்தமுள்ள தொடர்பை வளர்க்கும். இது, உங்கள் மீட்பருடன் உங்களைத் தொடர்ந்து இணைந்திருக்க வைக்கும் ஆரோக்கியமானதொரு பழக்கமாகும். அதை அசட்டை பண்ணாதீர்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, ஜெபிக்கும்போது விழிப்புடனும் நோக்கத்துடனும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். உம்முடைய எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் என் இருதயம் நன்றியுணர்வினால் நிரப்பப்படட்டும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

