← செய்திகளுக்குத் திரும்பு
அவரை நோக்கிப் பார்ப்பவர்கள் பிரகாசமடைவார்கள்; அவர்களின் முகங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
படத்தைப் பதிவிறக்கு

அவரை நோக்கிப் பார்ப்பவர்கள் பிரகாசமடைவார்கள்; அவர்களின்...

“வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீதம் 34:5. இன்றைய சமுதாயத்தில் தேவன்மீது நம்பிக்கை வைப்பது முட்டாள்தனமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், உங்கள் கண்களைக் கர்த்தரை நோக்கி உயர்த்துவது அவர்மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். * இயேசு உங்களுடன் அதிக நேரம் செலவிட வாஞ்சிக்கிறார். மேலும் அவரிடம் கிட்டிச் சேரும்போது, அவருடைய கிருபை, தயவு மற்றும் மகிமையை நீங்கள் அதிகமாய் அனுபவிப்பீர்கள்.* உங்கள் முகம் அவருடைய பிரகாசத்தைப் பிரதிபலிக்கும், அவருடைய அன்பினால் உங்கள் ஜீவியம் மறுரூபமாகும். * இயேசுவுடனான உங்கள் உறவைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படுவது எளிது.* ஆனால் அவருடனான உங்கள் உறவு தனிப்பட்டதும் தனித்துவமானதும் என்பதை நீங்கள் நினைவிற்கொள்ள வேண்டும்.* மற்றவர்களின் கருத்துக்களில் கவனம் செலுத்தாமல், இயேசுவோடு உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.* நீங்கள் அவருடன் அதிக நேரம் செலவிடும்போது, அவருடைய சாயலின்(சுபாவத்தின்) அழகையும், அன்பின் ஆழத்தையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். * மெய்யான மகிழ்ச்சி, அமைதி மற்றும் நிறைவை அவருடைய பிரசன்னத்தில் நீங்கள் காண்பீர்கள்.* நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள் என்று அவர் உங்கள்மேல் கொண்ட அன்பினால் உறுதியாக நம்பலாம். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமையான பிரசன்னத்தால் என்னை நிரப்பும். உமது அன்பை ஒருபொழுதும் இழக்காமல் இருக்க எனக்கு உதவிச் செய்யும். என் வாழ்வு உமது கிருபையின் பிரதிபலிப்பாய் அமையட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீதம் 34:5. இன்றைய சமுதாயத்தில் தேவன்மீது நம்பிக்கை வைப்பது முட்டாள்தனமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், உங்கள் கண்களைக் கர்த்தரை நோக்கி உயர்த்துவது அவர்மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். * இயேசு உங்களுடன் அதிக நேரம் செலவிட வாஞ்சிக்கிறார். மேலும் அவரிடம் கிட்டிச் சேரும்போது, அவருடைய கிருபை, தயவு மற்றும் மகிமையை நீங்கள் அதிகமாய் அனுபவிப்பீர்கள்.* உங்கள் முகம் அவருடைய பிரகாசத்தைப் பிரதிபலிக்கும், அவருடைய அன்பினால் உங்கள் ஜீவியம் மறுரூபமாகும். * இயேசுவுடனான உங்கள் உறவைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படுவது எளிது.* ஆனால் அவருடனான உங்கள் உறவு தனிப்பட்டதும் தனித்துவமானதும் என்பதை நீங்கள் நினைவிற்கொள்ள வேண்டும்.* மற்றவர்களின் கருத்துக்களில் கவனம் செலுத்தாமல், இயேசுவோடு உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.* நீங்கள் அவருடன் அதிக நேரம் செலவிடும்போது, அவருடைய சாயலின்(சுபாவத்தின்) அழகையும், அன்பின் ஆழத்தையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். * மெய்யான மகிழ்ச்சி, அமைதி மற்றும் நிறைவை அவருடைய பிரசன்னத்தில் நீங்கள் காண்பீர்கள்.* நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள் என்று அவர் உங்கள்மேல் கொண்ட அன்பினால் உறுதியாக நம்பலாம். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமையான பிரசன்னத்தால் என்னை நிரப்பும். உமது அன்பை ஒருபொழுதும் இழக்காமல் இருக்க எனக்கு உதவிச் செய்யும். என் வாழ்வு உமது கிருபையின் பிரதிபலிப்பாய் அமையட்டும். ஆமென்