← செய்திகளுக்குத் திரும்பு
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்
படத்தைப் பதிவிறக்கு

கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்

“சங்கீதம் 126:5 * நீங்கள் வேலையில் கடினமாய் உழைத்தும், அங்கீகரிக்கப்படாததாக உணர்ந்தால், அது உங்களை ஊக்கமிழக்கச் செய்யலாம்.* இருப்பினும், வேலையிலிருந்து வெளியில் வருவது அல்லது வேலையை நிறுத்தி விடுவது தீர்வாகாது.* அதற்குப் பதிலாக, இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருந்து உங்கள் உள்ளார்ந்த உணர்ச்சிகளையும் வலிகளையும் புரிந்துகொள்ளும் கர்த்தரைப் பற்றிக்கொள்ளுங்கள். * இன்று நீங்கள் சிந்தும் கண்ணீர், வயலில் விதைக்கப்படும் விதைகளைப் போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை காலப்போக்கில் செழிப்பான அறுவடையாய் வளரும்.* உங்கள் கடின உழைப்பின் பலனை மிகுந்த மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் விரைவில் அறுவடை செய்வீர்கள்.* அதுவுமல்லாமல், உங்கள் துன்பத்திற்கு ஈடாகத் தேவனிடமிருந்து நீங்கள் பெறும் ஆசீர்வாதங்கள் பல மடங்காயிருக்கும்.* எனவே, நம்பிக்கையை இழக்காமல் உங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்.* பிரகாசமான நாட்கள் இனி வரவுள்ளனவென்று நம்பி தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கண்ணீருக்கும் துன்பங்களுக்கும் தக்க பலனை எனக்குத் தந்து, மகிழ்ச்சியின் பாடல்களால் என்னை நிரப்பும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 4 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். சங்கீதம் 126:5 * நீங்கள் வேலையில் கடினமாய் உழைத்தும், அங்கீகரிக்கப்படாததாக உணர்ந்தால், அது உங்களை ஊக்கமிழக்கச் செய்யலாம்.* இருப்பினும், வேலையிலிருந்து வெளியில் வருவது அல்லது வேலையை நிறுத்தி விடுவது தீர்வாகாது.* அதற்குப் பதிலாக, இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருந்து உங்கள் உள்ளார்ந்த உணர்ச்சிகளையும் வலிகளையும் புரிந்துகொள்ளும் கர்த்தரைப் பற்றிக்கொள்ளுங்கள். * இன்று நீங்கள் சிந்தும் கண்ணீர், வயலில் விதைக்கப்படும் விதைகளைப் போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை காலப்போக்கில் செழிப்பான அறுவடையாய் வளரும்.* உங்கள் கடின உழைப்பின் பலனை மிகுந்த மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் விரைவில் அறுவடை செய்வீர்கள்.* அதுவுமல்லாமல், உங்கள் துன்பத்திற்கு ஈடாகத் தேவனிடமிருந்து நீங்கள் பெறும் ஆசீர்வாதங்கள் பல மடங்காயிருக்கும்.* எனவே, நம்பிக்கையை இழக்காமல் உங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்.* பிரகாசமான நாட்கள் இனி வரவுள்ளனவென்று நம்பி தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கண்ணீருக்கும் துன்பங்களுக்கும் தக்க பலனை எனக்குத் தந்து, மகிழ்ச்சியின் பாடல்களால் என்னை நிரப்பும். ஆமென்.