வியாழன், 5 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். தீத்து 2:7 (TERV) மற்றவர்கள் தாங்கள் பிரசங்கிப்பதைக் கடைப்பிடிக்கவில்லை என்று நாம் அடிக்கடி அவர்களை சுட்டிக் காட்டுகிறோம். பிறர் வாழ்வில் குறைகளைக் காண்கிறோம். தேவன் தமது பிள்ளைகள் ஒவ்வொரும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளிலும் நற்கிரியைகளை வெளிப்படுத்தும்படி இயேசு நம்மை அழைக்கிறார். நமது சாதனைகளினால் நாம் திருப்தி அடையவோ அல்லது மிதப்பாய் இருக்கவோ கூடாது. மாறாய், இவ்வுலகப் பயணத்தை நிறைவு செய்யும் வரை நற்கிரியைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மற்றவர்களை குறைகூறுவதிலோ அவர்களின் தவறுகளை எடுத்துரைப்பதிலோ நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாறாக, நாமே நேர்மையான முன்மாதிரிகளாய் இருக்க முயற்சி செய்வதில் கவனம் செலுத்துவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நற்செயல்களுக்கு முன்மாதிரியாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நற்கிரியைகளுக்கு முன் மாதிரியாய் இருங்கள்
“வியாழன், 5 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். தீத்து 2:7 (TERV) மற்றவர்கள் தாங்கள் பிரசங்கிப்பதைக் கடைப்பிடிக்கவில்லை என்று நாம் அடிக்கடி அவர்களை சுட்டிக் காட்டுகிறோம். பிறர் வாழ்வில் குறைகளைக் காண்கிறோம். தேவன் தமது பிள்ளைகள் ஒவ்வொரும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளிலும் நற்கிரியைகளை வெளிப்படுத்தும்படி இயேசு நம்மை அழைக்கிறார். நமது சாதனைகளினால் நாம் திருப்தி அடையவோ அல்லது மிதப்பாய் இருக்கவோ கூடாது. மாறாய், இவ்வுலகப் பயணத்தை நிறைவு செய்யும் வரை நற்கிரியைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மற்றவர்களை குறைகூறுவதிலோ அவர்களின் தவறுகளை எடுத்துரைப்பதிலோ நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாறாக, நாமே நேர்மையான முன்மாதிரிகளாய் இருக்க முயற்சி செய்வதில் கவனம் செலுத்துவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நற்செயல்களுக்கு முன்மாதிரியாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

