வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. கொலோசெயர் 2:3 ஞானம் என்பது, தனக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் நிகழ்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும். இவ்வுலகின் சிக்கல்களைக் கடந்து செல்வது அவசியமாயிருக்கிறது. ஒருவர் எந்த இடத்திலும் அறிவைப் பெறலாம். ஆனால், ஞானம் என்பது பணத்தால் அல்லது புகழால் வாங்க முடியாததும் தனித்தன்மை வாய்ந்ததுமாய் இருக்கிறது. நமது அனுபவங்களைப் பரிசோதித்துப் பார்ப்பதன் மூலமும், நம்முடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், புதிய யோசனைகள் மற்றும் முன்னோக்குகளுக்குத் திறந்த மனதுடனிருப்பதன் மூலமும் ஞானம் வருகிறது. ஞானத்தின் மற்றொரு முக்கியமான ஆதாரம் இயேசுவே. அவரிடமிருந்து கற்றுக்கொள்வது விலைமதிப்பற்றது. உலகத்திலிருந்து ஞானத்தைத் தேடுவதற்குப் பதிலாகத், தேவனிடம் ஞானத்தைக் கேட்டு அதைப் பெற்ற சாலொமோன் ராஜாவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது நல்லது. சாலொமோன் பூமியிலேயே மிகுந்த ஞானமுள்ள ராஜாவாய் அறியப்பட்டார். 1. நீங்கள் ஞானத்தைத் தேடுகிறீர்களா?2. அறிவு இருந்தாலும், நீங்கள் முக்கியமான தருணங்களில் சரியான முடிவுகளை எடுக்கப் போராடுகிறீர்களா? சில குறிப்புகள்:- தேவனுடைய வார்த்தையைப் படித்து புரிந்து கொள்வதில் நேரத்தைச் செலவிடுங்கள்.- இயேசுவிடமிருந்து தனிப்பட்ட புரிதலைப் பெற அவருடன் நெருக்கமாய் இணைந்திருங்கள்.- இயேசுவிடம் அதிக ஞானத்தைக் கேளுங்கள், அவர் நிச்சயமாகக் கொடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே ஞானத்தின் ஆதாரம். அதிக ஞானத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.
ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் இயேசுவுக்குள்...
“3 ஞானம் என்பது, தனக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் நிகழ்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும். இவ்வுலகின் சிக்கல்களைக் கடந்து செல்வது அவசியமாயிருக்கிறது. ஒருவர் எந்த இடத்திலும் அறிவைப் பெறலாம். ஆனால், ஞானம் என்பது பணத்தால் அல்லது புகழால் வாங்க முடியாததும் தனித்தன்மை வாய்ந்ததுமாய் இருக்கிறது. நமது அனுபவங்களைப் பரிசோதித்துப் பார்ப்பதன் மூலமும், நம்முடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், புதிய யோசனைகள் மற்றும் முன்னோக்குகளுக்குத் திறந்த மனதுடனிருப்பதன் மூலமும் ஞானம் வருகிறது. ஞானத்தின் மற்றொரு முக்கியமான ஆதாரம் இயேசுவே. அவரிடமிருந்து கற்றுக்கொள்வது விலைமதிப்பற்றது. உலகத்திலிருந்து ஞானத்தைத் தேடுவதற்குப் பதிலாகத், தேவனிடம் ஞானத்தைக் கேட்டு அதைப் பெற்ற சாலொமோன் ராஜாவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது நல்லது. சாலொமோன் பூமியிலேயே மிகுந்த ஞானமுள்ள ராஜாவாய் அறியப்பட்டார். 1. நீங்கள் ஞானத்தைத் தேடுகிறீர்களா?2. அறிவு இருந்தாலும், நீங்கள் முக்கியமான தருணங்களில் சரியான முடிவுகளை எடுக்கப் போராடுகிறீர்களா? சில குறிப்புகள்:- தேவனுடைய வார்த்தையைப் படித்து புரிந்து கொள்வதில் நேரத்தைச் செலவிடுங்கள்.- இயேசுவிடமிருந்து தனிப்பட்ட புரிதலைப் பெற அவருடன் நெருக்கமாய் இணைந்திருங்கள்.- இயேசுவிடம் அதிக ஞானத்தைக் கேளுங்கள், அவர் நிச்சயமாகக் கொடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே ஞானத்தின் ஆதாரம். அதிக ஞானத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

