← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்களை தேவஆவியாலும், ஞானம், புத்தி, அறிவு மற்றும் அனைத்து வகையான திறன்களாலும் நிரப்புவார்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்களை தேவஆவியாலும், ஞானம், புத்தி, அறிவு மற்றும்...

“திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவ ஆவியால் பெசலெயேலை நிரப்பியுள்ளார். பலவகை காரியங்களையும் செய்யவல்ல திறனையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார். யாத்திராகமம் 35:31 (TERV) மோசே மற்றும் இஸ்ரவேலர்களின் வனாந்தரப் பயணத்தின் போது, ஆசரிப்புக் கூடாரத்தை கட்டுவதற்கும், அதில் அழகான மற்றும் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்கவும் பெசலெயேல் என்ற ஒரு திறமையான கைவினைஞனைக் கர்த்தர் தெரிந்தெடுத்தார். கர்த்தர் பெசலெயேலுக்கு ஞானம், புத்தி, அறிவு மற்றும் பல்வேறு கலைத் திறன்களைக் கொடுத்தார், அதிலும் குறிப்பாக தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தைக் கொண்டு வேலை செய்வதில் சிறந்த திறனைக் கொடுத்தார். மோசேயிடம் கர்த்தர், பரிசுத்த ஆராதனைத் தலமான ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கு சொன்னபோது, அதை செய்து முடிப்பதில் பெசலெயேல் முக்கியப் பங்காற்றினார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே உடன்படிக்கைப் பெட்டி, பொன் குத்துவிளக்கு, தூபபீடம் மற்றும் பல பரிசுத்ப் பொருட்களை வடிவமைக்க அவர் தனது தனித்துவமான திறமைகளைப் பயன்படுத்தினார். அவரது கைவினைத்திறன் இஸ்ரேலருடைய ஆராதனைக்கு உதவியது, மேலும் தேவ ஆவி, ஒரு திறமையான கைவினைஞர் மூலம் செயல்பட்டதற்கு ஒரு சாட்சியாக அமைந்தது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் வேலையானது கற்பனைத் திறனோடு புதுமையானதாக இருப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?2. உங்கள் சொந்த வாழ்க்கையில், தேவ ஆவியும், மனித திறனும் இணைந்து செயல்படுவதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?3. பெசலெயேலின் கதையை நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், மனிதப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் கர்த்தருக்கு மகிமையைக் கொண்டுவரவும், கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த கிருபைகளையும், திறமைகளையும் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பணியில் கற்பனைத் திறனோடு சிறப்பாக இருக்கவும், என் முயற்சியின் மூலம் உமது பெயரை மகிமைப்படுத்தவும் என்னை ஆசீர்வதித்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவ ஆவியால் பெசலெயேலை நிரப்பியுள்ளார். பலவகை காரியங்களையும் செய்யவல்ல திறனையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார். யாத்திராகமம் 35:31 (TERV) மோசே மற்றும் இஸ்ரவேலர்களின் வனாந்தரப் பயணத்தின் போது, ஆசரிப்புக் கூடாரத்தை கட்டுவதற்கும், அதில் அழகான மற்றும் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்கவும் பெசலெயேல் என்ற ஒரு திறமையான கைவினைஞனைக் கர்த்தர் தெரிந்தெடுத்தார். கர்த்தர் பெசலெயேலுக்கு ஞானம், புத்தி, அறிவு மற்றும் பல்வேறு கலைத் திறன்களைக் கொடுத்தார், அதிலும் குறிப்பாக தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தைக் கொண்டு வேலை செய்வதில் சிறந்த திறனைக் கொடுத்தார். மோசேயிடம் கர்த்தர், பரிசுத்த ஆராதனைத் தலமான ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கு சொன்னபோது, அதை செய்து முடிப்பதில் பெசலெயேல் முக்கியப் பங்காற்றினார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே உடன்படிக்கைப் பெட்டி, பொன் குத்துவிளக்கு, தூபபீடம் மற்றும் பல பரிசுத்ப் பொருட்களை வடிவமைக்க அவர் தனது தனித்துவமான திறமைகளைப் பயன்படுத்தினார். அவரது கைவினைத்திறன் இஸ்ரேலருடைய ஆராதனைக்கு உதவியது, மேலும் தேவ ஆவி, ஒரு திறமையான கைவினைஞர் மூலம் செயல்பட்டதற்கு ஒரு சாட்சியாக அமைந்தது. பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. உங்கள் வேலையானது கற்பனைத் திறனோடு புதுமையானதாக இருப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?2. உங்கள் சொந்த வாழ்க்கையில், தேவ ஆவியும், மனித திறனும் இணைந்து செயல்படுவதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?3. பெசலெயேலின் கதையை நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், மனிதப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் கர்த்தருக்கு மகிமையைக் கொண்டுவரவும், கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த கிருபைகளையும், திறமைகளையும் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பணியில் கற்பனைத் திறனோடு சிறப்பாக இருக்கவும், என் முயற்சியின் மூலம் உமது பெயரை மகிமைப்படுத்தவும் என்னை ஆசீர்வதித்தருளும். ஆமென்.