வியாழன், 22 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். எபிரெயர் 11:17 வாக்களிக்கப்பட்ட மகன் ஈசாக்கின் மூலம் ஆபிரகாமுக்கு சந்ததிகள் உண்டாயிருக்கும் என்று தேவன் வாக்குறுதி அளித்தார். இருப்பினும், அதே குமாரனைப் பலியிடும்படிக்குத் தேவன் ஆபிரகாமிடத்தில் கேட்டபோது, அவர் ஈசாக்கைப் பலியிடத் தயாராயிருந்தார்.ஈசாக்கு மரித்துவிட்டால், தேவன் அவனை மீண்டும் உயிர்ப்பிக்க வல்லவராயிருக்கிறார் என்று ஆபிரகாம் விசுவாசித்தார். ஒரு விதத்தில், ஆபிரகாம் தன் மகனை மரித்தோரிலிருந்து பாவனையாய்த் திரும்பப் பெற்றார். மனிதர்கள் மற்றும் உடைமைகள் உட்பட இந்த உலகில் நாம் அனுபவிப்பவை எல்லாம் தேவனின் ஆசீர்வாதமாகும். இந்த ஆசீர்வாதங்களை நாம் எவ்வளவு ஆழமாய்ப் பற்றிக்கொண்டிருக்கிறோம்? நாம் தேவனை விட அதிகமாய்த் தேவனுடைய ஆசீர்வாதங்களை நேசிக்கவும் தழுவிக்கொள்ளவும் தொடங்கினால், அது விக்கிரக ஆராதனையாயிருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அப்படி ஏதாவது இருக்கிறதா என்று பகுப்பாய்வு செய்து சரிபார்த்து, அவற்றைப் பலிபீடத்தில் வைத்திடுங்கள். கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் முதன்மையானவராய் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உம்மை முதன்மையாய் வைத்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
ஆபிரகாம் ஈசாக்கை விசுவாசப் பலியாய் ஒப்புக்கொடுத்தார்
“வியாழன், 22 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். எபிரெயர் 11:17 வாக்களிக்கப்பட்ட மகன் ஈசாக்கின் மூலம் ஆபிரகாமுக்கு சந்ததிகள் உண்டாயிருக்கும் என்று தேவன் வாக்குறுதி அளித்தார். இருப்பினும், அதே குமாரனைப் பலியிடும்படிக்குத் தேவன் ஆபிரகாமிடத்தில் கேட்டபோது, அவர் ஈசாக்கைப் பலியிடத் தயாராயிருந்தார்.ஈசாக்கு மரித்துவிட்டால், தேவன் அவனை மீண்டும் உயிர்ப்பிக்க வல்லவராயிருக்கிறார் என்று ஆபிரகாம் விசுவாசித்தார். ஒரு விதத்தில், ஆபிரகாம் தன் மகனை மரித்தோரிலிருந்து பாவனையாய்த் திரும்பப் பெற்றார். மனிதர்கள் மற்றும் உடைமைகள் உட்பட இந்த உலகில் நாம் அனுபவிப்பவை எல்லாம் தேவனின் ஆசீர்வாதமாகும். இந்த ஆசீர்வாதங்களை நாம் எவ்வளவு ஆழமாய்ப் பற்றிக்கொண்டிருக்கிறோம்? நாம் தேவனை விட அதிகமாய்த் தேவனுடைய ஆசீர்வாதங்களை நேசிக்கவும் தழுவிக்கொள்ளவும் தொடங்கினால், அது விக்கிரக ஆராதனையாயிருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அப்படி ஏதாவது இருக்கிறதா என்று பகுப்பாய்வு செய்து சரிபார்த்து, அவற்றைப் பலிபீடத்தில் வைத்திடுங்கள். கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் முதன்மையானவராய் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் உம்மை முதன்மையாய் வைத்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

