← செய்திகளுக்குத் திரும்பு
ஒவ்வொரு நாள் காலையிலும் தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்கிறார்
படத்தைப் பதிவிறக்கு

ஒவ்வொரு நாள் காலையிலும் தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்கிறார்

“சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். சங்கீதம் 5:3 சூரியன் உதித்துப் புதிய நாளொன்று துவங்கும்போது, அதி​​காலையின் அமைதியில் தேவனைச் சந்திக்க நமக்கு ஓர் சிறப்பான வாய்ப்புள்ளது. அவருடைய பிரசன்னத்தில் செலவழிக்கிற இந்தப் பரிசுத்த நேரம், அவரது சித்தத்துடன் நம் இருதயங்களை ஒருங்கமைக்கவும், அவருடைய ஞானத்தால் நம் சிந்தையை நிரப்பவும் வழிசெய்கிறது. நம்முடைய நாளின் முதல் நேரத்தை ஜெபத்திற்கும் அவருடைய வார்த்தையைத் தியானிப்பதற்கும் அர்ப்பணிப்பதன் மூலம், எஞ்சிய நாள் முழுவதும் அவரின் வழிகாட்டுதலை நிச்சயமாய் பெற்றுக் கொள்வோம் என்கிற நம்பிக்கை நமக்கு உருவாகிறது. ஒவ்வொரு காலையிலும் நாம் தேவனைத் தேடும்போது, ​​​​அந்த நாளில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்கிற ஆவியை வளர்த்துக் கொள்கிறோம். அவருடைய பிரசன்னத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு கணமும் நம் ஆத்துமாவைப் பலப்படுத்தி, நம்மைச் சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் நிரப்புகிறது. இந்தப் பழக்கம் நமது உலகப் பொறுப்புகளை கிருபையுடன் கையாள நம்மைத் தயார்ப்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் அவருடைய அன்பையும், ஒளியையும் பிரதிபலிக்க அது நம்மைத் தகுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு காலையிலும் நீங்கள் எழுந்திருக்கும்போது, ​​தேவனோடு இணைந்திருப்பதற்கு இதுவே சிறந்த நேரம் என்பதையும், அவர் உங்கள் காலை ஜெபங்களைக் கேட்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் நாளைத் தொடங்கும் முன் காலையில் உம்மைச் சந்திக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். சங்கீதம் 5:3 சூரியன் உதித்துப் புதிய நாளொன்று துவங்கும்போது, அதி​​காலையின் அமைதியில் தேவனைச் சந்திக்க நமக்கு ஓர் சிறப்பான வாய்ப்புள்ளது. அவருடைய பிரசன்னத்தில் செலவழிக்கிற இந்தப் பரிசுத்த நேரம், அவரது சித்தத்துடன் நம் இருதயங்களை ஒருங்கமைக்கவும், அவருடைய ஞானத்தால் நம் சிந்தையை நிரப்பவும் வழிசெய்கிறது. நம்முடைய நாளின் முதல் நேரத்தை ஜெபத்திற்கும் அவருடைய வார்த்தையைத் தியானிப்பதற்கும் அர்ப்பணிப்பதன் மூலம், எஞ்சிய நாள் முழுவதும் அவரின் வழிகாட்டுதலை நிச்சயமாய் பெற்றுக் கொள்வோம் என்கிற நம்பிக்கை நமக்கு உருவாகிறது. ஒவ்வொரு காலையிலும் நாம் தேவனைத் தேடும்போது, ​​​​அந்த நாளில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்கிற ஆவியை வளர்த்துக் கொள்கிறோம். அவருடைய பிரசன்னத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு கணமும் நம் ஆத்துமாவைப் பலப்படுத்தி, நம்மைச் சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் நிரப்புகிறது. இந்தப் பழக்கம் நமது உலகப் பொறுப்புகளை கிருபையுடன் கையாள நம்மைத் தயார்ப்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் அவருடைய அன்பையும், ஒளியையும் பிரதிபலிக்க அது நம்மைத் தகுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு காலையிலும் நீங்கள் எழுந்திருக்கும்போது, ​​தேவனோடு இணைந்திருப்பதற்கு இதுவே சிறந்த நேரம் என்பதையும், அவர் உங்கள் காலை ஜெபங்களைக் கேட்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் நாளைத் தொடங்கும் முன் காலையில் உம்மைச் சந்திக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.