ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். கலாத்தியர் 4:7 அன்பு தேவ பிள்ளையே, நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராய் நம்பி ஏற்றுக்கொண்டவுடன், தேவனுடைய பிள்ளை என்று அழைக்கப்படும் உரிமையைப் பெற்றீர்கள். பாவமும் சாத்தானும் உங்கள் மேலுள்ள தங்கள் ஆதிக்கத்தை இழந்தன. மேலும் நீங்கள் இயேசு கிறிஸ்துவினால் வாழ்வில் விடுதலை பெற்றுள்ளீர்கள். தேவ ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை உங்களுக்கு அளித்து, அவருடைய பிள்ளையாகிய உங்களைத் தமது சுதந்தரராய் அவர் ஆக்கியுள்ளார். கிறிஸ்துவின் உடன் சுதந்தரராய், தேவன் தருகிற ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் வாக்குத்தத்தங்களையும் நீங்கள் அனுபவிக்கலாம். உங்களின் அடையாளம் அவருக்குள் பாதுகாப்பாயிருக்கிறது. மேலும் உங்கள் எதிர்காலம், நம்பிக்கையினாலும் நோக்கத்தினாலும் நிரப்பப்பட்டுள்ளது. தேவனின் நேசத்துக்குரிய பிள்ளையாகிய நீங்கள் உங்களுக்குரிய அந்தஸ்தில் மகிழ்ந்து களிகூர்ந்து, உங்களுக்கான அவருடைய பரிபூரண ஜீவனை அனுபவியுங்கள்! எனவே, உங்கள் தோல்வி மனப்பான்மையை விட்டுவிட்டு, வெற்றியுள்ள வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமது சுதந்தரமாய் மாற்றியதற்கு நன்றி. பாதிக்கப்பட்ட மனநிலையை மேற்கொண்டு வெற்றிகரமான வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நீங்கள் இனி அடிமையாயிராமல் புத்திரராயும்,...
“ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். கலாத்தியர் 4:7 அன்பு தேவ பிள்ளையே, நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராய் நம்பி ஏற்றுக்கொண்டவுடன், தேவனுடைய பிள்ளை என்று அழைக்கப்படும் உரிமையைப் பெற்றீர்கள். பாவமும் சாத்தானும் உங்கள் மேலுள்ள தங்கள் ஆதிக்கத்தை இழந்தன. மேலும் நீங்கள் இயேசு கிறிஸ்துவினால் வாழ்வில் விடுதலை பெற்றுள்ளீர்கள். தேவ ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை உங்களுக்கு அளித்து, அவருடைய பிள்ளையாகிய உங்களைத் தமது சுதந்தரராய் அவர் ஆக்கியுள்ளார். கிறிஸ்துவின் உடன் சுதந்தரராய், தேவன் தருகிற ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் வாக்குத்தத்தங்களையும் நீங்கள் அனுபவிக்கலாம். உங்களின் அடையாளம் அவருக்குள் பாதுகாப்பாயிருக்கிறது. மேலும் உங்கள் எதிர்காலம், நம்பிக்கையினாலும் நோக்கத்தினாலும் நிரப்பப்பட்டுள்ளது. தேவனின் நேசத்துக்குரிய பிள்ளையாகிய நீங்கள் உங்களுக்குரிய அந்தஸ்தில் மகிழ்ந்து களிகூர்ந்து, உங்களுக்கான அவருடைய பரிபூரண ஜீவனை அனுபவியுங்கள்! எனவே, உங்கள் தோல்வி மனப்பான்மையை விட்டுவிட்டு, வெற்றியுள்ள வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை உமது சுதந்தரமாய் மாற்றியதற்கு நன்றி. பாதிக்கப்பட்ட மனநிலையை மேற்கொண்டு வெற்றிகரமான வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

