வியாழன், 7 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். சங்கீதம் 25:1 நம்முடைய அடிமைத்தனத்திலிருந்தும் கட்டுகளிலிருந்தும் வெளிவருவதற்கு இயேசுவே ஒரே வழி. மேலும், பரலோகத்தில் தேவனுடன் நித்தியத்திற்கான நம்பிக்கை நிறைந்த ஒரு விடுதலையான வாழ்க்கைக்கான வழியும் அவரே. இயேசுவை உங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்வது உங்கள் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும். உங்கள் வாழ்க்கை அவருக்கு மிகவும் விலையேறப்பெற்றதும், நீங்கள் அவருக்குச் செலுத்தக்கூடிய மிகச்சிறந்த நன்றிக் காணிக்கையாகவும் இருக்கும். உங்களை அவருக்கு அர்ப்பணிப்பது என்பது உங்கள் விருப்பத்தை தேவனிடம் ஒப்படைப்பதும் அவருடைய விருப்பத்தை உங்களுடையதாய் எடுத்துக்கொள்வதாகும். அவர் விரும்புவதைச் செய்ய நீங்கள் உறுதியாய் இருக்க வேண்டும். எவ்விதச் சமரசமும் செய்யாமல் அவருடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து, இரட்சகருக்குப் பிரியமான வாழ்க்கை வாழுங்கள். உங்களை அவருக்கு ஜீவபலியாய்ச் செலுத்துவீர்களா? உங்கள் வாழ்வை இயேசுவுக்குக் கொடுப்பீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.
உங்கள் வாழ்க்கையைத் தேவனுக்கு அர்ப்பணியுங்கள்
“வியாழன், 7 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். சங்கீதம் 25:1 நம்முடைய அடிமைத்தனத்திலிருந்தும் கட்டுகளிலிருந்தும் வெளிவருவதற்கு இயேசுவே ஒரே வழி. மேலும், பரலோகத்தில் தேவனுடன் நித்தியத்திற்கான நம்பிக்கை நிறைந்த ஒரு விடுதலையான வாழ்க்கைக்கான வழியும் அவரே. இயேசுவை உங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்வது உங்கள் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும். உங்கள் வாழ்க்கை அவருக்கு மிகவும் விலையேறப்பெற்றதும், நீங்கள் அவருக்குச் செலுத்தக்கூடிய மிகச்சிறந்த நன்றிக் காணிக்கையாகவும் இருக்கும். உங்களை அவருக்கு அர்ப்பணிப்பது என்பது உங்கள் விருப்பத்தை தேவனிடம் ஒப்படைப்பதும் அவருடைய விருப்பத்தை உங்களுடையதாய் எடுத்துக்கொள்வதாகும். அவர் விரும்புவதைச் செய்ய நீங்கள் உறுதியாய் இருக்க வேண்டும். எவ்விதச் சமரசமும் செய்யாமல் அவருடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து, இரட்சகருக்குப் பிரியமான வாழ்க்கை வாழுங்கள். உங்களை அவருக்கு ஜீவபலியாய்ச் செலுத்துவீர்களா? உங்கள் வாழ்வை இயேசுவுக்குக் கொடுப்பீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

