← செய்திகளுக்குத் திரும்பு
பயப்பட வேண்டாம், ஏனென்றால் கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

பயப்பட வேண்டாம், ஏனென்றால் கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்.

“ஏப்ரல் 28, 2023 வெள்ளிக்கிழமை இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். ஏசாயா 41:10 * தெரிந்தவர்கள் யாரும் அருகில் இல்லாததால் நீங்கள் தனியாக இருப்பதாக நினைக்காதீர்கள்.* நீங்கள் ஒரு புதிய இடத்திற்கு இடம் பெயர்ந்து, அங்கு உங்கள் அருகில் வசிப்போர் உடன் இன்னும் தொடர்பு ஏற்படாமல் தனிமையை உணரலாம்.* தட்பவெப்பநிலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை, மொழி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிக்க முடியாமல் நீங்கள் சிரமப்படலாம்.* இந்த காரணங்கள் அனைத்தும் மனச்சோர்வு மற்றும் தனிமை உணர்வுகளுக்கு பங்களிக்கும் என்பது உண்மையே.* வேலை அல்லது பிற கடமைகள் காரணமாக உங்கள் குடும்பத்தை விட்டு தூரமாக இருக்க நேர்ந்தது உங்கள் வாழ்வின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கலாம். * சேர்த்துப் போகாதீர்கள்.* எல்லாமே இறுதியில் சிறப்பாக மாறும்.* இந்தக் கஷ்டங்கள் மத்தியிலும் கர்த்தர் உங்களோடு இருக்கிறார், உங்களைக் கைவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* ஒரு பெரிய நோக்கத்திற்காக உங்களைப் பலப்படுத்த மாறுதல்கள் வழியாக உங்களை வழிநடத்துகிறார். * உங்கள் எதிர்காலத்தைப் பற்றி பயப்பட வேண்டாம்.* அவர் உங்களுடன் இருக்கிறபடியால் உங்களை படிப்படியாக எந்த குழப்பமும் இல்லாமல் வழிநடத்துவார்.* கர்த்தர் உங்கள் எதிர்காலத்தை அறிந்திருக்கிறார். அவர் உங்கள் வாழ்க்கையை வடிவமைப்பவர்.* இயேசுவின் மீது உங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறபடியால் இனிய நாட்கள் வரவுள்ளன.* பயப்படாதீர்கள், உற்சாகப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பயத்தைப் போக்கவும், வெற்றிகரமான வாழ்க்கை வாழவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஏப்ரல் 28, 2023 வெள்ளிக்கிழமை இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். ஏசாயா 41:10 * தெரிந்தவர்கள் யாரும் அருகில் இல்லாததால் நீங்கள் தனியாக இருப்பதாக நினைக்காதீர்கள்.* நீங்கள் ஒரு புதிய இடத்திற்கு இடம் பெயர்ந்து, அங்கு உங்கள் அருகில் வசிப்போர் உடன் இன்னும் தொடர்பு ஏற்படாமல் தனிமையை உணரலாம்.* தட்பவெப்பநிலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை, மொழி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிக்க முடியாமல் நீங்கள் சிரமப்படலாம்.* இந்த காரணங்கள் அனைத்தும் மனச்சோர்வு மற்றும் தனிமை உணர்வுகளுக்கு பங்களிக்கும் என்பது உண்மையே.* வேலை அல்லது பிற கடமைகள் காரணமாக உங்கள் குடும்பத்தை விட்டு தூரமாக இருக்க நேர்ந்தது உங்கள் வாழ்வின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கலாம். * சேர்த்துப் போகாதீர்கள்.* எல்லாமே இறுதியில் சிறப்பாக மாறும்.* இந்தக் கஷ்டங்கள் மத்தியிலும் கர்த்தர் உங்களோடு இருக்கிறார், உங்களைக் கைவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* ஒரு பெரிய நோக்கத்திற்காக உங்களைப் பலப்படுத்த மாறுதல்கள் வழியாக உங்களை வழிநடத்துகிறார். * உங்கள் எதிர்காலத்தைப் பற்றி பயப்பட வேண்டாம்.* அவர் உங்களுடன் இருக்கிறபடியால் உங்களை படிப்படியாக எந்த குழப்பமும் இல்லாமல் வழிநடத்துவார்.* கர்த்தர் உங்கள் எதிர்காலத்தை அறிந்திருக்கிறார். அவர் உங்கள் வாழ்க்கையை வடிவமைப்பவர்.* இயேசுவின் மீது உங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறபடியால் இனிய நாட்கள் வரவுள்ளன.* பயப்படாதீர்கள், உற்சாகப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பயத்தைப் போக்கவும், வெற்றிகரமான வாழ்க்கை வாழவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.