திங்கட்கிழமை, 13 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். சங்கீதம் 9:1 - துதிகளின் மத்தியில் வசிக்கிற கர்த்தர், நாம் அவரைப் புகழ்வதைக் கேட்க விரும்புகிறார்.- அவர் ஒரு அற்புதமான தேவன், அவர் ஒருவரே துதிக்குப் பாத்திரர்.- உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நீங்கள் அவருக்கு நன்றி செலுத்துகிறீர்களா?- நீங்கள் அவருடைய மகத்துவத்தையும், அன்பையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்களா? - நீங்கள் அவருடைய பராமரிப்பையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும் போது, நீங்கள் அவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.- உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் மற்றவர்களை ஊக்குவித்துத் தூண்டிவிடும், எனவே சொல்வதற்கு தயங்க வேண்டாம்.- நீங்கள் எவ்வளவு அதிகமாய்ப் பகிர்ந்துகொண்டு மற்றவர்களை ஊக்குவிக்கிறீர்களோ, அவ்வளவு ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். - நீங்கள் தேவனைப் பற்றியும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பற்றியும் பேசவில்லை என்றால், வேறு யார் பேசுவார்கள்?- தேவனின் நன்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். செய்வீர்களா? ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது நன்மையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். என் வாழ்க்கையில் நீர் செய்த அற்புதமான காரியங்களை என் சொற்களும், செயல்களும் பிரதிபலிக்கட்டும். ஆமென்.
தேவன் உங்களுக்குச் செய்த அதிசயங்களை அறிவியுங்கள்.
“திங்கட்கிழமை, 13 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். சங்கீதம் 9:1 - துதிகளின் மத்தியில் வசிக்கிற கர்த்தர், நாம் அவரைப் புகழ்வதைக் கேட்க விரும்புகிறார்.- அவர் ஒரு அற்புதமான தேவன், அவர் ஒருவரே துதிக்குப் பாத்திரர்.- உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நீங்கள் அவருக்கு நன்றி செலுத்துகிறீர்களா?- நீங்கள் அவருடைய மகத்துவத்தையும், அன்பையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்களா? - நீங்கள் அவருடைய பராமரிப்பையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும் போது, நீங்கள் அவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.- உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் மற்றவர்களை ஊக்குவித்துத் தூண்டிவிடும், எனவே சொல்வதற்கு தயங்க வேண்டாம்.- நீங்கள் எவ்வளவு அதிகமாய்ப் பகிர்ந்துகொண்டு மற்றவர்களை ஊக்குவிக்கிறீர்களோ, அவ்வளவு ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். - நீங்கள் தேவனைப் பற்றியும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பற்றியும் பேசவில்லை என்றால், வேறு யார் பேசுவார்கள்?- தேவனின் நன்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். செய்வீர்களா? ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது நன்மையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். என் வாழ்க்கையில் நீர் செய்த அற்புதமான காரியங்களை என் சொற்களும், செயல்களும் பிரதிபலிக்கட்டும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

