← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் தாம் நேசிப்போரைச் சிட்சிக்கிறார்
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் தாம் நேசிப்போரைச் சிட்சிக்கிறார்

“சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். நீதிமொழிகள் 3:12 தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவைச் சிலுவையில் பலியாக்கினதால் உங்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார். பிசாசு மற்றும் பாவத்தின் பிடியிலிருந்து உங்களை மீட்பதற்குச் செலுத்தப்பட்ட கிரயம் அவருடைய இரத்தமாயிருக்கிறது. உங்கள் கடந்தகாலப் பாவங்களுக்காக நீங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதால் தேவன் உங்கள்மேல் சந்தோஷமாய் இருக்கிறார். உங்கள் கடந்த காலச் சுமைகளிலிருந்து அவர் உங்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், உங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் அவர் கவலைப்படுகிறார். நீங்கள் அவருடன் பரலோகத்தில் நித்திய ஜீவனைப் பெற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதினிமித்தமே, நீங்கள் அவருடைய விருப்பத்திலிருந்தும் வழிகளிலிருந்தும் விலகிச் செல்லும் போதெல்லாம் அவர் உங்களை ஒழுங்குபடுத்துகிறார். உங்கள் சுய பிரயோஜனத்துக்காகவே இந்தச் சிட்சை கொடுக்கப்பட்டு, நீங்கள் நித்திய ஜீவனை இழக்காமல் இருப்பதை அது உறுதி செய்கிறது. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உங்களை அவர் கவனித்துக்கொண்டதற்காகத் தேவனுக்கு நன்றியுடன் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உமக்கு முன்பாகப் பரிசுத்தமும் பிரியமுமான வாழ்க்கையை வாழும்படியாய் நீர் காட்டும் உமது அன்பிற்கும், திருத்தங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். நீதிமொழிகள் 3:12 தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவைச் சிலுவையில் பலியாக்கினதால் உங்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார். பிசாசு மற்றும் பாவத்தின் பிடியிலிருந்து உங்களை மீட்பதற்குச் செலுத்தப்பட்ட கிரயம் அவருடைய இரத்தமாயிருக்கிறது. உங்கள் கடந்தகாலப் பாவங்களுக்காக நீங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதால் தேவன் உங்கள்மேல் சந்தோஷமாய் இருக்கிறார். உங்கள் கடந்த காலச் சுமைகளிலிருந்து அவர் உங்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், உங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் அவர் கவலைப்படுகிறார். நீங்கள் அவருடன் பரலோகத்தில் நித்திய ஜீவனைப் பெற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதினிமித்தமே, நீங்கள் அவருடைய விருப்பத்திலிருந்தும் வழிகளிலிருந்தும் விலகிச் செல்லும் போதெல்லாம் அவர் உங்களை ஒழுங்குபடுத்துகிறார். உங்கள் சுய பிரயோஜனத்துக்காகவே இந்தச் சிட்சை கொடுக்கப்பட்டு, நீங்கள் நித்திய ஜீவனை இழக்காமல் இருப்பதை அது உறுதி செய்கிறது. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உங்களை அவர் கவனித்துக்கொண்டதற்காகத் தேவனுக்கு நன்றியுடன் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உமக்கு முன்பாகப் பரிசுத்தமும் பிரியமுமான வாழ்க்கையை வாழும்படியாய் நீர் காட்டும் உமது அன்பிற்கும், திருத்தங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். ஆமென்.