← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்கள் கழுத்தின் மேலுள்ள நுகத்தடியை முறித்துப்போட்டு, உங்கள் கட்டுகளை அறுத்து விடுவார்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்கள் கழுத்தின் மேலுள்ள நுகத்தடியை முறித்துப்போட்டு,...

“திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.நாகூம் 1:13 நீங்கள், ஒரு தவறான உறவிலிருந்தோ அல்லது ஒரு போதை பழக்கத்திலிருந்தோ வெளிவர போராடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் கடன்களால் நீங்கள் துவண்டுபோனதாய் உணருகிறீர்களா? உங்கள் மேலதிகாரிகளிடமோ அல்லது வணிகக் கடன் வழங்குபவர்களிடமோ உள்ள கட்டுப்பாட்டால் நீங்கள் சிக்கித் தவிக்கிறீர்களா? நம்பிக்கையை இழக்காதீர்கள். இயேசு எந்தச் சூழ்நிலையையும் மாற்ற முடியும். உங்கள் பிரச்சனைகளையும் கவலைகளையும் பட்டியலிடச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இயேசுவோடு நேரத்தைச் செலவிடுங்கள், உங்கள் எல்லாச் சவால்களையும் இன்னல்களையும் அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் உங்களுடைய எல்லா பாரமான சுமைகளிலிருந்தும் , எல்லாத் தடைகளிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்களை எல்லா நோய்களிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் குணமாக்குவார். தேவ கிருபையினால் உங்கள் வாழ்வில் உண்மையான விடுதலையை அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்வில் உள்ள எல்லா நுகத்தடியிலிருந்தும் என்னை விடுவியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.நாகூம் 1:13 நீங்கள், ஒரு தவறான உறவிலிருந்தோ அல்லது ஒரு போதை பழக்கத்திலிருந்தோ வெளிவர போராடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் கடன்களால் நீங்கள் துவண்டுபோனதாய் உணருகிறீர்களா? உங்கள் மேலதிகாரிகளிடமோ அல்லது வணிகக் கடன் வழங்குபவர்களிடமோ உள்ள கட்டுப்பாட்டால் நீங்கள் சிக்கித் தவிக்கிறீர்களா? நம்பிக்கையை இழக்காதீர்கள். இயேசு எந்தச் சூழ்நிலையையும் மாற்ற முடியும். உங்கள் பிரச்சனைகளையும் கவலைகளையும் பட்டியலிடச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இயேசுவோடு நேரத்தைச் செலவிடுங்கள், உங்கள் எல்லாச் சவால்களையும் இன்னல்களையும் அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் உங்களுடைய எல்லா பாரமான சுமைகளிலிருந்தும் , எல்லாத் தடைகளிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்களை எல்லா நோய்களிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் குணமாக்குவார். தேவ கிருபையினால் உங்கள் வாழ்வில் உண்மையான விடுதலையை அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்வில் உள்ள எல்லா நுகத்தடியிலிருந்தும் என்னை விடுவியும். ஆமென்.