← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் விடுவிக்கிறார்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற...

“வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். சங்கீதம் 72:12 - மற்றவர்கள் உங்களைப் புறக்கணிப்பதாலும், உங்களுக்குத் தகுதியான அங்கீகாரத்தை நீங்கள் பெறாததாலும் வருத்தப்படுகிறீர்களா?- உங்கள் சொந்தத் தேவைகளைப் பற்றியும் குடும்பத்தின் தேவைகளைப் பற்றியும் நீங்கள் கவலைப்படுகிறீர்களா? - யாராவது உங்களுக்கு உதவ முன்வந்தாலும், மனிதர்களுக்கு வரம்புகள் இருப்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் அவர்களைக் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது.- மக்கள் வேண்டுமென்றே உங்களைப் புறக்கணிக்கும்போதும், நீங்கள் கண்ணுக்குத் தெரியாததாகவோ அல்லது கவனிக்கப்படாதவர்களாகவோ உணரும்போதும் அது வேதனையாயிருக்கும்.- மற்றவர்களுடன் இணைவதற்கான உங்கள் முயற்சிகள் பலிக்கவில்லையென்றோ அல்லது நீங்கள் கவனிக்கப்படவில்லை என்றோ ஒருவேளை நீங்கள் எண்ணலாம். - மனிதர்கள் உங்களை புறக்கணிக்கலாம்; இருப்பினும், நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் திரும்பினால், அவர் உங்கள் ஜெபங்களைப் புறக்கணிக்கமாட்டார்.- அவர் உங்கள் தேவைகள், பயங்கள் மற்றும் ஆசைகளை அறிந்து உங்கள்மேல் ஆழமாய் அக்கறை காட்டுகிறார்.- அவர் உங்களை நிராகரிக்கமாட்டார். எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்காக எப்பொழுதும் இருப்பார்.- எனவே, நம்பிக்கையுடன் அவரை அணுகி உங்கள் தேவைகளையும் வேதனைகளையும் அவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.- அவர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார், மேலும் உங்கள் வழியில் வரும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ளும் வலிமையையும் தைரியத்தையும் அவர் உங்களுக்குத் தந்தருளுவார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் தேவைகள் சந்திக்கப்பட உமது உதவியையும், ஒத்தாசையையும் எனக்குத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். சங்கீதம் 72:12 - மற்றவர்கள் உங்களைப் புறக்கணிப்பதாலும், உங்களுக்குத் தகுதியான அங்கீகாரத்தை நீங்கள் பெறாததாலும் வருத்தப்படுகிறீர்களா?- உங்கள் சொந்தத் தேவைகளைப் பற்றியும் குடும்பத்தின் தேவைகளைப் பற்றியும் நீங்கள் கவலைப்படுகிறீர்களா? - யாராவது உங்களுக்கு உதவ முன்வந்தாலும், மனிதர்களுக்கு வரம்புகள் இருப்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் அவர்களைக் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது.- மக்கள் வேண்டுமென்றே உங்களைப் புறக்கணிக்கும்போதும், நீங்கள் கண்ணுக்குத் தெரியாததாகவோ அல்லது கவனிக்கப்படாதவர்களாகவோ உணரும்போதும் அது வேதனையாயிருக்கும்.- மற்றவர்களுடன் இணைவதற்கான உங்கள் முயற்சிகள் பலிக்கவில்லையென்றோ அல்லது நீங்கள் கவனிக்கப்படவில்லை என்றோ ஒருவேளை நீங்கள் எண்ணலாம். - மனிதர்கள் உங்களை புறக்கணிக்கலாம்; இருப்பினும், நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் திரும்பினால், அவர் உங்கள் ஜெபங்களைப் புறக்கணிக்கமாட்டார்.- அவர் உங்கள் தேவைகள், பயங்கள் மற்றும் ஆசைகளை அறிந்து உங்கள்மேல் ஆழமாய் அக்கறை காட்டுகிறார்.- அவர் உங்களை நிராகரிக்கமாட்டார். எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்காக எப்பொழுதும் இருப்பார்.- எனவே, நம்பிக்கையுடன் அவரை அணுகி உங்கள் தேவைகளையும் வேதனைகளையும் அவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.- அவர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார், மேலும் உங்கள் வழியில் வரும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ளும் வலிமையையும் தைரியத்தையும் அவர் உங்களுக்குத் தந்தருளுவார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் தேவைகள் சந்திக்கப்பட உமது உதவியையும், ஒத்தாசையையும் எனக்குத் தந்தருளும். ஆமென்.