வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான். நீதிமொழிகள் 14:29 இக்கட்டான நேரங்களில் அமைதியாய் இருப்பது எளிதானதல்ல. ஆனால், சவாலான சூழ்நிலைகளைக் கடந்து செல்வது மிகவும் அவசியம். சிக்கல்களை எதிர்கொள்ளும் போது குழப்பம் அல்லது கலக்கம் ஏற்படுவது இயற்கையானது. இருப்பினும், பேரழிவுகள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகளின் போது அமைதியாக இருக்கக் கிருபை பெற்றவர்கள் உண்மையிலேயே தனித்துவம் வாய்ந்தவர்கள். 1. நீங்கள் விரைவில் உங்கள் சாந்த குணத்தை இழக்கிறீர்களா?2. நீங்கள் எதிர்பாராச் சவால்களை எதிர்கொள்ளும் போது எந்த அளவுக்கு நிலையாய் இருக்கிறீர்கள்? பாதகமான சூழ்நிலைகளில் சாந்தமாய் இருப்பதையும், பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் இயேசு எடுத்துக்காட்டுகிறார். அவரே சமாதானத்துக்கும் சத்துவத்துக்கும் ஆதாரமாயிருக்கிறார். சாந்தமாய் இருப்பதற்கான திறன், தேவன் மீதான உங்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பொறுத்ததாகும். இயேசுவுடன் ஆழமான உறவை வளர்த்து, விசுவாசத்தில் வல்லவராய் வளருங்கள். இயேசுவின் மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசம், எல்லாச் சூழ்நிலைகளிலும் சாந்தமான மற்றும் நிலையான நபராக இருக்க உதவி செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இன்னும் உம்மை நம்பவும், எல்லா சூழ்நிலைகளிலும் பதற்றம் அடையாமல் சாந்தமாய் இருக்கவும் தயவு கூர்ந்து எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்
“வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான். நீதிமொழிகள் 14:29 இக்கட்டான நேரங்களில் அமைதியாய் இருப்பது எளிதானதல்ல. ஆனால், சவாலான சூழ்நிலைகளைக் கடந்து செல்வது மிகவும் அவசியம். சிக்கல்களை எதிர்கொள்ளும் போது குழப்பம் அல்லது கலக்கம் ஏற்படுவது இயற்கையானது. இருப்பினும், பேரழிவுகள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகளின் போது அமைதியாக இருக்கக் கிருபை பெற்றவர்கள் உண்மையிலேயே தனித்துவம் வாய்ந்தவர்கள். 1. நீங்கள் விரைவில் உங்கள் சாந்த குணத்தை இழக்கிறீர்களா?2. நீங்கள் எதிர்பாராச் சவால்களை எதிர்கொள்ளும் போது எந்த அளவுக்கு நிலையாய் இருக்கிறீர்கள்? பாதகமான சூழ்நிலைகளில் சாந்தமாய் இருப்பதையும், பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் இயேசு எடுத்துக்காட்டுகிறார். அவரே சமாதானத்துக்கும் சத்துவத்துக்கும் ஆதாரமாயிருக்கிறார். சாந்தமாய் இருப்பதற்கான திறன், தேவன் மீதான உங்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பொறுத்ததாகும். இயேசுவுடன் ஆழமான உறவை வளர்த்து, விசுவாசத்தில் வல்லவராய் வளருங்கள். இயேசுவின் மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசம், எல்லாச் சூழ்நிலைகளிலும் சாந்தமான மற்றும் நிலையான நபராக இருக்க உதவி செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இன்னும் உம்மை நம்பவும், எல்லா சூழ்நிலைகளிலும் பதற்றம் அடையாமல் சாந்தமாய் இருக்கவும் தயவு கூர்ந்து எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

