சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதனை இதயப்பூர்வமாகச் செய்யுங்கள். கொலோசேயர் 3:23 (TERV) நீங்கள் வேலையின் காரியங்களைக் குறித்து கவலையோடு காணப்படுகிறீர்களா?அப்படியானால், மனம் தளராதீர்கள். சிந்தை ஓர் போர்க்களம் என்பதையும் எதிர்மறை எண்ணங்களுக்கு அடிபணியாமல் இருப்பது முக்கியம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதற்குப் பதிலாய் நம்பிக்கையுடன் இருந்து, நீங்கள் முற்றிலும் ஜெயெங்கொள்ளுகிறவர்களாய் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தங்கள் உலக இலட்சியங்களுக்கும், அங்கீகாரத்திற்கும் மேலாய் தேவ மகிமைக்காய் வேலை செய்ய அழைக்கப்படுகிறார்கள். உங்கள் செயல்கள், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்கள் முழு மனதுடன் கூடிய விருப்பத்தையும் அர்ப்பணிப்பையும் காட்டட்டும். நீங்கள் கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால், தேவன் உங்களை ஆசீர்வதித்து அநேகத்தின்மேல் உங்களை அதிகாரியாக்குவார். ஜெபம்: எங்கள் கிருபையுள்ள கர்த்தராகிய இயேசுவே, முணுமுணுக்கவோ யாரையும் ஏமாற்றவோ செய்யாமல், வேலையில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கக்கூடிய மனப்பூர்வமான இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.
மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்
“சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதனை இதயப்பூர்வமாகச் செய்யுங்கள். கொலோசேயர் 3:23 (TERV) நீங்கள் வேலையின் காரியங்களைக் குறித்து கவலையோடு காணப்படுகிறீர்களா?அப்படியானால், மனம் தளராதீர்கள். சிந்தை ஓர் போர்க்களம் என்பதையும் எதிர்மறை எண்ணங்களுக்கு அடிபணியாமல் இருப்பது முக்கியம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அதற்குப் பதிலாய் நம்பிக்கையுடன் இருந்து, நீங்கள் முற்றிலும் ஜெயெங்கொள்ளுகிறவர்களாய் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தங்கள் உலக இலட்சியங்களுக்கும், அங்கீகாரத்திற்கும் மேலாய் தேவ மகிமைக்காய் வேலை செய்ய அழைக்கப்படுகிறார்கள். உங்கள் செயல்கள், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்கள் முழு மனதுடன் கூடிய விருப்பத்தையும் அர்ப்பணிப்பையும் காட்டட்டும். நீங்கள் கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால், தேவன் உங்களை ஆசீர்வதித்து அநேகத்தின்மேல் உங்களை அதிகாரியாக்குவார். ஜெபம்: எங்கள் கிருபையுள்ள கர்த்தராகிய இயேசுவே, முணுமுணுக்கவோ யாரையும் ஏமாற்றவோ செய்யாமல், வேலையில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கக்கூடிய மனப்பூர்வமான இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

