வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக. ரூத் 2:12 மோவாபியப் பெண்ணான ரூத், தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறி, தன் மாமியார் நகோமியைப் பின்பற்றி இஸ்ரவேலுக்குச் செல்ல விரும்பினாள். ரூத் நகோமியுடன் இருப்பதை மட்டுமல்ல, இஸ்ரவேலின் தேவனைப் பின்பற்றவும் முடிவு செய்தாள். அவர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பியபோது, ரூத் வயல்களில் வேலை செய்தாள், நில உரிமையாளரான போவாஸ் ஊக்கமளிக்கும் இந்த வார்த்தைகளால் அவளை ஆசீர்வதித்தார். நீங்களும் கூட, அந்நியர்களிடையே வாழ்வது, பாதுகாப்பான நிலையின்றி வெளிநாட்டில் வசிப்பது, நிலையான வருமானம் அல்லது வேலை இல்லாதது போன்ற கடினமான சூழ்நிலைகளை அனுபவித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் ரூத் செய்தது போல், உங்கள் வழிகளிலெல்லாம் இயேசுவைப் பின்பற்றுவதில் நீங்கள் உறுதியாய் இருந்தால், அவர் உங்களைக் கைவிடமாட்டார். சரியான நேரத்தில் உங்கள் விசுவாசம், நேர்மை மற்றும் உண்மைத்தன்மைக்காக இயேசு உங்களுக்குப் பலன் அளிப்பார்; அதனால் வரும் மகிழ்ச்சி உங்கள் புரிதலுக்கும், எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உமது சிறகுகளின் கீழ் அடைக்கலம் தேடுகிறேன். எனக்குத் தந்த வாக்குத்தத்தை நிறைவேற்றி நிறைவான பலனால் என்னை ஆசீர்வதியும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரால் நீங்கள் நிறைவான பலனைப் பெறுவீர்கள்
“வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக. ரூத் 2:12 மோவாபியப் பெண்ணான ரூத், தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறி, தன் மாமியார் நகோமியைப் பின்பற்றி இஸ்ரவேலுக்குச் செல்ல விரும்பினாள். ரூத் நகோமியுடன் இருப்பதை மட்டுமல்ல, இஸ்ரவேலின் தேவனைப் பின்பற்றவும் முடிவு செய்தாள். அவர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பியபோது, ரூத் வயல்களில் வேலை செய்தாள், நில உரிமையாளரான போவாஸ் ஊக்கமளிக்கும் இந்த வார்த்தைகளால் அவளை ஆசீர்வதித்தார். நீங்களும் கூட, அந்நியர்களிடையே வாழ்வது, பாதுகாப்பான நிலையின்றி வெளிநாட்டில் வசிப்பது, நிலையான வருமானம் அல்லது வேலை இல்லாதது போன்ற கடினமான சூழ்நிலைகளை அனுபவித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் ரூத் செய்தது போல், உங்கள் வழிகளிலெல்லாம் இயேசுவைப் பின்பற்றுவதில் நீங்கள் உறுதியாய் இருந்தால், அவர் உங்களைக் கைவிடமாட்டார். சரியான நேரத்தில் உங்கள் விசுவாசம், நேர்மை மற்றும் உண்மைத்தன்மைக்காக இயேசு உங்களுக்குப் பலன் அளிப்பார்; அதனால் வரும் மகிழ்ச்சி உங்கள் புரிதலுக்கும், எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உமது சிறகுகளின் கீழ் அடைக்கலம் தேடுகிறேன். எனக்குத் தந்த வாக்குத்தத்தை நிறைவேற்றி நிறைவான பலனால் என்னை ஆசீர்வதியும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

