← செய்திகளுக்குத் திரும்பு
வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு பரிசுத்த ஆவியானவர் நமக்காக வேண்டுதல்செய்கிறார்
படத்தைப் பதிவிறக்கு

வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு பரிசுத்த ஆவியானவர் நமக்காக...

“். ஆம்! அவர் உங்களுக்காக இடைப்பட்டு வேண்டிய நேரத்தில் உங்களுக்கு உதவி செய்வார். அவர் உங்களுக்காய்ப் பரிந்துபேசுகிறவராய், தேவ சித்தத்தைப் புரிந்துகொள்ளவும், ஜெபிக்கவும், முன்னேறவும் உங்களுக்கு உதவுகிறார். பரிசுத்த ஆவியினால் நீங்கள் நிறைந்து, ஜெயமுள்ள வாழ்க்கை வாழுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து எனக்கு பரிசுத்த ஆவியைத் தந்து, என் பெலவீன நேரத்தில் எனக்கு உதவி செய்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ரோமர் 8:26 இந்தக் கெட்டுப்போன உலகில் நீதியான வாழ்க்கை வாழ்வது உண்மையில் மிகவும் சவாலானது. தேவ பிள்ளையாக, நீங்கள் தொடர்ந்து புதிய தடைகள், ஒடுக்குமுறைகள், பின்னடைவுகள் மற்றும் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம். இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படி ஜெபிப்பதென்று தெரியாமல் நீங்கள் சிக்கிக்கொள்ளலாம். நீங்கள் அத்தகைய பாதைகளில் செல்கிறீர்களா? நீங்கள் தனியாக இல்லை என்பதால் கவலைப்பட வேண்டாம். பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருப்பார் என்றும், நமக்கு எப்பொழுதும் உதவுவார் என்றும் தேவன் வாக்களித்திருக்கிறார். எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதபோது, வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக வேண்டிக்கொள்வார். ஆம்! அவர் உங்களுக்காக இடைப்பட்டு வேண்டிய நேரத்தில் உங்களுக்கு உதவி செய்வார். அவர் உங்களுக்காய்ப் பரிந்துபேசுகிறவராய், தேவ சித்தத்தைப் புரிந்துகொள்ளவும், ஜெபிக்கவும், முன்னேறவும் உங்களுக்கு உதவுகிறார். பரிசுத்த ஆவியினால் நீங்கள் நிறைந்து, ஜெயமுள்ள வாழ்க்கை வாழுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து எனக்கு பரிசுத்த ஆவியைத் தந்து, என் பெலவீன நேரத்தில் எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.