← செய்திகளுக்குத் திரும்பு
தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப்...

“வியாழன், 14 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும். சங்கீதம் 119:58 அன்பு தேவ பிள்ளையே, தேவனை எப்படித் தேடுவது என்று நீங்கள் எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? பலர் இதை வெறும் சடங்காகப் பார்க்கக்கூடும், ஆனால் உண்மையில், இது அன்புடனும், உரிமையுடனும் அவருடன் மூழ்க வேண்டிய தனிப்பட்ட நேரமாகும். தேவன் தமது பிள்ளைகளுடன் தனிப்பட்ட நெருக்கமான உறவை கொண்டிருக்க விரும்புகிறார். வெறும் பெயருக்காக மதத்தின் கடமைகளைச் செய்யும், குருட்டுத்தனமான மதவெறிகொண்ட சீஷர்களைக் கொண்டிருப்பதில் அவருக்கு விருப்பமில்லை. தேவன் உங்களுடன் அர்த்தமுள்ளதும், நினைவில் நிற்பதுமான உறவை ஏற்படுத்த விரும்புகிறார். முழு மனதுடன் அவரைத் தேடும்போது அவருடன் அப்படிப்பட்ட உறவைப் பெறுவது சாத்தியமாகும். நீங்கள் தினமும் தேவனுடன் செலவிடும் நேரம் வெறும் மதச் சடங்குகளுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் தினமும் ஆண்டவருடன் செலவிடும் நேரம் அவருடன் இன்னும் ஆழமான உறவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாகும். அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும், ஜெபிப்பதன் மூலமும், அவருடைய வாக்குத்தத்தங்களைத் தியானிப்பதன் மூலமும், உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், அவரிடம் உங்கள் சந்தேகங்களைக் கேட்பதன் மூலமும் நீங்கள் அவருடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளலாம். இந்த வாழ்நாள் பயணத்தில் அவரைப் பற்றிய அறிவில் வளர வேண்டும். தேவனுடன் அர்த்தமுள்ளதும், நினைவில் நிற்கக்கூடியதுமான உறவை உருவாக்க, நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுவதற்கும், உம்முடன் ஐக்கியத்தை அனுபவிப்பதற்கும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 14 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும். சங்கீதம் 119:58 அன்பு தேவ பிள்ளையே, தேவனை எப்படித் தேடுவது என்று நீங்கள் எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? பலர் இதை வெறும் சடங்காகப் பார்க்கக்கூடும், ஆனால் உண்மையில், இது அன்புடனும், உரிமையுடனும் அவருடன் மூழ்க வேண்டிய தனிப்பட்ட நேரமாகும். தேவன் தமது பிள்ளைகளுடன் தனிப்பட்ட நெருக்கமான உறவை கொண்டிருக்க விரும்புகிறார். வெறும் பெயருக்காக மதத்தின் கடமைகளைச் செய்யும், குருட்டுத்தனமான மதவெறிகொண்ட சீஷர்களைக் கொண்டிருப்பதில் அவருக்கு விருப்பமில்லை. தேவன் உங்களுடன் அர்த்தமுள்ளதும், நினைவில் நிற்பதுமான உறவை ஏற்படுத்த விரும்புகிறார். முழு மனதுடன் அவரைத் தேடும்போது அவருடன் அப்படிப்பட்ட உறவைப் பெறுவது சாத்தியமாகும். நீங்கள் தினமும் தேவனுடன் செலவிடும் நேரம் வெறும் மதச் சடங்குகளுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் தினமும் ஆண்டவருடன் செலவிடும் நேரம் அவருடன் இன்னும் ஆழமான உறவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாகும். அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும், ஜெபிப்பதன் மூலமும், அவருடைய வாக்குத்தத்தங்களைத் தியானிப்பதன் மூலமும், உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், அவரிடம் உங்கள் சந்தேகங்களைக் கேட்பதன் மூலமும் நீங்கள் அவருடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளலாம். இந்த வாழ்நாள் பயணத்தில் அவரைப் பற்றிய அறிவில் வளர வேண்டும். தேவனுடன் அர்த்தமுள்ளதும், நினைவில் நிற்கக்கூடியதுமான உறவை உருவாக்க, நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுவதற்கும், உம்முடன் ஐக்கியத்தை அனுபவிப்பதற்கும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.