வியாழன், 7 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். 2 கொரிந்தியர் 8:2 மக்கெதோனியச் சபைகளின் தாராள மனப்பான்மைக்கு அப்போஸ்தலன் பவுல் சான்றளிக்கிறார். அவர்கள், தங்கள் தாழ்த்தப்பட்ட நிலையிலும் தேவைப்படும் மற்ற விசுவாசிகளுக்கு உதவுவதற்கு மனப்பூர்வமாய்ப் பங்களிக்க வியக்கத்தக்க விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள். தாராளமாகக் கொடுப்பதைத் தேவன் கனப்படுத்துகிறார்.எல்லா ஜனங்களுக்கும் ஒவ்வொருவிதமான தேவைகள் இருக்கும். தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை உங்களையும் என்னையும் மீட்பதற்காய்ப் பலியிட்டுத் தமது உதாரகுணத்தைக் காட்டினார். # நீங்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் வேளையில், உங்கள் தாராள மனப்பான்மையைப் பரிசோதித்துப் பாருங்கள்.# பிறருக்குக் கொடுக்கும்போது கஞ்சம் பிடிக்கிறீர்களா?# வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதே அதிக பாக்கியம் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. # மக்கெதோனியர் ஆரம்பத்தில் தங்களைத் தேவனுக்கு ஒப்புவித்தனர்.# பின்னர், இரங்கிப் பிறர்க்குப் பொருட்கொடுத்து உதவ ஆரம்பித்தனர்.# தேவையுள்ளோரை அடையாளம் காண உங்களைச் சுற்றிப் பாருங்கள்.# தேவையுள்ள ஒருவர்க்கு உதவ உங்கள் நேரத்தையும் பணத்தையும் கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் ஈந்திடுங்கள்.# நம்பிக்கை தேவைப்படுவோர்க்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் வகையில் ஊக்கமளிக்கும் குறிப்புகளை அனுப்பச் சிறிது நேரம் செலவிடுங்கள்.# தேவைப்படும் நபர்களுடன் உங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். # இயேசுவின் நாமத்தில், கொடுங்கள், கொடுங்கள், கொடுத்துக்கொண்டேயிருங்கள்.# நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் ஊக்குவிக்கும் செயல்களினால் உங்கள் அன்பும் தியாகமும் வெளிப்படட்டும்.# உங்கள் வாழ்க்கை தேவனின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாய் அமையட்டும்.. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கஞ்சத்தனத்தைப் மேற்கொண்டு, என் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் தாராளமாய் இருக்கவும் எனக்கு உதவும். ஆமென்
அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய...
“கள். 2 கொரிந்தியர் 8:2 மக்கெதோனியச் சபைகளின் தாராள மனப்பான்மைக்கு அப்போஸ்தலன் பவுல் சான்றளிக்கிறார். அவர்கள், தங்கள் தாழ்த்தப்பட்ட நிலையிலும் தேவைப்படும் மற்ற விசுவாசிகளுக்கு உதவுவதற்கு மனப்பூர்வமாய்ப் பங்களிக்க வியக்கத்தக்க விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள். தாராளமாகக் கொடுப்பதைத் தேவன் கனப்படுத்துகிறார்.எல்லா ஜனங்களுக்கும் ஒவ்வொருவிதமான தேவைகள் இருக்கும். தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை உங்களையும் என்னையும் மீட்பதற்காய்ப் பலியிட்டுத் தமது உதாரகுணத்தைக் காட்டினார். # நீங்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் வேளையில், உங்கள் தாராள மனப்பான்மையைப் பரிசோதித்துப் பாருங்கள்.# பிறருக்குக் கொடுக்கும்போது கஞ்சம் பிடிக்கிறீர்களா?# வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதே அதிக பாக்கியம் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. # மக்கெதோனியர் ஆரம்பத்தில் தங்களைத் தேவனுக்கு ஒப்புவித்தனர்.# பின்னர், இரங்கிப் பிறர்க்குப் பொருட்கொடுத்து உதவ ஆரம்பித்தனர்.# தேவையுள்ளோரை அடையாளம் காண உங்களைச் சுற்றிப் பாருங்கள்.# தேவையுள்ள ஒருவர்க்கு உதவ உங்கள் நேரத்தையும் பணத்தையும் கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் ஈந்திடுங்கள்.# நம்பிக்கை தேவைப்படுவோர்க்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் வகையில் ஊக்கமளிக்கும் குறிப்புகளை அனுப்பச் சிறிது நேரம் செலவிடுங்கள்.# தேவைப்படும் நபர்களுடன் உங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். # இயேசுவின் நாமத்தில், கொடுங்கள், கொடுங்கள், கொடுத்துக்கொண்டேயிருங்கள்.# நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் ஊக்குவிக்கும் செயல்களினால் உங்கள் அன்பும் தியாகமும் வெளிப்படட்டும்.# உங்கள் வாழ்க்கை தேவனின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாய் அமையட்டும்.. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கஞ்சத்தனத்தைப் மேற்கொண்டு, என் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் தாராளமாய் இருக்கவும் எனக்கு உதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

