ஞாயிறு, 28 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார். உபாகமம் 2:7 - இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபோது பல துன்பங்களைச் சகிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், தேவன் அவர்களைப் பாதுகாத்து, அவர்களுடைய தேவைகளை சந்தித்து வந்தார். - உங்கள் வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாகப் பிரச்சனை வருவது போல் ஒரு சவாலான கட்டத்தை நீங்கள் கடந்துகொண்டிருக்கலாம்.- இந்த சூழ்நிலைகள், நீங்கள் உண்மையிலேயே தேவனின் விருப்பத்தைத்தான் பின்பற்றுகிறீர்களா அல்லது இந்த நெருக்கடியை எப்படிக் கடப்பது போன்ற கேள்விகளை உங்களுக்குள் எழுப்பலாம் .- ஆனாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.- இந்தப் பாதை கடினமாகவும் விரும்பத்தகாததாகவும் இருந்தாலும், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை.- பல சமயங்களில், நம்மைச் சுத்திகரிக்கவும், செம்மைப்படுத்தவும், வனாந்தர அனுபவங்களைக் கடந்து செல்லக் கர்த்தர் அனுமதிக்கிறார்.- என்றாலும், இந்தப் பயணத்தைத் தொடர அவர் உங்களுக்குப் பலத்தைத் தந்து இறுதியில் உங்களை ஆசீர்வதிப்பார். தேவன் மீது நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள். - நீங்கள் அனுபவித்த அனைத்தையும், மேலும் உங்கள் தற்போதைய சவால்களையும் அவர் அறிந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- அவர் உங்களைக் கவனித்து, உங்களைப் பாதுகாத்து பராமரித்து வருகிறார்.- எனவே, மகிழ்ச்சியாய் இருங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உமது பலத்தைத் தந்து, இந்த வனாந்தரத்தைக் கடக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீங்கள் நடந்துவருகிறதை அறிவார்.
“மம் 2:7 - இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபோது பல துன்பங்களைச் சகிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், தேவன் அவர்களைப் பாதுகாத்து, அவர்களுடைய தேவைகளை சந்தித்து வந்தார். - உங்கள் வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாகப் பிரச்சனை வருவது போல் ஒரு சவாலான கட்டத்தை நீங்கள் கடந்துகொண்டிருக்கலாம்.- இந்த சூழ்நிலைகள், நீங்கள் உண்மையிலேயே தேவனின் விருப்பத்தைத்தான் பின்பற்றுகிறீர்களா அல்லது இந்த நெருக்கடியை எப்படிக் கடப்பது போன்ற கேள்விகளை உங்களுக்குள் எழுப்பலாம் .- ஆனாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.- இந்தப் பாதை கடினமாகவும் விரும்பத்தகாததாகவும் இருந்தாலும், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை.- பல சமயங்களில், நம்மைச் சுத்திகரிக்கவும், செம்மைப்படுத்தவும், வனாந்தர அனுபவங்களைக் கடந்து செல்லக் கர்த்தர் அனுமதிக்கிறார்.- என்றாலும், இந்தப் பயணத்தைத் தொடர அவர் உங்களுக்குப் பலத்தைத் தந்து இறுதியில் உங்களை ஆசீர்வதிப்பார். தேவன் மீது நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள். - நீங்கள் அனுபவித்த அனைத்தையும், மேலும் உங்கள் தற்போதைய சவால்களையும் அவர் அறிந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- அவர் உங்களைக் கவனித்து, உங்களைப் பாதுகாத்து பராமரித்து வருகிறார்.- எனவே, மகிழ்ச்சியாய் இருங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உமது பலத்தைத் தந்து, இந்த வனாந்தரத்தைக் கடக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

